traffic analytics

திங்கள், 4 மே, 2009

ZOOZOOS ..........


உண்மையில் கார்டூன் animated அல்லாத ஒரு விஷயம்.இந்தியாவில் அணைவரின் கவனத்தையும் ஈர்த்த vodafone விளம்பரத்தில் வரும் பொம்மைகளுக்குதான் இந்த பெயர்.உண்மையில் அவை அனைத்தும் மனிதர்கள்தான்.
ஐபிஎல் க்கு இடையில், எவ்வளவு எரிச்சலான நேரத்தில் இந்த் விளம்பரம் வந்தாலும் சந்தோஷத்தைக் கொடுப்பதில் இவை தவறவில்லை.
மொத்தம் உள்ள 30 விளம்பரங்களில் 15 போடப்பட்டதாகவும், மீதமுள்ளவை இன்னும் உள்ள ஐ.பி.எல்.போட்டிகளின் போது வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதை தயாரித்தது ogivy அண்ட் mather (Q&M)இந்தியா நிறுவனம் ஆகும்.கடந்த வாரத்தில் மட்டும் 15,000 பேர் you tube-ல் பார்த்ததாக சொல்கிறார்கள்.
மண் மோகன்,அத்வானிக்கு இணையாக zoozoo-வும் பிரபலமடைந்து விட்டது.
ஒரு நாளுக்கு குறைந்தது 300 நிமிடங்கள் விளம்பரம் வருகின்றது.கடைசியாக வரும் விளம்பரத்திற்கு எதிர்ப் பார்ப்பை அதிகப் படுத்துவதுதான் இதன் நோக்கமே.
ஆறு மாதமாக யோசித்து ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பும் நடந்து முடிந்து இருக்கிறது.
ஒவ்வொரு விளம்பரமும் 15 முதல 20 விநாடிகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது.
நடிப்பவர்கள் அனைவரும் உள்ளூர் நடிகர்கள்.மிகப் பெரிய முட்டை வடிவிலான தலைக் கவசம்,உடைகள்,பொதுவாகவே கண்கள் தெரிய வாய்ப்பு இல்லாமலே நடிக்க வேண்டி உள்ளது.மூச்சு விடுவதும் சிரமமாக, அவ்வப்போது தலைக் கவசத்தை கழற்றி மூச்சு விட்டு.....அப்பா...!
முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனிமேஷன் பயன்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகள் பயன் படுத்தப் படவில்லை.
காலங்களைக் கடந்து நிற்கும் சில விளம்பரப் அடங்களில் zoozoo வுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.

4 கருத்துகள்:

டிவிஎஸ்50 சொன்னது…

இவை என்னை மிகவும் கவர்ந்து விட்டன. இவை குறித்து நான் எழுதிய இடுகை http://tvs50.blogspot.com/2009/04/vodofone-zoozoo-ad-ipl.html

Unknown சொன்னது…

vodafone விளம்பரங்கள் எப்பொழுதுமே கலக்கல் தான். முன்பு நாய்க்குட்டி & சிறுமி. இப்பொழுது பொம்மை மனிதர்கள். ஒவ்வொரு விளம்பரமும் சிரிப்பை வரவழைக்க தவறுவதே இல்லை. அதிலும் IPL & dating விளம்பரங்கள் சூஊஊஊஊஊப்பர்

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//உண்மையில் அவை அனைத்தும் மனிதர்கள்தான்.//
என்னது மனிதர்களா?? வாவ்.. நன்கு உழைத்திருக்கிறார்கள். குட். நீங்கள் சொன்னதுபோல், இந்த விளம்பரங்களைப் பார்க்கும்போது, தானாக சிரிப்பு வந்து விடுகிறது :-)

Jayakumar Vellaiyan சொன்னது…

அவர்கள் மனிதர்களா??
ஆச்சர்யம்...
இனி மீண்டும் அந்த விளம்பரங்கள் பார்க்கும்போது சுவாரஸ்யம் அதிகமாய் இருக்கும்!
நல்ல தகவல்!