traffic analytics

வியாழன், 30 ஏப்ரல், 2009

கபீர் தாசர்!


இந்துக்களின் புனித நகரான வாராணாசியில் வாழ்ந்தவர் இவர்.ஆனால் பிராமணர் அல்லாத பிரிவைச் சேர்ந்தவர்.அவர்கள் நாலாவது வர்ணமாகிய சூத்திரர்கள். எனவே தீண்டத் தகாதவர்.பிறப்பால் அவரின் மதம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.ஆம் அவர் முறை தவறி பிறந்த குழந்தை .

முறைகேடாக பிறந்த குழந்தை கிடையாது.முறை கேடான பெற்றோர்தான் உண்டு.கங்கைக் கரையில் விட்டு சென்ற அக்குழந்தை ,மிகச் சிறந்த குரு ராமனந்தரின் கையில் கிடைத்தது.அதி காலையில் குளிக்கச் சென்ற குருவின் பாதத்தை குழந்தையின் கைகள் பற்றிக் கொள்ள , குழந்தையை அள்ளிக் கொண்டு ஆசிரமம் சென்றார்.

அங்கு அவருக்கு ஆயிரக் கணக்கான சீடர்கள்.குழந்தையை எங்காவது அனாதை இல்லத்தில் சேருங்கள் அல்லது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என பெரும் பிரச்சனை. ஆனால் ராமனந்தரோ "என் பாதத்தை பற்றி சரணடைந்த குழந்தையை
மறுத்து உதறவே முடியாது"என மறுத்து விட்டார்.

பலமான வாக்கு வாதம்.குழந்தையின் கையில் கபீர் என எழுதி இருந்தது.அது ஒரு இஸ்லாமிய பெயர்.கடவுளின் நூறு நாமங்களில் ஒன்றுதான் அது.ஆனால் தொண்ணுற்று ஒன்பது நாமங்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும்.அந்தக் கடைசி நாமத்தை உச்சரிக்கும் தகுதி நமக்கு இல்லாமையால் அந்த நாமம் மட்டும் விடு பட்டிருக்கும்.அக் குழந்தை தன் பாதத்தைப் பிடித்ததால் அதைத் தனது சீடனாகவே நினைக்க ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் தன்னையும் விட சிறந்த குருவாக ஆக குழந்தை வரும் என அவர் நம்பினார்.ஆனால் முறை தவறி,உயர் ஜாதி அல்லாமல் பிறந்த அவரிடம் யாரும் சென்று பேசவோ, கேள்வி கேட்கவோ விரும்பவில்லை. ஆனால் மற்றவர்கள் அவரைப் பற்றி பேசும் போது அதை குறித்துக் கேட்டுக் கொண்டனர்.

பக்தி இயக்கம் ஆரம்பித்து தனது கருத்துக்களை பரப்பலானர்.இரு மதங்களின் கலவையாகவுன் ,கீதையின் சாராம்சமாகவும் இருந்தது அவரின் பேச்சுகள்.ஒவ்வொரு வாழ்க்கையும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டும் கலந்தது என்கிற போதனையை அடிப்படையாக கொண்டார்.

அவரின் கவித்துவம் பலராலும் இன்றுவரை வியந்து போற்றும் விஷயமாக இருக்கிறது.எளிமையான ஹிந்தியில் உயரிய கருத்துக்கள்.

ஒ சீடனே, எங்கே என்னை தேடுகிறாய்?
பார்!அதை எல்லாம் தாண்டி நான் இருக்கிறேன்.


நான் கோவிலிலும் இல்லை!மசூதியிலும் இல்லை!
காபாவிலும் இல்லை! கைலஷிலும் இல்லை!
கொண்டாட்டங்களிலும் இல்லை!யோகாவிலும் இல்லை!
உண்மையைத் தேடும் கலையை கொண்டவர்களே
கண நேரத்தில் காணலாம் என்னை!
ஒ....சாதுவே !
கடவுள் ஒவ்வொரு சுவாசத்தின் சுவாசத்திலும் இருக்கிறான்!
(மொழி பெயர்ப்பில் பொருள் மாறவில்லை.லயம் குறைந்தால் மன்னிக்கவும்)

எளிமையாக விளக்கும் அவரின் கவிதைகள் இன்றுவரை மிகப் பிரபலம்.பலர் ராம நாமத்தை அடிக்கடி உச்சரிப்பார்கள்.பலர் இஸ்லாமிய கடவுளின் நாமத்தை உச்சரிப்பார்கள்.எல்லாமே உலகைப் படைத்தக் கடவுளின் ஒரே நாமம்தான்.எனப் பொருள் படும் "கோயி போலே ராம் ராம் கோயி........"எனும் பாடல்.

ஞானிகளைப் பற்றி சிறிய இடத்தில் முழுவதும் எழுத இயலாது.ஆனாலும் சிறு தகவல் ,அறிந்து கொள்வது நல்லது தானே...!



செவ்வாய், 28 ஏப்ரல், 2009

Shivajiraje Bhosale boltey..திரை விமரிசனம்.





இதுதான் சமுதாய நோக்கு.....!

வேற்று மாநிலத்தவரை உள்ளே விடக்கூடாது என்கிற வலுவான கோஷமும் , அதை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளும் நிறைந்த மகாராஷ்ட்ராவில் மாராட்டியர்களுக்கான ஒரு திரைப்பபடம்.யாரையும் வசை பாடவும் இல்லை.எதிர்க்கவும் இல்லை.

இதுவரை மராட்டிய திரை வரலாற்றில் இல்லாத அளவில் ,திரை இடப்பட்ட ஒரு வாரத்திற்குள் 15 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளது.ஆடம்பர கண்ணாடி செட்டிங்க்ஸ், ரஹ்மான் மியூசிக்,உயர் ரக தொழில் நுட்ப ஆடம்பரம் ஒப்பனையில் புரட்சி இத்யாதிகள் இல்லாமல் ...........யாரையும் வசை பாடாமல்,கண் சிவக்க வசனம் பேசாமல்,மரத்தை சுற்றாமல்.....தன்னுடைய ,தன் குலத்தின் பெருமையைப் பற்றி மட்டுமே பேசும் ஒரு படம்.

தின்கர் மாருதி அவர்களின் (shivajiraje bhosale boltey) பேசுவது சிவாஜி போஸ்லே ...என்கிறபடம். பிற மாநிலத்தில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்களைப் பார்த்து தாழ்வு மனப் பன்மையில் பொறுமும் ஒரு சாதாரண குடிமகனை ஆற்றுப் படுத்துவதாக படம். காந்தியின் குரல் முன்னா பாய் படத்தில் வருவது போல் , சக்கரவர்த்தி சிவாஜியின் மூலமாக , மகாராஷ்டிர மக்களின் பெருமைகளை உணர வைப்பதுதான் கதை.

பால கங்காதர திலகர் முதல் அம்பேத்கர் ,வீர சாவர்க்கர் என தங்களின் பெறுமைகளை சொல்லி அதில் வெற்றியும் பெறுகிறது.காரணமே இல்லாமல் தோன்றும் தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக இப்படம் அமைகிறது.குஜராத்திகள்,உடுப்பிகள்(தென் இந்தியர்கள்) சிக்குகள்,உ.பி.மக்கள் என அணைவர் மேலும் தேவையில்லாத வெறுப்பில் இருப்பவர்களுக்கு...

"உங்கள் தோல்விகளுக்கு பிறரைக் காரணம் சொல்லாதீர்கள் "
-என உணர்த்தியதே படத்தின் வெற்றியாக கொள்ளப்படுகின்றது.

இந்தப் படத்தைப் பார்த்து இருவர் மனம் மாறினாலும் அதுவே முழு வெற்றி என தயாரிப்பாளர் திரு .மாஞ்சரேக்கர். கதாநாயகன் தின்கர் ஆக சச்சின் கேடேகரும் , சிவாஜியாக மஞ்சரேக்கரும் நடித்திருக்கிறார்கள்.

உயரிய எண்ணங்களுடன் மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்களுக்காக எடுக்கப் பட்ட படமானாலும் எல்லா தரப்பினரும் பார்க்க வேண்டிய படமாகத்தான் இருக்கிறது.இன துவேஷங்களைப் போதிக்காத நல்ல படங்களை எந்த மொழியில் இருந்தாலும் பார்க்கலாமே!

திங்கள், 27 ஏப்ரல், 2009

தேவாவுடன் just relaxe..........!

அரசியல் நிகழ்வுகளால் வெறுப்படைந்து இருப்பவர்களுக்கு, just RELAX.வேறென்ன செய்ய முடியும்?

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

எங்கும் வியாபகமாய் இருப்பவன்....1


யா ஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் !
உபௌ தொ விஜாநீதோ நாயம் ஹந்தி ஹன்யதே !!
19
......பகவத் கீதை

பொருள் :ஆத்மாவைக் கொலையாளி என்றும், கொலையுண்பான் என்றும் எண்ணும் இருவரும் அறியாதார். ஆன்மா கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை.

விளக்கம் : செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்து போனால் "நான் தொலைந்தேன்"என்கிறான்.செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடையது ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம்.தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆகி விடுகின்றது.தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம்.மாறுபடும் தன்மையது தேகம்.மாறாப் பெரு நிலையில் வீற்றிருப்பது ஆத்மா சைதன்யம்.தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லயோ, அப்படி ஆக்கை அழியும் போது ஆத்மாவும் அழிவதில்லை.

சனி, 25 ஏப்ரல், 2009

சாத்தானின் வேதம்.................1


ஒரு இடுகையைப் படிக்க நேர்ந்தது.அதற்கு பின்னுட்டம் எழுதுவதைவிட பதில் சொல்வதுதான் மேல். எனக்கு பிடிக்காத ஒன்றைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுத உரிமை உள்ள போது, பிடித்த ஒன்றைப் பற்றியும் பேச உரிமை உண்டு தானே?

ஒரு விஷையம் அதிகம் பேரால் விரும்பப்படுகின்றது....எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அவர்களில் 0.01%தான என்றால் விரும்பப் படுகிற விஷயம் சரியானதா? அல்லது எதிர்ப்பவர்களின் நிலை சரியானதா?வாக்களிப்பில் முதல் சுற்றிலேயே வெளியேறும் நிலை.....பாவம்...!

கோடிக்கனக்கான முட்டாள்கள்...அப்புறம் எதிர்த்தால் மட்டும் புத்திசாலித்தனம் ஆகி விடுமா? கிரிக்கெட் பற்றி நண்பருக்கு அவ்வளவு கோபம் ஏன் என தெரியவில்லை. விளையாட்டு என்பதே விளையாட்டு தனமானதுதான்.ஆராயக் கூடாது ....அனுபவிக்கனும்......!இதில் ஹாக்கி என்ன? புட் பால் என்ன?

அது என்ன இரண்டு பேர் மட்டும் நின்று டொக்...டொக் என தட்டிக்கொண்டு...?எனக் கேடபவர்களுக்கு. சரி அப்படியானால் ஒரு சாதரண பந்தை அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசிக்கு வேக வேகமாக ஓடி ஒரு வலைக்குள் பந்தை போடுவது ......ரொம்ப லாஜிக் இல்ல?

படித்தவர்கள் எல்லாமே இதற்க்கு அடிமை என்கிறார்...அப்படியானால் படித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள்.... எதிர்த்தால் மட்டும் புத்திசாலிகளா?கிரிக்கெட்டைத் தெரிந்தவர்கள் யாரும் பிற விளையாட்டுகளைப் பற்றி இவ்வாறு விமரிசித்ததாக தெரியவில்லை.

அவரவர்க்கு பிடித்ததை ரசிப்பதில் அடுத்தவர் தடை போடவோ , குறை சொல்லவோ உரிமை இல்லை.

தேசப் பற்று இல்லாதவர்கள்....!தேசப்பற்றை ...சொல்லப் போனால் சாதாரண குடிமகனுக்கும் தற்சமயம் உருவாக்கிய பெறுமை கண்டிப்பாக கிரிக்கெட்டுக்கு உண்டு.கார்கிலுக்கு எவ்வளவு ரத்தம் கொதித்து.அதில் எங்குமே விரிசல் இல்லை.இது என் நாடு.அது கிரிக்கெட் ஆனாலும் ,போர் ஆனாலும் சரி.சாதாரண சராசரி மனிதனின் தேசப் பற்றை என்றும் , யாரும் சந்தேகிக்க வேண்டாம்.அதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

நேரம் வீணாகிறது......!போன தலை முறையை விட அறிவும், பொறுப்பும்,நாட்டுப்பற்றும் அதிகமாக கொண்ட இத்தலைமுறைக்கு, தன் நேரத்தின் அருமை நன்றாக தெரியும்.தன் தூக்கத்தையும் , ஓய்வையும் ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் அவன் விளையாட்டை ரசிக்கிறானே தவிர யாருடைய நேரத்தையும் அவன் எடுத்துக் கொள்வதில்லை.

விளையாட்டை வைத்து சம்பாரிக்கிரார்கள்.....!அது அவர்களின் திறமை.உங்களுக்கு திறமை இருந்து , உங்களுக்கும் அப்படி வாய்ப்பு வந்தால்....மாட்டேன்...நான் சுய மரியாதை உள்ளவன் என்கின்றீர்களா?
தயவு செய்து தொழிலையும் சுயமரியாதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

இந்தியாவில் பிரச்சினைகள் அதிகம்...அதைத் தீருங்கள்....!நியாயமான ஒன்றுதான்.எங்கள் நாட்டைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லையா?என்ன அக்கறை இல்லை.வெள்ளமோ , இயற்க்கை பேரழிவுகளோ எதுவந்தாலும் யாருடைய உதவியும் வேண்டாம் என சொல்லும் அளவில் வைத்திருப்பது எங்கள் மக்கள்தானே.

சூதாட்டம் .......நாங்கள் ரசிப்பது விளையாட்டை மட்டும்தான்.ஏமாற்ற நினைத்தால் விட்டு எறிய ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டோம்.அதை ஏமாற்ற நினைத்தவர்கள் அறிவர். புல்லுருவிகள் எங்கு இல்லை.பட்ட மரம்தான் கல்லடி படும் .நிறைய அபிமானமும் ரசிகர்களும் இருப்பதால்தான் இந்த பிரச்சனை.அது இல்லாமல் இருந்தால் யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

தேசிய விளையாட்டு...அதற்க்காக என்ன செய்ய முடியும்.மதிக்க மட்டும்தான் முடியும்.பிடித்ததை மட்டுதான் ரசிக்க முடியும்.மிகவும் நினைத்து கவலைப் படும் விஷயமாக எனக்கு இது தோன்ற வில்லை.ரசிப்பவனுக்கு என்ன கிடைக்கும்?பணமா?புகழா?ஒன்றும் இல்லை.பின் ஏன் பார்க்க வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு, மன சந்தோசம்,என் நாடு ஜெயிக்கிறது,என் அபிமான வீரன் ஜெயிக்கிறான் என்கின்ற சந்தோசத்தை , மனதில் ஏற்படும் பரவசத்தை வேறு யாராலும் கொடுக்க முடியுமா?

போதை போல என்று சொல்லியிருக்கிறார்.அதிகம் பிடிக்கும் எந்த ஒரு விஷயமும் அவரவர்க்கு போதைதான்.நமக்கு பிடித்த நம் தமிழும் கூட நம் போதைதான்.பிடித்த விஷயங்கள் மாறலாம்.அடிப்படை அலகு என்னவோ ஒன்றுதான்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்.அது மனம் சார்ந்த விஷயம்.தனக்கு பிடிக்காவிட்டால் எல்லாம் சரி என்கிற எண்ணம் சரியா?

இனியாவது உங்களுக்கு பிடிக்காத கிரிக்கெட்டைப் பற்றி எழுதாமல் , உங்களுக்கு பிடித்த ஹாக்கி பற்றி எழுதுங்கள்.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

HTTP மற்றும் HTTPS

HTTP மற்றும் https , இரண்டுக்கும் உள்ள பொதுவான வேறுபாடு நமது பாதுகாப்புதான்.

HTTP என்பதன் விளக்கம் ஹைபெர் டெக்ஸ்ட் ட்ரான்ஸ்போர்ட் ப்ரோடோகோல்
என்பதாகும்.

S என்பதுதான் இவற்றில் இருக்கும் ஒரே வேறுபாடு. இதில் S (secure)என்பது நமது பாதுகாப்பைக் குறிப்பதாகும்.

நீங்கள் நுழைந்திருக்கும் இணைய தள முகவரியில் HTTP//என இருந்தால் , சரியான பாதுகாப்பு அங்கு இல்லை என பொருள். நமது அனுமதி இல்லாமல் நமது விவரங்களை பிறரால் கையாள முடியும் என்பது இதன் பொருள். ஒரு வேளை நீங்கள் உங்களின் கிரிடிட் கார்டு போன்றவற்றின் எண்களைக் கொடுத்திருந்தால் அது பாதுகாப்பாக இருக்காது.

எனவே கிரெடிட் கார்ட் போன்றவற்றின் எண்களைப் பதிவு செய்யுமுன் கண்டிப்பாக https இருக்கிறதா என கவனித்து பதிவு செய்யுங்கள்.





வியாழன், 23 ஏப்ரல், 2009

ஆண்களுக்கான அழகு குறிப்பு .................


அழகைப் பராமரிப்பது என்பது நமது நாட்டில் பெண்களுக்கே இப்போதுதான் கைவந்துள்ளது. அழகைப் பராமரிப்பது என்பது எதோ குற்றம போல பார்க்கும் நமது சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள்.

வெயிலிலும் மழையிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.ஆரோக்கியம் + அழகு நிறைவான தன்னம்பிக்கையைத் தரும். அதற்க்காக தினமும் அல்லது வாரம் ஒரு முறை ஒரு அரை மணி நேரம் ஒதுக்கலாமே.

நேரம் கிடைக்கவில்லை.....?அதற்காக சாப்பிடாமல் இருக்கிறோமா?டி.வி.பார்க்காமல் இருக்கிறோமா? இந்த அரை மணி நேரத்தில் கிடைக்கும் தன் நம்பிக்கை யாராலும் கொடுத்துவிட முடியாது.

ஆண்களுக்கான ஒரு நல்ல அழகுச் சாதனம் எண்ணை -- நல்லெண்ணைக் குளியல் மிகச் சிறப்பான ஒரு முறை.இந்த வெயில் காலங்களில் 300 மிலி எண்ணை போதும்.நாமாகவே தலை முதல் பதம் வரைத் தேய்த்து ,குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைத்து சீகக்காய், கடினம் என்றால் மீரா தேய்த்துக் குளித்துப் பாருங்கள். குளிர்ச்சி சேராதவர்கள் அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து சூடாக்கி தேய்க்கலாம்.

நமது நிறம்தான் நமக்கு பிரச்சனையே. ஆனால் பிரச்சனை அதுவல்ல. முக்கியம் தோல்தான்.அதனை பளபளப்பாக (complxion) பார்த்து வந்தாலே போதும். கடுகு எண்ணை மிகச் சிறப்பான வழி முறை.வட இந்தியர்களின் நிறம் அந்த பளபளப்பின் ஆதி ரகசியம் இதுதான்.விலையும் அதிகமில்லை. குளிப்பதற்கு கால் மணிநேரத்தி்ற்கு முன் நன்றாக அழுத்தி தேய்த்தது விட்டு பின் குளித்து பாருங்கள்.

நமது சருமத்தில் இறந்தத செல்கள் மேலும் மேலும் படிவதால் சருமம் கடினமாகி, பொலிவிழந்து போகின்றது. பாத்திரங்களில் அழுக்கு சேர்ந்துகொண்டே இருந்தால்....அதுபோலத்தான் இதுவும்.கடுகு எண்ணை இறந்த செல்களை நீக்கும். போட்டவுடன் எரிச்சலாக இருக்கும்.பயப்பட வேண்டாம்.கண்களை மூடி அமரும் நிலைக்கு தயார் செய்து கொண்டு போடுங்கள்.

அரைக்கை சட்டை போடுபவர்கள் கைகளுக்கும் போடலாம்.வீட்டில் பெண்களிடம் முல்தாநிமிட்டி வாங்கி வைக்கச் சொல்லுங்கள்.எண்ணை சருமமாக இருந்தால் அதனுடன் எலுமிச்சை, தக்காளிச் சாறு, தயிர் போன்றவை சேர்த்து போட்டு 20 நிமிடம் ஊரவையுங்கள். வறண்ட சருமம் ஆனால் பால் , பாலாடை சேருங்கள்.பொதுவாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.ஒன்றும் இல்லையானால் வெறும் முல்தாநிமிட்டியே தண்ணீர் சேர்த்துப் போடலாம்.

முகத்தின் அழுக்குகள் வெளியேறுவது ஓன்று, மற்றும் வெயில் ஆகியவற்றால் வியர்வைத்துவாரங்கள் விரிவடைந்து , அதனுள் கிருமிகள் நுழைய வாய்ப்புள்ளதால் , டோனர் வாங்கி உபயோகியுங்கள்.எல்லா பெரிய மார்க்கெட்டுகளில் கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு பலசரக்கு வாங்கும் பொழுது அது, முல்தானி மிட்டி போன்றவையும் சேர்த்து வங்க சொல்லுங்கள்.

இல்லையானால் பெண்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.ரோஸ் வாட்டர் இந்த வெயில் காலத்தில் கண்டிப்பாக அணைவர் வீட்டில் இருக்க வேண்டிய ஒன்று.

கண்களில் எரிச்சல் , எண்ணைக் குளியல் சிறந்த மருந்து.அதற்கும் கட்டுப்படவில்லையானால் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிட்டு பாருங்கள்.

டை போடுபவர்கள் முடிந்தவரை தரமானதை உபயோகிக்கலாம்.அது விலை அதிகம் என தோன்றினால், நீங்கள் உபயோகிக்கும் டையுடன் ஒரு முட்டையை கலந்து பின் தலையில் தடவுங்கள். கண் எரிச்சல், முடிக்கு தீங்கும் வராது.

நிறம் கூட்டும் என சொல்லும் எந்த க்ரீமையும் நம்பாதீர்கள்.சர்ஜரி தவிர வேறு எதற்கும் நிறத்தை மாற்ற முடியாது.இருக்கும் நிறத்தை சரியாக பராமரித்தாலே அழகு தானே வரும். சுத்தமாக வைத்திருந்தாலே அழகு தானே வரும். இரண்டு நேரம் குளிப்பது இல்லை சுத்தம், எப்படி குளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

நிறைய தண்ணீரும் , பழங்களும் நிறத்தின் மெருகைக் கூட்டும். குளிக்கும் முன் எண்ணை தேய்த்து குளியுங்கள்.குளித்தபின் தேய்த்தால், அந்த எண்ணை பிசுக்கில் தூசுகளும் மாசுகளும் சேர்ந்து பொடுகு ஏற்படும்.பின் முடிக்கு ஏற்படும் கதி அதோ கதிதான்.

முடி உதிர்தல் , முதல் காரணம் பொடுகுதான். டென்சன்,ஷாம்பூக்களை அடிக்கடி மாற்றுவது,தண்ணீர் அடிக்கடி மாறுவதும் காரணம். வெளி ஊர்களுக்கு அடிக்கடி செல்பவர்கள்,குளித்து முடித்து கடைசியில்,மினரல் வாட்டர் இருந்தால் இரண்டு டம்பளர் அளவுக்கு தலையில் விட்டு அலசி பின் உலர்த்துங்கள்.

கொஞ்சம் அதிகம்தான், ஆனாலும் எவ்வளவு தண்ணிக்கு செலவழிக்கிறோம்....தவறாக சொல்லவில்லை என நினைக்கிறேன்.
.........................இன்னும் வரும்.

புதன், 22 ஏப்ரல், 2009

சாய்ந்து கொள்ள தோள்கள் எங்கே...?

கவிதைகளும் ...கட்டுரைகளும்....
கண்ணீர்த் துளிகளும் - உன்
கவலையை மாற்றுமா?-இல்லை
கற்பணையைக் கலைக்குமா?

காட்டு வாழ்க்கையும்
கனக்கின்ற மனமும்
கழிந்து போன உன்
கனவைக் கொடுக்குமா?

கிழிந்த செவ் உடைகளும்-பலர்
கிழித்த உன் மனங்களும்
கனிந்த பலப் பொய்களால்
கனன்று வருமா?

கதவடைப்புகளும்-பழங்
கர்ணக் கதைகளும்-பெரும்
கர்வப் பேச்சுகளும்-உன்
கவலையைத் தீர்க்குமா?

காயங்களுடன் -மன
மாயங்களுடன்-சுமை
பாரங்களுடன் - நடை
தளர்வுகளுடன்....


நாடும் மறந்து
நாட்டாரையும் இழந்து
நட்டாற்றில் இறங்கினாயே
நல்லவற்றை இழந்தாயே..!

தலை முறைகள் தளர்ந்து போய்
தவறுக்கு காரணம் கேட்டால்
தண்டிக்கும் காலனை காரணம் சொல்வாயா?
தரம் தாழ்ந்த காலங்களைக் கண்டு சொல்வாயா...?

தொலைத்த இளமையும்...தொலைந்த வாழ்க்கையும்
தொடரும் துன்பங்களும்....தூரத்தில் கானல்களும்
தொங்கும் சொர்கங்களும்....தொலைக்க முடியாமல்
தவித்து போனாயே....தமிழா ......தகித்து போனாயே...!

மயக்கம் கொண்ட நடை ....
மருட்சி மேவும் பார்வை ....
மீட்சி தேடும் கனவை....
மிரட்டுகிறதே போர் ஒலியே ..!

கூட்டமாய் உன்னைக்
கண்கொண்டு பார்க்கும் போது
கள்ள இதயம் கூட கணிந்து போகுமே
கல்லான உள்ளம் கூட கசிந்து ஓடுமே...!

வையம் முழுமையும்
வைராக்கிய வாழ்க்கையில்
வாழும் உன் பிள்ளைகளின் -வேதனை.....!
முழுவதும் உணர்ந்தேன் ... முதன் முதலாய் உணர்ந்தேன்.

தவறு யார் செய்திருந்தாலும்
தவறுதலாய் எங்கே நடந்திருந்தாலும் ...
தண்டிக்கப் பட்டது மானிடம்தானே..!
துண்டிக்கப் படுவதும் உன் உடல்தானே...!

கையறு நிலை பாடல் - பாடி
கையாலாக நிலையில் -வாடி
கையேந்தி நிற்க்கிறேன்- நாடி
கைலாய நாதனை -தேடி !

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

காதல்....

பல கோடி வருடங்களாக மாறமல் , கவர்ச்சியாய் யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்கும் தலைப்புகளில் ஒன்று கிடைத்தது அருமைதான்.ஷேக்ஸபியர் முதல் அனைவரும் ரசித்த காதல் ஆண்டோனி க்ளியோபட்ரா காதல்.




சமீபத்தில் அவர்கள் இருவரின் பதப்படுத்தப் பட்ட உடல்களைக் கண்டு பிடித்து விட்டதாக பிரபல தொல்lபொருள் ஆய்வாளர் ஸகி ஹவாஸ் அறிவித்துள்ளார்.

அலேக்சன்றியாவில் சுமார் சுமார் 50 . கி.மி. தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 22 நாணயங்களும் 10 பதப் படுத்தப் பட்ட உடல்களும் உடைந்த இரண்டு முக மூடிகளும் கண்டு பிடிக்கப் பட்டு , உலகின் பார்வைக்கு கொண்டு வரப் பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளாக தேடிய ஒரு விஷயம் வெளிவந்ததில் தொல் பொருள் ஆய்வாளர்களும் பழமை விரும்பிகளும் அவர்களின் வாழ்வைத் தெரிந்த எல்லோருக்கும் ஒரு நெகிழ்வான விஷயம்தான்.

கி.மு.51 ஆம் ஆண்டில் , எகிப்தில் ஆண்ட 12-ம தாலமி இறந்ததால் அவன் மகன் 13 -ம தாலமி அரசேரினான். தனது 18 வயது அக்காவுடன் சேர்ந்து ஆட்சியை கவனித்தவன், அவளை திருமணமும் செய்து கொண்டான். இது அவர்களின் பாரம்பரிய முறையாக இருந்தது.

மிகச் சிறிய வயதில் மத்திய தரைக் கடல் பகுதியில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டினாள். ரோமுடனான அவளின் தொடர்பே அவளின் சாம்ராஜ்யத்தின் முடிவை நிர்னயித்தது.

கி.மு.48 - 44 க்கு இடைப்பட்ட காலத்தில் ஜுலியஸ் செசாரின் படைகள் எகிப்தை முற்றுகை இட்டு தாலமி 13 -ஐ வென்றபின், இளம் அரசிக்கு தனது மனைவி அந்தஸ்த்தை வழங்கினார். 48- கடைசியில் செசார் ரோமை விட்டு சென்றதும் 47 -ல் அவரின் மகனை பெற்றெடுத்தாள்.46-ல் சிசர் அவரை ரோமுக்கு அழைக்க, மகனுடன் ரோம் சென்றாள். அங்கு நிம்மதி அவளுக்கு 44 வரைதான் கிடைத்தது.

சிசரின் படு கொலைக்கு பின் மீண்டும் எகிப்து திரும்பினாள்.41-ல் ரோம் படைகளை வழி நடத்தி ஆண்டோனி எகிப்தை நோக்கி கிழக்கு முகமாக ,சைட்ஸ் நதிக் கரையில் டாரசில் முகாமிட்டு இருந்தான். க்ளியோபற்றா -வை சந்திக்க வருமாறு அழைக்க, தெண்டனிடும் நோக்கில்லாமல் , தேவதை போல் அவனை காண சென்றாள்.





அதன் பின் அன்டோனியின் நிலை எல்லோரும் அறிந்ததுதான். வசந்த காலத்தில் போருக்கு வந்தவன் , அரசியின் அழைப்பிற்கு இணங்க அலெக்ஸான்ட்ரியா வந்து குளிர் காலம் வரையில் அவளின் விருந்தினராக , காதலனாக தங்கியிருந்து பின் நாடு திரும்பினான்.

காதலின் பரிசாக இரட்டைக் குழந்தைகளை பெற்றாள்.37-ல் சிரியாவில் அன்டோனி யை திருமணம் செய்து கொண்டாள்.மனைவிக்கு பரிசாக மத்திய கிழக்கின் பெரும் பகுதியை அவளுக்கு அளித்தான்.இருவரும் இணைந்து பொதுவான எதிரியான ஆக்டேவியனை எதிர் கொண்டார்கள்.

பல கிழக்கு நாடுகளில் அவர்கள் இருவரும் தெய்வீகமாக தோன்றலானர்கள். க்ரீக்கிர்க்கு டைநோஸஸ் மற்றும் அப்ரோடைட் ஆகவும் எகிப்தில் ஒரிசிஸ் மற்றும் ஐசிஸ் ஆகவும் தெரிந்தனர்.

34-ல் அலெஷந்த்ரியாவைச் சுற்றி இரு அடுக்கு அரசுக்கு போட்டி அதிகமானது.அன்டோனி மற்றும் க்ளியோபாற்ற இவர்களின் ஆட்சி பீடத்திற்கான போட்டி மற்றும் இவர்களின் நான்கு பிள்ளைகளின் அரசுக்கான ஆசை என அவர்களை சுற்றி ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்து இருந்தது.

எதிரிகள் ஒன்று கூட , போர்க்களம் உருவானது.செப்டெம்பர் மாதம் 31 ம தேதி ஆச்டவியனை எதிர்த்து கிளியோபற்ற போராடினாள். இரு தரப்பிலும் பல்லாயிரம் உயிர் இழப்புகள். ஒரு கூடுதல் தகுதியாக 400 பப்பல்கள் இருந்தன.ஆக்டேவியனிடம் 250 கப்பல்கள் என போர் உக்கிரம் அடைந்தது.அவர்களின் எதிரிகளின் கை ஓங்கியது.

அவர்களின் குழந்தைகள் அனைவரும் கொல்லப் பட்டார்கள்.
கடுமையான போராட்டத்தின் பின் அவர்கள் அலெக்ஸான்ட்ரியா வந்தனர். எதிரிகளிடம் சிக்கினால் கிடைக்கும் கொடுமையான , அவமானகரமான நிகழ்வுகளைதவிர்க்க இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள். அன்டோனி தன் வாளாலும் , அவள் தன்னை சிறிய விஷப் பாம்பை விட்டு தானாகவே கடிக்க விட்டும வாழ்வை முடித்துக் கொண்டார்கள்.

அவர்களின் இறுதி நிகழ்வுக்கு முன் அவர்களின் நிலையும் , அவர்களின் நினைவுகளும் ஷேக்ஸ்பியரில் அருமையாக விளக்கப் பட்டுள்ளன. தன்னை மிகவும் அலங்கரித்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக மரணத்தை நோக்கி முன்னேறி... சாவிலும் இணைந்து.... அதுதான் காதல்.

அவர்கள் காதலின் ஆழம் கண்டு அவர்களை ஒன்றாக சமாதியில் வைக்க ஆக்டேவியன் ஒப்புக் கொண்டான். அந்தக் கல்லறைதான் பல நூறு வருடங்களாக தேடப் பட்டு தற்சமயம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது....
விஷேஷமனதுதனே!












திங்கள், 20 ஏப்ரல், 2009

சிறு தீர்வு ....!


மனத்தின் இறுக்கம் வாழ்வை நாசப்படுத்தும் ஒரு நிலை.வெளிவர எவ்வளவோ வழிகள்.இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் --- பொருள் என்னவோ அதுதான். ஆபத்துக்கு பயந்த முன்னேறபாடுதான் இறுக்கம்.(Stress).வரப்போகும் காலத்துக்கோ , ஜன்மத்ததுக்கோ தயாராகிக் கொண்டிருப்பது.

நாளைய பொழுதை எதிர்கொள்ள தைரியம் இல்லை என்றால் இறுக்கம் ஏற்படுகின்றது. இறுக்கம் என்றாலே கடந்த காலத்தை சரியாக வாழவில்லை என்று பொருள்.

கடந்த காலம் சுற்றிப் படர்ந்து நிற்கிறது. வாழ்வில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் வாழ நினைக்காததே இறுக்கம் ஏற்படக் காரணம். மோசமான கடந்த காலம் நிலைத்துப் போய், பயப் படுத்தும் எதிர்காலம் தொலைந்து போய் நடுவில் நிகழ் காலம் நசிந்து போய் விடுகின்றது.

மனதையும் , உடலையும் தளர்வான நிலையில் வைத்திருப்பது இதைத் தொலைப் பதற்கான முதல் நிலை. சோம்பேறித் தனத்திற்கும் , தளர்வுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தளர்வு என்பது நினைவுகள் சுறுசுறுப்பாக , உடல் நிலை ஒத்து வரவிட்டாலும் கூட , மனவலிமையால் செய்து முடிக்கக் கூடிய நிலைதான். ஸ்டேமினா என அழைக்கப் படுவது இந்நிலைதான்.

இன்னிங்ஸ மட்சில் வெயிலில் இரண்டு நாள் நின்று சதம் அடிக்கிறார்களே, நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுகிரார்களே அதுதான்.

இறுக்கத்திற்கு பயந்து ஓடி ஒளிந்தால் அது கூடி விடும். அதைப் பற்றி நினைக்காமலே இருப்பது ஒரு வகை. பிரச்சனை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என இருப்பது!

இன்னொன்று மாற்று வழியில் ஓடுவது. போதையில் மிதந்து பிரச்சனையில் இருந்து தப்பிப்பது. இரண்டுமே தற்காலிக அல்லது இறுக்கத்தைக் கூட்டும் நிகழ்வுகள்தான்.

கொஞ்சம் தனியாக அமர்ந்து இறுக்கத்தின் ஆணி வேரை கண்டு பிடித்தால் அதன் இறுதித் தீர்ப்பை உடனே எழுதி விடலாம். பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்வு கண்டிப்பாக இருக்கும். ஆனால் தீர்வில் இரண்டு வழி -- ஓன்று எல்லோருக்கும் நன்மை , நமக்கும் நல்ல பெயரைக் கொடுப்பது. மற்றது நல்ல பெயரையோ அல்லது பொருளையோ கொடுக்கா விட்டாலும் நமக்கு நிம்மதியைக் கொடுப்பது.

இதில் எது முக்கியம் என தேர்வு செய்வதே நம் வேலை. அதற்க்காக இறுக்கம் அடையக் கூடாது....!

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

செம்புலப்பெயல் நீர் போல...

இந்த சங்க இலக்கியப் பாடலை பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் பாடினால்...!

நமது பாடலின் விளக்கம், தலைவனும் தலைவியும் கண்டவுடன் காதல் கொண்டு தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இப்பாடல் உள்ளது.நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிகிலோம்.ஊரையும் தெரியாது. இருவரின் தந்தையர்களைப் பற்றியும் தெரியாது, ஆனாலும் நம் இருவரின் எண்ணங்களும் செம்மண்ணில் தண்ணீர் சேர்வது போல் இணைந்தனவே என பாடல் இருக்கும்.

பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் பாடல் ஒன்று ,"as long as you love me ".இந்த கருத்தை ஒட்டியே இருந்தது.

நீ யாரென்பது பற்றி எனக்கு கவலை இல்லை
எங்கிருந்து வருகிறாய் என தெரியவில்லை ...."as long as you love me "
என வரும் கேட்டுத்தான் பாருங்களேன்.


சனி, 18 ஏப்ரல், 2009

எம்.பி.எ. தேவை ஒரு மாற்றம்!


அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.பி.எ. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வினாத்தாளை ஒரு முறை பார்த்தால் , அவர்களை கேட்கத் தோன்றும் சில வினாக்கள்.

இது இளநிலை கல்வி முடித்த அனைவருக்குமா? அல்லது கணிதம் ஒரு பாடமாக கொண்டு படித்தவர்க்கு மட்டுமா?

பிளஸ் 2 வில் கணக்கு அல்லாத படங்களைப் படித்து விட்டு பின் அது தொடர்பில்லாத படங்களை மூன்று வருடங்கள் பல மாணவர்கள் படிக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு தரக்கூடிய உயர் கல்வியாக எம்.பி.எ. இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கணிதம் என்பதன் தொடர்பு சிறிதும் இல்லாத, நிலையில் , வினாத்தாளின் கடினம் கொஞ்சம் அதிகம்தான். அதைப் படிப்பதற்கு திறமை வேண்டாமா எனக் கேட்பவர்களுக்கு.......

பி.எஸ்.சி மூன்று வருடம் படித்தவனுக்கு எம்.எஸ்.சி...எம்.சி.எ. ...என்று பல வேலை வைப்பு தரக்கூடிய உயர் படிப்புகள். பொறியியல் படித்துவிட்டு , இணைப்பாக மட்டுமே இதை எழுதக் கூடிய மாணவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்பளிக்கக் கூடிய உயர் பட்டப் படிப்புகள் உள்ளன.

ஆனால் கணிதம் பயிலாத மாணவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை எம்.பி.எ. மட்டும்தான். இதையும் கணிதம் ....(உங்களுக்கு சாதரணமாக இருக்கலாம் தேர்வாளர் அவர்களே!) அந்த நிலையில் நின்று பாருங்கள்.

கணிதம் படித்து பலப் பல உயர் கல்வி வாய்ப்பு உள்ள மாணவன் எளிதாக வென்று அதை மேலும் ஒரு தகுதியாக போட்டுக்கொள்வான். ஆனால் அதை மட்டுமே முதல் தகுதியாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவன் தோற்று வெளிஏறுவான்.

நம் பல்கலை கழகத்தின் பெருமையை நிலை நாட்ட, கடினமான தேர்வுத் தாள் தான் சரியான வழி என்பதை விட , பலருக்கு வாழ்வு காட்ட உதவுவது அதனினும் உயந்த வழி இல்லையா?

பொதுவாக கணிதம் என்பதைவிட அவரவர் படித்த துறையில் அந்த மதிப்பெண்ணிற்கு கேள்விகள் கேட்கலாமே. மைனஸ் மதிப்பெண்கள் கண்டிப்பாக மாணவனை (கணிதம் பயிலாத) பாதிக்கும்.

கணிதம் என்பதைப பார்த்து , பயந்து உடனே பயிற்சி மையத்தில் ஒரு வாரத்திற்கு 3000 வீதம் செலுத்தி.... இது உண்மை.இதை நான் விவாதத்திற்காக எழுதவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் யாராவது படித்து, எதாவது ஒரு வழி பிறக்காத என்றுதான்!

உடனே எனக்கு கணக்கு வராது, அதனால்தான் எழுதுகிறேன் என நினைகாதீர்கள்.
பல வருடங்களுக்கு முன்பே இதை எல்லாம் தாண்டித்தான் வந்துள்ளோம்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொக்கிஷங்கள்

பெரும்பான்மையான இந்தியா பொறியாளர்கள் ஆங்கிலப் புலமை ,கலாச்சார ம மற்றும் தொழில் நுட்பத்திறமை படைத்தவர்கள். பிறர் சொல்ல தேவை இல்லை நமக்கே தெரியும்.சில வருடங்களுக்கு முன் பரவலாக பேசப்பட்டு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல் என்பதன் எதிரொளியாக பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா வந்து, நம் தொழில் நுட்பக் கடலில் மூழ்கி நல்ல அறிவாளிகளை ப பெற்றார்கள்.

இதன் பலனாக நல்ல திறமையாளர்களுக்கான போட்டியும் அதனால் உருவான வருமான உயர்வும் நாட்டுக்கு நலமே அளித்தன. வருடத்திற்கு லாபம் 10% முதல்
15%சாதரணமாகவும் சில சமயம் 50%எட்டியதாக சொல்கிறார்கள்.

ரபிபிக் கருத்துப்படி குறைந்த அனுபவம் மற்றும் நல்ல தொழில் நுட்ப அறிவும் கொண்ட இந்தியா பொறியாளர்கள் இப்போது வருடத்திற்கு 5000 டாலர் சம்பளத்தில் கிடைக்கிறார்கள். இதே நிலை அனுபவம் நிறைந்தவருக்கு வருடம் அதிகபட்சமாக 60,000 டாலர் முதல் 100,00 டாலர் வரை செலவாகின்றது.

அவுட் சோர்சிங் முறையில் வெளி நாடுகளில் இருந்து ஆட்களை தெரி வு செய்து வேலை வாங்குவதே சிக்கன நடவடிக்கைதான். அதிலும் நம்மை சுரண்டியே பழகிப்போன வெளிநாட்டவர்களுக்கு இந்த சம்பளம் கொடுப்பதும் கூட கஷ்ட்டமாக இருக்கின்றது.

அவர்களுக்கு கிடைக்கும் பயன்களை பார்த்தால் இந்த செலவினங்கள் பெரிய விஷயமே அல்ல. இலவசமாக அல்ல. அதற்காக நம்மவர்களின் உழைப்பு கொஞ்சமா? இரவில் ஒரு நாள் விழித்தாலே அதை சரி செய்ய நான்கு நாள் போராட வேண்டியுள்ளது. நிம்மதியான தூக்கம் இல்லை. அதனால் சரியான உணவுப் பழக்கம் இல்லை. ஐந்து அல்லது ஆறு நாள் போராடி விட்டு
கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தாலும் எவ்வளவு பிரச்சனைகள்? பலரின் வயறு எரிந்து ...
அனால் எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.

ஆனால் எதற்காக அவர்கள் மேல் நிறைய்ய பேருக்கு எதிர்ப்பு என்று எனக்குதெரிய வில்லை. என்ன தவறு செய்தார்கள். உழைத்து சம்பாதிப்பது குற்றமா? வெளிநாட்டினரிடம் கையேந்துகிறார்கள்...! என்ன யாசகமா செய்கிறார்கள்? நிறைய மஞ்சள் விளைகிறது, ஏற்றுமதி ஆகிறது. அதுபோல தானேஇதுவும்.எத்தனை சராசரிக்கும் கீழ் உள்ள குடும்பங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு உயரத்தை எட்ட முடிந்தது இந்த வேலைகளால் தானே.

அந்த பிள்ளைகளுக்கு மரியாதை தெரிவதில்லை. அவர்கள் பெரும்பாலும்வேலைப் பளு அதிகம் உள்ளவர்கள். ஒரு நாள் அலுவலகத்தில் வேலை அதிகம்என்றாலே காட்டுக்கூச்சல் போடும் பலர் நம்மிலே உண்டுதானே. அவ்வளவுசம்பளம் கொடுப்பவன் உட்கார வைத்துக் கொடுக்க மாட்டன்.தூக்கம் இல்லாமல்வேலைப் பளுவும் அதிகம் இருப்பதுவும் அவர்கள் யாரைப் பற்றி நினைக்கமுடியாமல் போவதற்கு காரணம்.

திமிர் பிடித்து அலைகிறார்கள்....! ஏன் நமக்கு இல்லையா? இவ்வளவு சிறியவயதில் நாமும் அவ்வளவு சம்பாதித்தல் அதைவிட மோசமாக இருந்திருப்போம்!பின் ஏன் அவ்வளவு கஷ்ட்டப் பட்டு சம்பாரிக்க வேண்டும்? எனகேட்கிறவர்களுக்கு.... அதனால் தானே அவர்களை பொறாமையுடனவதுதிரும்பிப் பார்க்கிறோம் !

ஒரு திரைப் படத்தில் திரு .சத்யராஜ் அவர்கள் மிகவும் கேவலமாக பேசியதுமிகவும் வருத்தமாக இருந்தது. நான் அவரின் தீவிர ரசிகையும் கூட. சுமரியாதையில் அவர் வளர்ந்தவர்தான். கஷ்ட்டப்பட்டு முன்னேறும் நேரத்தில் எத்தனைஇடத்தில் நம்மால் சுமரியதையுடன் இருக்க முடிகின்றது? முன்னேறிய பின் நாம்எது சொன்னாலும் உலகம் கேட்கும்.

மேலும் இந்த இடத்தில் சுய மரியாதையை எங்கிருந்து வந்தது? வெள்ளைக்காரனிடம் சம்பளம் வாங்கி , அரசு உத்தியோகம் பார்த்து நம் சொந்தசகோதரனையே வதைததுதான் சுயமரியாதையை அடகு வைத்தது.இதற்க்குபலபல உத்தரனகள் உண்டு.உழைத்து சம்பாதிப்பதில் எங்கே வந்ததுசுயமரியாதை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடிகர்களுக்கு சமுதாயம் என்ன மதிப்புகொடுத்தது.சுய மரியாதையைப் பார்த்தால் சுய தொழில் மட்டும்தான்..... இல்லைஅங்கேயும் வடிக்கையளரைத் தாங்கத்தான் வேண்டியுள்ளது.அதனால் சுயமரியாதையையும் தொழிலையும் முடிச்சு போடாதிர்கள். உங்களுக்குஅவர்களும்தான் ரசிகர்கள்.

சொல்லவந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். இப்போது தனதுஅவுட் சோர்சிங் க்காக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்சில் கடை விரிக்கபன்னாட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.ஆனாலு இங்கே கிடைக்கக்கூடியஅளவு தரம் கிடைக்காமல் மீண்டும் இங்கேதான் வருகிறார்கள்.மேலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வர வர நம்மைத்தவிர கண்டிப்பாக எங்கும் போவதற்குஇல்லை.

நம் நாட்டில் வருகின்ற அரசாவது நமது பொறியாளர்களுக்கு வேலைக்கேற்றஊதியம், உழைக்கும் நேரம் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்சரியாக கிடைக்கின்றனவா என கவனித்தால் நமது நாட்டின் பொக்கிஷங்களைஅவர்களால் நிறையும்.
தலைப்புக்கு வந்து விட்டேன்!