traffic analytics

வியாழன், 9 ஜூன், 2016

திருவாளர் பொதுஜனம்!

நடந்து முடிந்த தேர்தலில் எவ்வளவோ கருத்துக்கணிப்புகள்,அலசல்கள் மாபெரும் கூட்டணிகள் பிரமாண்ட மேடைகள் மற்றும் கடுமையான விமரிசனங்கள்...எல்லாம் நடந்து முடிந்து முடிவுகளும் வந்தாகி விட்டது..

வெற்றிக்கு விமரிசனம் தேவை இல்லை.ஆனால் தோல்விக்கு...?அப்பப்பா A,B மற்றும் C டீம்களின் சால்ஜப்புகள்...வார்த்தை அலங்காரங்கள் மற்றும் தோரணங்கள்...

மிகப் பெரிய அறிஞர்கள் பத்திரிக்கையாளர்களின் அலசல்கள் ,தோற்றவர்களின் தவறுகள் என்ன? என்ன செய்திருக்க வேண்டும் போன்ற இலவச ஆலோசனைகள் (பாவம்...நிறைய பணம் செலவு செய்து ஆலோசனை நிறுவனங்களை கட்சிகள் நாடியிருந்தன..இவர்களை முன்னமேயே நாடி இருக்கலாம்)

ஒரு சாதாரண பொதுஜனமாய் ...எங்களின் பார்வையில்....
மோசமாக வாக்கு சதவிகிதம் பெற்றவர்களில் கடைசி கட்சி முதல் மூன்றாவது இடம் பிடித்தவர் வரைக்கும் ஒரு விஷயம் மிஸ்ஸிங்...அதுதாங்க மரியாதை...ரெஸ்பெக்ட்....50 வருடம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் நாட்டை நாசமக்கிவிட்டன...ஒன்றுமே செய்யவில்லை...ஊழலும் மதுவும்தான் அதிகமாகிவிட்டன....இதெல்லாம் குற்றச்சாட்டுகள்.உண்மையோ இல்லையோ குறை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு...ஆனால் சொல்லும் விதம்..அதுதான் பிரச்சனை.

நான் 50 வருடங்களாக பார்த்து வந்த ஒரு கட்சி....பிடிக்கவில்லை என்றாலும் மதிப்பது தவறில்லயே!வயதான முதியோர் நம் வீட்டில் இருந்து அவர்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் மரியாதையாகதானே சொல்லுவோம்.அதுதானே மரியாதை.

குழந்தை வளரத் துவங்குவது முதல் மரியாதையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறோம்20 முதல் 30 வருடங்களுக்கு முன் உள்ள தலைமுறையை விட  இப்பொது உள்ள தலைமுறை மரியாதையை அதிகம் எதிர்பார்க்கிறது.மற்றவர்களையும் மதிக்கிறது.அதை அனைவரிடமும் எதிர்பார்க்கிறது.டிக்கட் கொடுக்கும் கண்டக்டர் முதல் இறக்கிவிடும் ஆட்டோ டிரைவர் வரைக்கும் நன்றி தெரிவிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் உண்டு.

காட்டுத்தனமாய் கத்தாமல் இழந்த தமிழின் பெருமையை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் அமைதியான எத்தனையோ இளைஞர்களை நாம் அறிவோம்.ஒவ்வொரு பொங்கலுக்கும் தன் கிராமத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ ஓடி வரும் இளைஞர்கள்...தமிழன் என்று சொல்கிறேன்..தலை நிமிர்ந்து நிற்கிறேன் என்று பெறுமைப்படுபவன் அவன் .

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தன் குழந்தைக்கு தமிழை ஊட்டுபவன்! தமிழ் ...கல் தோன்றி மண் தோன்றா முன் காலத்து தோன்றியது..இவ்வளவு நாள் யார் அதற்க்கு காவல் ? அவள் .. தமிழ் அன்னைதான் நம் காவல்.அவள் பெயரைச் சொல்லி எல்லோரும் பாதுகாப்பாக இருந்து கொள்கிறார்கள்.அவளை அழிப்போன் யார் ?அழிக்கத் துணிவோர் யார் ? அப்படி ஒரு நிலைமை வாந்தால் அவன் முன் நிற்ப்பான்...இந்த கட்சிகள் வருமுன்.

பண்பும் பாரம்பரியமும் உள்ள ஒரு தமிழனிடம் பேசும் முன்பு நீங்கள் எவ்வளவு இங்கிதம் கடைபிடிக்க வேண்டும்.

வாக்காளர்களைப் பற்றி பேசுமுன் யோசியுங்கள் தலைவர்களே! பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள் என்று...பணம் வாங்காமல் ஒட்டுப் போட்டவர்கள் பற்றி  உங்கள் கணிப்பு என்ன? பணம் வாங்காதவர்கள் எல்லாம் உங்களுக்குதான் ஓட்டு போட்டார்கள் என்றால் மீதம் உள்ள எல்லோரும் பணம் வாங்கியதாகத்தானே அர்த்தம். ஆனால் நாங்கள் யாரும் பணம் வாங்க வில்லையே! எங்களை எந்த கணக்கில் வைப்பீர்கள். நாளைக்கு ஒரு வேளை உங்களை வெற்றி பெற வைக்க எங்களின் வாக்குகள் அதாவது பணம் வாங்காத திருவாளர் பொது ஜனத்தின் வாக்குகள்தான் தேவைப்படும்...உங்களின் கட்சி வாக்குகளின் நிலைதான் இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்குமே? கொஞ்சமும் யோசிக்கமல் ,உங்களின் தோல்வியை ஒத்துக்கொள்ள மனம் இல்லாமல் பேசினால் நாளை யாரிடம் போய் யாசிப்பீர்கள்?

என் தமிழ்நாட்டு வாக்காளர்கள் விலைக்கு போய் விட்டார்கள் என யாருக்கு வெளிப்படுத்துகிறீர்கள்.? நீங்கள் செய்யும் விணைகள் பூமராங் போல உங்களுக்கே திரும்பி வரும். அடுத்த தேர்தலிலும் நீங்கள் எங்களைத்தான் தேடி வர வேண்டி இருக்கும்.எங்களையே அசிங்கப் படுத்தி விட்டு எங்களிடமே திரும்ப வருவீர்களா?

ஊடகங்களில் பேசுவோர் இந்தக் கருத்தைச் சொல்லுவார்கள் என எதிர்பார்த்தேன்.ஆனால் ஏன் அந்த அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு இது எட்டவில்லை ஏன் எனத் தோன்றவில்லை!

நாங்கள் ரொம்ப சாதரணமானவர்கள்.கொடி பிடிக்க மட்டோம்.கோஷம் போட மாட்டோம்.யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட மட்டோம்.ஆனால் எல்லாவற்றையும் கவனிப்போம்.உங்கள் தலை எழுத்தும் எங்கள் கைகளில்தான்.

தற்போது ஒரு புதிய விஷயம் ஊடகங்களில் தலை தூக்குகிறது..செய்தி வாசிப்பளர்களுக்கு திரு.கருணாநிதி,செல்வி .ஜெயலலிதா என்று சொல்ல வலிக்கிறது.எதோ பக்கத்து வீட்டுக்காரரை கூப்பிடுவதைப் போல..வெட்கக் கேடு...முதலில் மரியாதயை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

யாரையும் ஏன் மரியாதையுடன் கூப்பிடக்கூடாது? உங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உங்களின் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கும் நல்லது!எங்களுக்கும் நல்லது.


திங்கள், 14 ஜனவரி, 2013

தருபவளே தை மகளே ...!



தருபவளே தை மகளே....!
செழுமையும் பெருமையும்
செந்தமிழின் இனிமையும்
செறிவுற்ற அறிவையும்
சேர்கின்ற சிறப்பையும் –
தருபவளே தை மகளே – கற்பகத்
தருவெனவே வா மகளே!

மங்கல ஒளியாக
சிந்தையில் தெளிவாக
கங்கையின் செழிப்பாக – எம்
தந்தையர் தந்த வரமாக வா மகளே
வரம் தா மகளே!

கடந்த பாதைகள் படிகளாக
நடக்கும் நாட்கள்  உயர்வாக
எடுக்கும் காரியம் ஜெயமாக
சுடராய்  வாழ்வை ஒளியாக்க – நல்
சுவையாய் சுகமாய் வா மகளே!


கழனிகள் செழிக்க
கற்றவர்கள் சிறக்க-என் நாட்டை
மற்றவர்கள் போற்ற
உற்றவர்கள் வாழ
அளவாக சரியாக
முறையாக - மழையாக வா மகளே
வரம் தா மகளே...!

 

வியாழன், 29 நவம்பர், 2012

If you have any questions related health care......!

Dear Blog friends,If you need any guidance about hair,skin extra....Please conduct my personal Id ayishaistimeva@gmail.com for free consultation.


வியாழன், 23 டிசம்பர், 2010

நன்றி மதன் சார் ......ப்ளோரா.....!

விவரம் தெரிந்தது முதலே உங்கள் கையெழுத்து ஒன்றுதான் பரிச்சயம். ஒரு சித்திரமாய் மனதில் பதிந்த  ஓவியம்.அப்போது ஆனந்த விகடன் மட்டும்தான் உலகை தெளிவாக வீட்டுக்குள் கொண்டு வந்தது.[ஆனால் இப்போது ஆனந்தவிகடனைப் படிக்கவே சகிப்பதில்லை.ஏன் அப்படி?]
பத்தாவது படித்துமுடித்த கையோடு திருமணம்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து படிக்கத் தொடக்கி எம்.பி.ஏ.வரை படித்து,சப் ரௌடீன் (டிஎன்பிசி) நேர்காணல் வரை வர முடிந்ததற்கு மதனுக்கு என் ஆத்தமார்த்த நன்றிகள் எப்போதும்.[(ஒ பி ஸி)கோட்டவினால் எனக்கு வேலை கிடைக்காதது வேறு விஷயம்.]
Expree Avenue வில் உங்களிடம் என் மகள் Autograph வாங்கியது  எனக்கு ஏற்ப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.நன்றி சொல்ல வழி தெரியவில்லை.ஒரு வேலை மதன் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் .....நான் கொடுத்து வைத்தவள்.

திங்கள், 7 ஜூன், 2010

Detox tea (சுக்கு கஷயம்)

சரிதான் என்று நினைக்கிறேன்!உலகம் முழுவதும் ,எந்த டெலி ஷாப்பிங்கில் பார்த்தாலும் ஹெர்பல் டீ,சைனா டீ, டயட் டீ என ஏகப்பட்ட விளம்பரங்கள்.அதற்க்கு எகப்பட்ட விலைகள்...!கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் எல்லாம் நம்ம ஊர் விஷயங்கள்தான்.

சிம்பிளான ஒரு டிடாக்ஸ் டீ......

இரண்டு டம்ளர் தண்ணீர்
1/2 ஸ்பூன் சுக்கு பொடி
1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி
1    ஸ்பூன் தேன்
1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சுக்கு,மஞ்சள் பொடி இரண்டையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வின் வடிகட்டி மற்ற இரண்டு விஷயங்களையும் சேர்த்து கலந்து குடிக்க வேண்டியதுதான்....

இவ்வளவு ,இந்த அளவு எழுதும் அளவுக்கு அதில் என்ன விஷேசம்? 


DETOX------- டாக்ஸ் என்றாலே விஷம்.டி டாக்ஸ் -- விஷத்தை அகற்றுதல்.நமது உடலின் விஷத்தை,கழிவுகளை அகற்றுதல்.இரத்தத்தில் கலந்துள்ள் மாசுக்களை நீக்குதல்தான் பொருள்.

எத்தனையோ வருடங்களுக்கு முன் நமது முன்னோர்கள் சொன்ன கஷாயம்தான் இது.அதில் மற்றவர்கள் பொருள் மாற்றங்கள்,பெயர் மாற்றங்கள் செய்து மார்க்கெட்டில் விட்டு பணம் பார்க்கிரார்கள்.

இது மட்டுமல்ல சம அளவு வெந்தயம் மற்றும் சோம்பு இரண்டும் கலந்து கொதிக்க வைத்தாலும் அதுவும் விஷத்தை அகற்றும்.இரத்தத்தை சுத்தப் படுத்த வேண்டும் என் நினைப்பவர்கள் குறைந்தது ஒரு லிட்டர் அளவு குடிக்கலாம்.டீக்கு பதிலாக குடிக்கலாம்.

உடம்பைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் இது நல்ல விஷயம்.குறிப்பிட்ட பொருட்கள்தான் என்று இல்லை,உடம்புக்கு நல்லது எனத் தோன்றும் எதையும் இதனுடன் சேர்க்கலாம்.மிளகு,திப்பிலி ,புதினா இன்னும்.......

பால் சேர்க்காமல் சாப்பிட்டால் கூடுதல் பலனும் கிட்டும்.சுத்தப் படுத்துவது என்னும் போது இரத்தத்தில் உள்ள சேதமான செல்களை சுத்தப் படுதுவது,இரத்தக் குழாயில் உள்ள அடைப்புகளை நீக்குவது எல்லாம் சேர்த்துதான்.இது மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.

கழிவுகள் அகற்றப்படும் போது தோல் வியாதிகள் மாறும்,சாதாரணமாக் தோல் வனப்பு கூடும்.மற்ற கழிவுகள் தொல்லை இன்றி வெளியேறும்.இது சிறந்த ஆண்டிஆக்சைடாக செயல் பட்டு செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

இது

இரண்டு கப் டீ  என்பது

1 1/2 கப் ரெட் ஒயின்

12 கப் ஒயிட் ஒயின்

7 கப் ஆரஞ்சு ஜூஸ்---க்கு சமம்.செல்கள் பாதிக்கப் படுவதில் இருந்து பாதுகாப்பது என்பது கேன்சரில் இருந்து பாதுகாப்பது என்பதுதான்.காலையில் குடிப்பது மிகவும் நல்லது.

மற்ற டீ போல இல்லை.மொத்தமாக செய்து காலையிலேயே வைக்கலாம்.நேரம் ஆனால் கெட்டுப் போகாது.நல்லதுதான்.ஃப்ளஸ்க்கில் வைக்கலாம் அல்லது வேண்டும் போது சூடாக்கினால் போதும்.

குடித்து பார்ப்போமே!

சனி, 21 நவம்பர், 2009

Just for you......!

Savage Garden...


One love Blue


Nothing Gonna Change My Love For You


My Love

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மாரடைப்பு ....!தனக்கு தானே முதல் உதவி செய்து கொள்ள ......!

இது மாலை 6.15 தனியாக கரை ஓட்டிக்கொண்டு அன்றய கடினமான நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு அயர்ச்சியுடன் செல்லும்போது…சிக்னலில்





உடனடியாக இதயத்தின் ஆழத்தில் லேஸான வலி (severe pain) ஆரம்பித்து தோள்களில் கைகளில் பரவ ஆரம்பிக்கின்றது.....


மருத்துவமனை இன்னும் சற்று தொலைவில் நிழலாடுகின்றது.செல்ல முடியுமா என்கிற எண்ணம்.....File:AMI pain front.png




என்ன செய்யலாம்???


மாரடைப்புக்கான CPR பயிற்சியை நீங்கள் பெற்ற போது அந்த பாழாய்ப் போன பயிற்சியாளர் தனக்கு தானே எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டாரே?!!!



என்ன செய்யலாம்???...


பயப்படாமல் தொடர்ந்து இருமிக்கொண்டே இருங்கள்.ஒவ்வொரு இருமலுக்கும் முன்னர் ஒரு ஆழமான நிலையில் மூச்சை இழுத்து விடவும்.இருமல் ஆழ்ந்து இருக்கட்டும்.ஆழ்ந்து நெஞ்சில் இருந்து கபத்தை வெளியேற்றும் வண்ணம் இருக்கட்டும்.

இந்த முயற்சியை உதவி கிடைக்கும் வரை இரண்டு நொடிகளுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்யவும். அல்லது இதயத்துடிப்பு ஓரளவிற்கு சரியாகும் வரை செய்யவும்.

மரணம் என்பது இதயம் நின்று விடுவதால் மட்டுமே நிகழ்ந்து விட்டதாக கருத முடியாது.இதயம் நின்ற பிறகு 40 நொடிகள் மூளை உயிருடன்தான் இருக்கும்.மூளை செயல் இழந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழுமையாக மரணம் அடைந்ததாக கருதப் படுவான்.இந்த 40 நொடிகளுக்குள் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை உருவாக்கினால் ,மூளை உடனே மரண மடையாது


இதயத்தை செயற்கையாக அழுத்திக் கொடுப்பதால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தம் சரியாக செல்ல ஆரம்பிக்கும்.அதை செய்ய மருத்துவரோஅல்லது cpr பயிற்ச்சி பெற்ற ஒருவரோ இதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்யலாம்.

அவ்வாறு இல்லாத சூழலில் தானாகவே மேற்கண்ட பயிற்சியினை செய்யலாம்.
ஆழமாக மூச்சை இழுப்பதால் ,அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு செல்கின்றது.ஆழ்ந்த இருமல் ,இதயத்தை அழுத்துவதால் ஓரளவிற்கு இரத்த ஓட்டம் மூளைக்கு செல்கின்றது. இருமலால் இதயத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சரியான இதய துடிப்பு மீண்டு வர உதவி செய்யும்.

இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ,அடுத்தவரின் உதவியை அல்லது மருத்துவமனையை உடனடியாக அணுகவும்.