traffic analytics

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

எங்கும் வியாபகமாய் இருப்பவன்....1


யா ஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் !
உபௌ தொ விஜாநீதோ நாயம் ஹந்தி ஹன்யதே !!
19
......பகவத் கீதை

பொருள் :ஆத்மாவைக் கொலையாளி என்றும், கொலையுண்பான் என்றும் எண்ணும் இருவரும் அறியாதார். ஆன்மா கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை.

விளக்கம் : செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்து போனால் "நான் தொலைந்தேன்"என்கிறான்.செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடையது ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம்.தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆகி விடுகின்றது.தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம்.மாறுபடும் தன்மையது தேகம்.மாறாப் பெரு நிலையில் வீற்றிருப்பது ஆத்மா சைதன்யம்.தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லயோ, அப்படி ஆக்கை அழியும் போது ஆத்மாவும் அழிவதில்லை.