traffic analytics

திங்கள், 6 ஏப்ரல், 2009

அவசியமான ஒரு பதிலுரை....


என் இடுகையை விட நீ.................................ளமான ஒரு பதிலுரை கிடைக்கப் பெற்றேன்.முதலில் நன்றி அனுப்பியவருக்கு.என் மனதில் நினைத்ததை என்னைவிட அழகாக சொன்னதற்கு. நான் பிறப்பால் மட்டுமே கிரிஸ்டியன்.சிறுபான்மையினர் என்ற போர்வைக்குள் என்னை சிறை வைக்க நான் விரும்பியது இல்லை.
முகலாயர் காலம் முதல் வந்தாரை வாழ வைத்து ,அவர்களின் கலாச்சாரத்தை வரவேற்று , அவர்கள் இங்கு காலூன்ற இடமும் கொடுத்த நம் முன்னோர்களின் பெருந்தன்மை மறக்கக்கூடியதா? அவர்கள் நம்மை மிதித்து நம் மீது ஏறி நின்று, நம் பெருந்தன்மையை சீரழித்ததையும் மறப்பதற்கு இல்லை.
இன்றும் நம் சமுதாயத்தில் எல்லாம் கோவில்கள் கட்டவும்,மசூதிகள் கட்டவும் முடிகிறது என்றால் கண்டிப்பாக நம் மக்களின் உயர் குணமே அன்றி வேறில்லை.
நான் சொல்ல வந்தது மக்களின் இந்த மத சார்பற்ற தன்மையை தங்களின் ஓட்டு வங்கிக்கு பயன்படுத்த முயலும் கேடு கெட்ட அரசியலைப் பற்றியதுதான்...!
எல்லோரும் இன் நட்டு மன்னர்கள்.பின் ஏன் சிறு பான்மையினருக்கு இவ்வளவு சலுகைகள்? அதில் யாருக்கு லாபம்?சலுகை கொடுத்த நோக்கம் என்னவோ அவர்கள் முன்னேற..! ஆனால் சிறுபான்மையினருக்கு அல்ல நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்புகளுக்கு வேண்டியவர்களும் அவர்களின் சொந்தங்களும்,பந்தங்களும் தான் பலன் பெறுகிறார்கள்?இல்லையா என்று சாதரண சிறு பன்மை மக்களைக் கேட்டுப்பாருங்கள்.

பிற மதத்தை இழிவு செய்யும் எந்த மதமும் மரியாதைக்கு உரியவை அல்ல. அது மதமானாலும் சரி அதை செய்யும் மக்களானாலும் சரி.அதை ஆழமாக அலச நான் விரும்பவில்லை.
ஒரு சாதரண இந்தியனாக ,கிரிக்கெட் முதல் கார்கில் வரை இது என் தேசம் என்ற நினைப்பு உள்ளவனாக ஒருவன் இருந்தால் போதும்.சிறு பான்மையினர் என்ற முத்திரை தேவை இல்லை. இந்தியன் என்ற சிந்தனை போதும்.
தொண்டு நிறுவனங்கள் என்கிற நிலை பற்றி நண்பர் எழுதி இருந்தார்.நூற்றுக்கு நூறு உண்மை. கண் கூடாக டி.வி.எஸ். வைத்து சில வருடங்களில் பென்ஸ்க்கு மாறிய தொண்டுள்ளம் படைத்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். விஷ விதையை தூவி தன் மதத்தை பரப்ப நினைக்கிரவனை ....."தெரியாமல் செய்கிறார்கள் பரமபிதாவே.. மன்னியும்...."என விட்டு விடுகிறது நம் அரசாங்கம்.
ஒரு டா வின்சி கோட் வெளியாக தயாரிப்பாளர் பட்ட கஷ்ட்டம் உலகே அறியும்.
கலிலியோ முதல் எத்தனை பேர்......சரித்திரம் சொன்னாலும் நமது அரசு ...ஹையோ!இது சிறுபான்மை மக்களுக்கான சிறு பன்மை அரசு.சொன்னவர்களை உள்ளே போடுவார்களே தவிர மதங்களை பழித்தவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் .
.நமது நாடும் கலாச்சாரமும் மதமும் பிரிக்க முடியாதவை. அதை மறுக்கவும் முடியாது என நினைக்கிறேன். நம் மதங்களின் பூர்வீகத்தை எத்தனை ஆயிரம் ஆண்டுக்குள் அடைப்பீர்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டுபார்க்க வில்லை , அதை மனம் செய்யும். அனாதைகளுக்கு தான அடைக்கலம் தேவை.நாம்தான் இந்நாட்டு மன்னர்கள்அல்லவா??பின் ஏன் இந்த பாதுகாப்பு வளையம். நீங்கள் என்ன பற்பசையா? சுயமாக சிந்தியுங்கள்.மதச் சார்புடையவை என வண்ணம் பூசப்படுவதலேயே அதில் உள்ள சாதகங்களை யோசிக்காமல் இருந்து விட வேண்டாம் என்ற பாதிப்பில் எழுந்ததுதான் என் இடுகை. நண்பரின் இடுகையையும் இங்கே பதிக்கிறேன் .......!

Hi Jeeva Flora,

Your name suggets you as a Christian. What adds to the surprise is that when most of the comments (in various blogs)with Christian names spit venom on the majority religion of this country, you seem to stand apart.

You are 100% correct in your comment!
All those profesing secularism are nothing but vote beggars! As read by you correctly you like it or not there will be some sort of an attitude amongst the majority religion adherents in any country. Look at the most liberal western European countries. The respect Christianity gets there (inspite of a very strong non religious and liberal tradition) cannot be expected for any other religion. Imagine planting a Temple or a Mosque in Europe or USA as being done by Christian groups in India.Europe doesnt permit that. If this is done in India, you are branded as communal, facist etc..ect. In the same breadth imagine planting a Temple or a Church in an Islamic country! I need not say what the consequence will be! Atleast in Christian countries, they will allow an alien religious prayer house after a strong debate and after evaluating the religious needs for its minority population. In India's case, you need not say anything. Just look outside in any major Indian city, you can see the number of new Churches and Mosques that have come up in the past 5 years! They are plenty and plenty as the Hindu culture doesnt beleive in one single doctrine theory! But imagine what happens in any Islamic country. There is no God or Worship method apart from what has been written 1300 years ago! You just cannot be a happy minority let alone a minority who can live without fear!

The only problem in India is that a small but vocal and venomous minority among the minority wants to disgrace and eliminate the majority's cultural practices and beliefs by calling their religion as false and stupid. This is in fact supported by stupid vote catching politicians who instated of supporting the sane among minorities, pander to these violent, hate mongering fanatics among the minorities.

One should note that no Christian or Muslim gets hit for his beleif in India. All the Churches and Mosques are safe and so are the people. What getes disturbed is when fanatical Christian priests go to poor areas and bad mouth about Hindu religion and culture to increase head count. Since Hindu's historically did not have the need to defend their religion with counter propaganda (at least not till Swami Vivekananda, Ramakrishna, Hare Krishna Movement etc) and not have organisation to do so and whereas Christian Church is well funded and organised, the Hindu groups respond with what best (or worst?) it can which is intimidation and counter violence! Again, no Christian is harmed in cities or in well entrenched Christian societies. Its only when the venom and hatred is spewed about Hinduism among poor and illeterate Hindus the reaction such as in Khandanmal is seen.

Many of the Hindus including me, do not hate Christ! We respect him. But born again Christians and that too the evangelical maniacs and white Christian funded hate mongers - WE HATE THEM and if the mainstream straighforward true Christians like you do not rein them in, we will, inspite of this pseudo secular political idiots!


On a last note It gives me lots of hope seeing blog like yours. I believe there are lots of sane Christians like you that like only Jesus and not the organization in HIS name that are gaining notoriety by abusing young kids, molesting nuns, spreading hatred amongst other religions! You guys should come out and tell to your co religionists that their help is NOT needed to save our souls! We have our own religion and culture and its as good if not better than yours.

தேசப் பற்று குற்றமா....?


நமது நாடு , கலாச்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை ஆழமாக நேசித்தால் தவறா? அப்படித்தான் தங்களை மதச்சார்பற்றவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் சொல்கிறார்கள். ஏனென்றல் அவர்கள் மத சகிப்புத்தன்மை கொண்டவர்களாம்.அது என்ன சகிக்க முடியாத ஒன்றை சகிப்பது போல பேசுகிறார்கள். அப்படியானால் மற்ற மதத்தினை சகித்துத்தான் வாழ்கின்றர்களா? சகிக்க முடியாததா? நமது மதங்கள்.
ஓட்டுக்காக கடை விரிக்கும் இவர்களையும் நம்பி ஒரு வாக்கு வங்கி...!இந்த அரசியல் மத சார்பற்றவர்கள் எந்த மதம் சார்ந்தவர்கள்? அதில் தீவிரமனவர்களா? இல்லை அதில் மேலோட்டமானவர்களா? தங்கள் பிள்ளைகளுக்கு பிற மதத்தில் இருந்து சம்பந்தம் செய்கின்றவர்களா? இல்லை தங்கள் பணத்தில் இருந்து பிற மதத்தினருக்கு உதவி செய்பவர்களா?
கூட்டணி என்று வரும் போது தங்களின் கொள்கைகளை காப்பற்றுபவர்களா? அல்லது ஆட்சி கவிழட்டும் என்று மதச்சார்பற்ற அரசைக் கவிழ்ப்பவர்களா?
தங்களது காட்சியில் பிற மதத்தைச் சேர்ந்த சிலருக்கு பொறுப்பு கொடுத்து விட்டால் போதுமா? அதுவும் தலைமையின் காலை வருடும் அடி பொடிகளுக்கு.
அவர்களால் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு துளியும் நன்மையும் கிடைக்காது என்று எல்லோருக்கும் தெரியும்.ஒரு வேளை அதனாலேயே அவர்களுக்கு பதவி வழங்கப்படுமோ என்னவோ?
இந்த தலைவர்கள் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற்றதாக ஒரு மாய தோற்றத்தை எற்படுதுகின்றகள். உண்மை அது இல்லை என அவர்களுக்கும் தெரியும். பிற மதத்தினருக்கு தவறான ஒரு பயத்தை உருவாக்கி அதில் குளிர் காய்கிறார்கள் . உண்மையை அவர்களுக்கு தெரிய விடுவது இல்லை.
எந்த சமூகமும் தான் அதிகமாக உள்ள இடத்தில் , அவர்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கும். அது அனைவருக்கும் தெரியும். எல்லா மதத்திலும் எல்லோரும் நல்லவர் இல்லை.ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பலருக்கு பதிப்பு இதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.பின் இந்த மத சார்பற்றவர்கள் எதற்கு எங்கிருந்து வந்தார்கள்? பிற மதத்தினர் பாதிக்கப்படும் போது தனக்கு பாதிப்பு என்றாலும்,பெயர் கெட்டு போய் விடும் என்றாலும்,அதனால் ஓட்டு கிடைக்கப்போவது இல்லை என்றாலும் ஓடி வருபவன்தான் உண்மையில்
மத சார்பு அற்றவன். யாரையும் சுட்டிக்காட்ட முடிவதில்லை.பின் எதற்கு அவர்களின் பின்னே போக வேண்டும்.
நம் நாடு , நம் மக்கள் என எண்ணி சரியான தேர்வுக்கு ஓட்டளிக்க முடிவு செய்தலே போதும். எல்லோருக்கும் சரியான அங்கீகாரமும் பாதுகாப்பும் கிடைக்கும்.