traffic analytics

செவ்வாய், 5 மே, 2009

ஒபாமா என்கிற ஒரு ஜாதியத் தலைவர்


பல வருடங்களுக்கு முன் மிகப் பிரபலமான ஒரு தலைவர்.எளிமைக்கும் தேசியத்திற்கும் பேர் போன ஒரு தலைவர்.அப்படி ஒரு தலைமைதான் தங்களின் எதிர்கால லட்சியம் என கொக்கரிக்கும் கட்சிகளும் ஏராளம்.அப்படிப்பட்ட ஒரு தலைவரின் ஜாதியம் எப்படி பட்டது என்று பார்த்தால்தான் ராஜதந்திரம் என்பதும்,தற்போது ஒபாமா கடை பரப்பும் பொருளாதார பல் நோக்கு சரிப் படுத்தல்களும் புரிய வரும்.

சாதாரண கூலிகளாய் வேலைப் பார்த்த அந்த இனத்தவரில் சிலருக்கு நினைவில் வைக்க முடியாத அளவிற்கு நிலங்கள்.(விலை போட்டு வாங்கி இருந்தால்தானே நினைவில் இருக்கும்).சாதியக் கட்டுப்பாடு மற்றும் கீழ் நிலையில் உள்ள தன் ஜாதிக்காரனைத் தூக்கிவிட வேண்டும் என்கிற புரிந்துணர்வு அடிப்படையில் ,அவருக்கு வேண்டிய நம்பிக்கைக்கு பாத்திரமான சிலருக்கு புறமபோக்கு நிலங்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு அளிக்கப் பட்டன.திடீர்ப் பணக்காரர்கள் உதயம்.

அந்த ஜாதிக்காரர்கள் சொன்னால் ஒழிய இந்த விஷயங்கள் வெளியே வராது.மக்கள் தொடர்புச் சாதனங்கள் அதிகம் இல்லாத காலகட்டங்களில் இவை பற்றி யாரும் நினைக்கவே முயவில்லை."அவனுக்கு புதையல் கிடைத்தது,லாட்டரி அடித்தது,கள்ளப் பணம் கிடைத்தது"போன்ற கதைகளை நம் முன்னோர் கூறுவது இப்படித்தான்.

படிப்பறிவற்ற(இப்போது அல்ல)தன்னுடைய சமூகத்திற்காக அவர் போட்ட சட்டங்களில் ,எல்லோருக்கும் பயன் கிடைத்தது.மிகக் குறைந்த அளவு படிப்பே ..பாடம் கற்பபிக்க போதும் என சொல்லி, அவரின் ஜாதியைச சார்ந்த பெரும் பாலான பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தவர்,அத் தலைவர்.

பைபிளில் ஒரு வாசகம் வாரும்"எஜமானனின் மேஜையில் இருந்து விழும் ரொடடித் துண்டுகள் , நாய்களின் பசியைப் போக்கும் "என்று .நெல்லுக்கு பாய்ந்தது சிறிது புல்லுக்கும் பாய்ந்து இன்றுவரை அவரின் புகழ் பாடிக் கொண்டு இருக்கிறது.

அவரின் மாவட்டத்திற்கு போனவர்களுக்கு ,பல கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தண்ணீர் கொண்டு வருவதற்க்காக அந்த காலத்திலேயே போடப் பட்ட குழாய்கள்,மிகவும் பிரமிப்பாக இருக்கும்.வீராணம்,புதிய வீராணம் என இப்போது ஆகும் செலவுகளுக்கு,அப்போதே எந்த வித அலட்டலும் இல்லாமல் காரியத்தை முடித்து விட்டார்.

அப்படி நம் ஜாதியை தூக்கி நிறுத்த ஒருவன் வரமாட்டனா என அனைவருக்கும் ஒரு எதிர் பார்ப்பு உலகின் அணைத்து இனத்திற்கும் உண்டு.அந்த எதிர்பார்ப்பின் பலன்தான் ஒபாமா.
சமீபத்தில் ஒரு வேண்டுகோளை அவர் வெளியிட்டார்.எதிர்காலத்தில் நாம்முடைய கைகளை நாமே நம்ப வேண்டும்.அதனால் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்.

இன்று ஒரு அறிவிப்பு.இந்தியா,சைனா,பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் , முதலீடு செய்தால் வரி விலக்கு இல்லை.பெங்களூரில் ஆரம்பிப்பதை,நியுயார்க்கில் ஆரம்பித்தால் வரி விலக்கு உண்டு என்கிற ரீதியில் போகிறது .

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?அமெரிக்கர்கள் கடின உழைப்பாளிகள் இல்லை.தனி மனித சுதந்திரம் என்று,தங்களின் சொந்த குழந்தைகளை கூட பள்ளிக்கு அனுப்ப கண்டிக்காத மன நிலையில் உள்ளவர்கள்.அவர்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேல் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பது,உடலை வருத்தி வேலை பார்ப்பது எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இப்போது அங்கே முன்னேற வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் , துடிக்கும் நிலையில் யார் இருக்கிறார்களோ,அவர்கள் கண்டிப்பாகபடிப்பார்கள்.உள்நாட்டில் உருவாகும் வேலைகளுக்கு ஆள் இல்லாமல்தானே இங்கே வந்து ஆள் எடுக்கிறார்கள்.சட்டங்கள் மற்றும் வரி மாற்றங்களினால் ,அங்கு உருவாக்கப் படும் நிறுவனங்களுக்கு ,வேறு வழி இல்லாமல் அங்கே உள்ளவர்களைத்தான் பயன் படுத்த வேண்டி வரும்.

ஒபாமாநினைத்ததுநடக்கும்.நல்லபெயருடன்."எஜமானனின்................"மற்றவர்களுக்கும் சிறிது ஈயப்படும்.எல்லாம் புரிவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.நல்லவை நடந்தால் எப்படியானாலும் வரவேற்க வேண்டியதுதான்.