traffic analytics

சனி, 11 ஏப்ரல், 2009

மனதில் உறுதியுடன் ஒரு தலைவன்...!

புரட்சி என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒவ்வொரு நாவும் அறிந்த ஒரு வீரனின் கையொப்பம்தான் இது. பிறப்பு , வளர்ப்பு,புரட்சி என இவரின் கதைகள் அறியாதோர் இல்லை. ஏறக்குறைய இவரைப்பற்றி எழுதாத பத்திரிக்கைகளும் , மீடியாக்களும் இல்லவே இல்லை!

எதிரியாக இவரைப்பற்றி நினைக்கவே அமெரிக்காவுக்கு நேரம் போதவில்லை.இவ்வளவு உயர்ந்தவரைப்பற்றி , நான் என்ன எழுதாத ஒன்றையா எழுத போகிறேன்?

புரட்சி என இப்போது உள்ள புரட்சியாளர்களின் எண்ணங்களையும் ,பிடல் காஸ்ட்ரோவின் எண்ணங்களையும் ஒப்பு நோக்கினால்......ரத்தக்ண்ணீர் வரும்.
அறிவு , மனிதாபிமானம் அற்ற புரட்சி தீவிரவாதமாகிறது.மனதில் உறுதியும்,வாக்கினில் இனிமையும் ,நினைவில் நல்லவையும்-- இவை எல்லாம் இருந்து மக்களை சரியான முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்றால் ,உலகின் ஒவ்வொரு நாடும் அப்படி ஒரு தலைவனைத்தான் தேடும்.

அப்படி ஒரு தலைவன் சொன்னால் உயிரை கொடுக்க , உலகமே தயாராகும்.
புரட்சியான எண்ணங்கள் மக்களைக் காப்பற்ற மட்டுமல்லாது , அவர்களை முன்னேற்றவும் முடியுமனால்அவன்தான் தலைவன்.

பெரிய ஜனநாயக நாடு...அறிவு ஜீவிகளின் தலைமை ........அமரிக்காவை தாஜா பண்ண எவ்வளவு பாடு.......?

அறிவியல் வளர்ச்சியை தன் தேவைக்கு மட்டுமே
பயன்படுத்தி , உலக பொருளாதார சிக்கலில் மாட்டாமல் தலை நிமிர்ந்து நிற்கும் அத்தலைமைக்கு ஒரு தாழ்பணிந்தவணக்கம்.

அவர்கள் மற்றவர்களுக்காக விண்கலமெல்லாம் அனுப்பவில்லை. உடனே சண்டைக்கு வராதீர்கள் நண்பர்களே!நம் நாட்டிற்கு அதைவிட தீர்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் நிறைய உண்டு.விவசாயிகளின் பிரச்சினைகள் ,பொருளாதார பிரச்சனை,தீவிரவாதம் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டுஎதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்றுதான சொல்கிறோம்.

தங்களின் ஜீவாதாரமான விவசாயத்தில் முழு கவனத்தையும் செலுத்தி எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்க வைத்த தலைவன் அவன் ஒருவன்தான் என்பது என் கணிப்பு !

புரட்சியாளர்களின் தலைவன் என்று மட்டும் எண்ணாமல், அரசியல் தலைவர்களும் சுய மரியாதையை விரும்பும் ஒவ்வொருவரும் பின்பற்றினால்!
நினைப்பதற்கு ஆரோக்கியமான விஷயம்தான்!