traffic analytics

வியாழன், 9 ஜூன், 2016

திருவாளர் பொதுஜனம்!

நடந்து முடிந்த தேர்தலில் எவ்வளவோ கருத்துக்கணிப்புகள்,அலசல்கள் மாபெரும் கூட்டணிகள் பிரமாண்ட மேடைகள் மற்றும் கடுமையான விமரிசனங்கள்...எல்லாம் நடந்து முடிந்து முடிவுகளும் வந்தாகி விட்டது..

வெற்றிக்கு விமரிசனம் தேவை இல்லை.ஆனால் தோல்விக்கு...?அப்பப்பா A,B மற்றும் C டீம்களின் சால்ஜப்புகள்...வார்த்தை அலங்காரங்கள் மற்றும் தோரணங்கள்...

மிகப் பெரிய அறிஞர்கள் பத்திரிக்கையாளர்களின் அலசல்கள் ,தோற்றவர்களின் தவறுகள் என்ன? என்ன செய்திருக்க வேண்டும் போன்ற இலவச ஆலோசனைகள் (பாவம்...நிறைய பணம் செலவு செய்து ஆலோசனை நிறுவனங்களை கட்சிகள் நாடியிருந்தன..இவர்களை முன்னமேயே நாடி இருக்கலாம்)

ஒரு சாதாரண பொதுஜனமாய் ...எங்களின் பார்வையில்....
மோசமாக வாக்கு சதவிகிதம் பெற்றவர்களில் கடைசி கட்சி முதல் மூன்றாவது இடம் பிடித்தவர் வரைக்கும் ஒரு விஷயம் மிஸ்ஸிங்...அதுதாங்க மரியாதை...ரெஸ்பெக்ட்....50 வருடம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் நாட்டை நாசமக்கிவிட்டன...ஒன்றுமே செய்யவில்லை...ஊழலும் மதுவும்தான் அதிகமாகிவிட்டன....இதெல்லாம் குற்றச்சாட்டுகள்.உண்மையோ இல்லையோ குறை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு...ஆனால் சொல்லும் விதம்..அதுதான் பிரச்சனை.

நான் 50 வருடங்களாக பார்த்து வந்த ஒரு கட்சி....பிடிக்கவில்லை என்றாலும் மதிப்பது தவறில்லயே!வயதான முதியோர் நம் வீட்டில் இருந்து அவர்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் மரியாதையாகதானே சொல்லுவோம்.அதுதானே மரியாதை.

குழந்தை வளரத் துவங்குவது முதல் மரியாதையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறோம்20 முதல் 30 வருடங்களுக்கு முன் உள்ள தலைமுறையை விட  இப்பொது உள்ள தலைமுறை மரியாதையை அதிகம் எதிர்பார்க்கிறது.மற்றவர்களையும் மதிக்கிறது.அதை அனைவரிடமும் எதிர்பார்க்கிறது.டிக்கட் கொடுக்கும் கண்டக்டர் முதல் இறக்கிவிடும் ஆட்டோ டிரைவர் வரைக்கும் நன்றி தெரிவிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் உண்டு.

காட்டுத்தனமாய் கத்தாமல் இழந்த தமிழின் பெருமையை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் அமைதியான எத்தனையோ இளைஞர்களை நாம் அறிவோம்.ஒவ்வொரு பொங்கலுக்கும் தன் கிராமத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ ஓடி வரும் இளைஞர்கள்...தமிழன் என்று சொல்கிறேன்..தலை நிமிர்ந்து நிற்கிறேன் என்று பெறுமைப்படுபவன் அவன் .

உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தன் குழந்தைக்கு தமிழை ஊட்டுபவன்! தமிழ் ...கல் தோன்றி மண் தோன்றா முன் காலத்து தோன்றியது..இவ்வளவு நாள் யார் அதற்க்கு காவல் ? அவள் .. தமிழ் அன்னைதான் நம் காவல்.அவள் பெயரைச் சொல்லி எல்லோரும் பாதுகாப்பாக இருந்து கொள்கிறார்கள்.அவளை அழிப்போன் யார் ?அழிக்கத் துணிவோர் யார் ? அப்படி ஒரு நிலைமை வாந்தால் அவன் முன் நிற்ப்பான்...இந்த கட்சிகள் வருமுன்.

பண்பும் பாரம்பரியமும் உள்ள ஒரு தமிழனிடம் பேசும் முன்பு நீங்கள் எவ்வளவு இங்கிதம் கடைபிடிக்க வேண்டும்.

வாக்காளர்களைப் பற்றி பேசுமுன் யோசியுங்கள் தலைவர்களே! பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள் என்று...பணம் வாங்காமல் ஒட்டுப் போட்டவர்கள் பற்றி  உங்கள் கணிப்பு என்ன? பணம் வாங்காதவர்கள் எல்லாம் உங்களுக்குதான் ஓட்டு போட்டார்கள் என்றால் மீதம் உள்ள எல்லோரும் பணம் வாங்கியதாகத்தானே அர்த்தம். ஆனால் நாங்கள் யாரும் பணம் வாங்க வில்லையே! எங்களை எந்த கணக்கில் வைப்பீர்கள். நாளைக்கு ஒரு வேளை உங்களை வெற்றி பெற வைக்க எங்களின் வாக்குகள் அதாவது பணம் வாங்காத திருவாளர் பொது ஜனத்தின் வாக்குகள்தான் தேவைப்படும்...உங்களின் கட்சி வாக்குகளின் நிலைதான் இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்குமே? கொஞ்சமும் யோசிக்கமல் ,உங்களின் தோல்வியை ஒத்துக்கொள்ள மனம் இல்லாமல் பேசினால் நாளை யாரிடம் போய் யாசிப்பீர்கள்?

என் தமிழ்நாட்டு வாக்காளர்கள் விலைக்கு போய் விட்டார்கள் என யாருக்கு வெளிப்படுத்துகிறீர்கள்.? நீங்கள் செய்யும் விணைகள் பூமராங் போல உங்களுக்கே திரும்பி வரும். அடுத்த தேர்தலிலும் நீங்கள் எங்களைத்தான் தேடி வர வேண்டி இருக்கும்.எங்களையே அசிங்கப் படுத்தி விட்டு எங்களிடமே திரும்ப வருவீர்களா?

ஊடகங்களில் பேசுவோர் இந்தக் கருத்தைச் சொல்லுவார்கள் என எதிர்பார்த்தேன்.ஆனால் ஏன் அந்த அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு இது எட்டவில்லை ஏன் எனத் தோன்றவில்லை!

நாங்கள் ரொம்ப சாதரணமானவர்கள்.கொடி பிடிக்க மட்டோம்.கோஷம் போட மாட்டோம்.யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட மட்டோம்.ஆனால் எல்லாவற்றையும் கவனிப்போம்.உங்கள் தலை எழுத்தும் எங்கள் கைகளில்தான்.

தற்போது ஒரு புதிய விஷயம் ஊடகங்களில் தலை தூக்குகிறது..செய்தி வாசிப்பளர்களுக்கு திரு.கருணாநிதி,செல்வி .ஜெயலலிதா என்று சொல்ல வலிக்கிறது.எதோ பக்கத்து வீட்டுக்காரரை கூப்பிடுவதைப் போல..வெட்கக் கேடு...முதலில் மரியாதயை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

யாரையும் ஏன் மரியாதையுடன் கூப்பிடக்கூடாது? உங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உங்களின் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கும் நல்லது!எங்களுக்கும் நல்லது.