traffic analytics

புதன், 8 ஏப்ரல், 2009

எங்கெங்கு காணினும் சக்தியடா!




பொற்பு விளங்கு புகழ் அவை நிர்புகழ்ந்த்நு ஏத்த
இலங்கு இழை மகளிர் பொலங் காலத்து ஏந்தி
மனங்கமழ் தேறல் மடுப்ப, நாளும்
மகிழிந்தினிது உரைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்லூழியையே!"
-மதுரைக் காஞ்சி. பாடல் பெற்ற திருத் தலங்களையே பெருமையாகப் பேசும் போது,பாடல்கள் பெற்ற திருத்தலத்தின் பெருமை வாக்கினில் அடங்கும் தன்மையதா?
காவியம், ஆற்றுப்படை ,பிள்ளைத்தமிழ் என தமிழின் மூலாதாரமாய் விளங்கும் அத்தலம் !

"தென்னாடுடைய சிவனே போற்றி"
என புகழ்படப்படும் சிவனைத் தன்னவனாகப் பெற்றது இத்தலம்!


"உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓவர இமைக்கும்சென்விலங்கு அவிரொளி"
-திருமுருகாற்றுபபடை
-என பாட்டுடைத்தலைவன்,இரங்கும் துறைதோறும் பெயர்கொண்ட செவ்வேல் அழகனை சங்கத்தின் தலைவனாக கொண்டது எத்தலம்?


"மாணிக்க மூக்குத்தி
மதுரை மீனாட்சி"
ம்ங்கலமாய் வெண்ணிலவாய்
மாட்சியுடன் வீற்றிருக்கும்
மதுரை மாநகரமே அத்தலம்.

செறுக்கை அடக்கும்
செங்கோல் தனைக் கையில் ஏந்தி
செம்பவழ அதரத்தில்
செஞ்சிரிப்பை கண்ணில் காட்டி!

ஆறாத ரணமெல்லாம்
ஆற்றுபவளே!
தீராத துயரமெல்லாம்
தீர்ப்பவளே!
காணுகின்ற தூரமெல்லாம்
காட்சியனவளே!
நம்பி நின்ற எங்களை
நற்கதியில் சேர்ப்பவளே!
பாதாதி கேசமாய்
பாடல் பெற்றவளே!



அந்தாதியாகி-அதற்கு
அர்த்தம் கொண்டவளே!
ஆனந்த நடனத்தில்
ஆணவம் கொன்றவளே
இல்லை எனாது
ஈந்து மகிழ்த்தவளே!
உலக மாந்தருக்கு
ஊணளித்துக் காப்பவளே!
எத்திக்கும் புகழ் மணக்கும்
ஏந்திழையே எம் அன்னையே!
ஐங்கரனுக்கு அன்னையே!
ஒன்றாகி அய்யனுடன் நின்றானவளே!
ஓம்கார நாதத்தின் நாடியானவளே!
ஒளடதமாய் பிணிக்கு வந்தானவளே!
ஃ என எதற்கும் அந்தமானவளே!

போற்றி போற்றி உன் பொற் பாதமே!
பொறுத்தருள்வாய் என் பிழை யாவுமே!