traffic analytics

வியாழன், 28 மே, 2009

எங்க ஊர் பரிசல் கேப்டன் ..விஜயகாந்த்...!


தயவு செய்து தயாரிப்பாளர் யாரும் புது படத்துக்கு கேப்டனை புக் பண்ணிடாதிங்க.அப்புறம் கிடைச்ச முன் பணத்துல கேரவனைப் பிடித்து டீசல் போட்டு ஊரெல்லாம் சுற்றி தன்னைப் போலவே தமிழ்நாட்டையும் ,அதன் எதிர்காலத்தையும் கருப்பாக்க முயற்சி செய்வார்.

தனியாக நின்று ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகின்றது.அதையும் தாண்டி அக் கட்சி வேட்பாளர்கள் நிலை....எதை நம்பி அந்தக் கட்சியில் சீட் கேட்டார்கள் எனத்தெரியவில்லை.எத்தனை கைப்புள்ளைகைகள்.....!கேப்டனை உசுப்பேத்தி வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம்.கூட நின்ற வருத்தப் படாத வாலிபர் சங்க நிர்வாகிகளையும் உசுப்பேத்த ஒரு கூட்டம்.

ஓட்டுப்போட்டவர்கள் எதை சாதித்தார்கள்.பிரிச்சோம்ல...................அது ஒன்னுதான் மிச்சம்.ஓட்டுக்களை எங்களுக்கு போடுங்கள் எனக் கேட்பதை விட, இந்தமாதிரி வெட்டிகளுக்கு போடாதீர்கள் எனக் கேட்பதுதான் நல்லது.இல்லை என்றால் தமிழகத்தின் எதிர்காலமே டரியலாகி விடும்.

தமிழகத்திற்கு நல்லது செய்ய அவர் நினைத்தால்....... ஒரு யதார்த்தத்தை யோசிக்கட்டும்.சுய பரிசோதனைப் போல.இதுவரை அவர் நாட்டுக்கு செய்த நல்ல விஷயங்கள் என்ன?சுய விளம்பரம் பிடிக்கவில்லை என சொல்லி சொல்லி , தான் படிப்புக்கு உதவி செய்வதை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாயிற்று. அப்படி பட்டவர் இலவச கல்வி நிறுவனமா நடத்துகிறார்?

திரை உலகின் கதாநாயகன் என்கிற ஒரு அந்தஸ்த்து மட்டும் போதுமா.எம்.ஜி.ஆரைப் பற்றி பேசக் கூட தகுதி இல்லாதவர்கள் அவரின் இடத்த்திற்கு வர முயல்வதை என்னவென்று சொல்வது?அதனால் கிடைக்கும் ஓட்டுகள் ,எதற்கு பயன் படுகிறது.மக்களின் எதார்த்தத்தைக் கொன்று ,விரும்பாத ஆட்சி மீண்டும் வர உதவி இருக்கிறது.

ஆளும் கட்சிக்கு எவ்வளவு எதிர்ப்புகள்.அவ்வளவையும் தாண்டி ஜெயிக்க இவரும் ஒரு இமாலய காரணம்.அது மட்டும்தான் அவரின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பிற கட்சிகளுடன் சேராமல் தனியாகத்தான் முகாரி பாடிக் கொண்டிருப்பார்.

தனியாக நின்றால் டெபாஸிட் காலியாகும் எனத் தெரிந்தே நிற்பதன்நோக்கம்,ஆளும் கட்சியின் ஐந்தாம் படை என்கிற நிலையா?அப்பா.....!சினிமாவைத தவிர வெளியில் நன்றாகத் தான் நடிக்கிறார்கள்.ஓட்டுப் போட்டவனும் ,பின்னால் சென்று கூத்தாடி சீட் பிடித்து கை காசை செலவழித்த தொண்டனும்தான் ஏமாளி........!

அடுத்த தேர்தலுக்கு முன்னாவது உண்மை நிலை வெளிவந்தால் நல்லது.இல்லை என்றால் மீண்டும் எதிர் பாராத ஒரு தேர்தல் முடிவுதான் கிடைக்கும் மக்களின் வெறுப்போடு.

எங்கோ படித்த நினைவு..இப்படியே போனால் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை கேப்டனின் கட்சிக்கு வரும் என்று....!

போதும்இதோட நிறுத்திக்குவோம்....................!

முடியல..........!

ஓன்று மட்டும் உறுதி...கட்ட துரைக்கு கட்டம் சரி இல்ல.................!(கட்டதுரையை நம்பியவர்களுக்கு நேரம் சரி இல்ல)