traffic analytics

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

காதல்....

பல கோடி வருடங்களாக மாறமல் , கவர்ச்சியாய் யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்கும் தலைப்புகளில் ஒன்று கிடைத்தது அருமைதான்.ஷேக்ஸபியர் முதல் அனைவரும் ரசித்த காதல் ஆண்டோனி க்ளியோபட்ரா காதல்.




சமீபத்தில் அவர்கள் இருவரின் பதப்படுத்தப் பட்ட உடல்களைக் கண்டு பிடித்து விட்டதாக பிரபல தொல்lபொருள் ஆய்வாளர் ஸகி ஹவாஸ் அறிவித்துள்ளார்.

அலேக்சன்றியாவில் சுமார் சுமார் 50 . கி.மி. தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 22 நாணயங்களும் 10 பதப் படுத்தப் பட்ட உடல்களும் உடைந்த இரண்டு முக மூடிகளும் கண்டு பிடிக்கப் பட்டு , உலகின் பார்வைக்கு கொண்டு வரப் பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளாக தேடிய ஒரு விஷயம் வெளிவந்ததில் தொல் பொருள் ஆய்வாளர்களும் பழமை விரும்பிகளும் அவர்களின் வாழ்வைத் தெரிந்த எல்லோருக்கும் ஒரு நெகிழ்வான விஷயம்தான்.

கி.மு.51 ஆம் ஆண்டில் , எகிப்தில் ஆண்ட 12-ம தாலமி இறந்ததால் அவன் மகன் 13 -ம தாலமி அரசேரினான். தனது 18 வயது அக்காவுடன் சேர்ந்து ஆட்சியை கவனித்தவன், அவளை திருமணமும் செய்து கொண்டான். இது அவர்களின் பாரம்பரிய முறையாக இருந்தது.

மிகச் சிறிய வயதில் மத்திய தரைக் கடல் பகுதியில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டினாள். ரோமுடனான அவளின் தொடர்பே அவளின் சாம்ராஜ்யத்தின் முடிவை நிர்னயித்தது.

கி.மு.48 - 44 க்கு இடைப்பட்ட காலத்தில் ஜுலியஸ் செசாரின் படைகள் எகிப்தை முற்றுகை இட்டு தாலமி 13 -ஐ வென்றபின், இளம் அரசிக்கு தனது மனைவி அந்தஸ்த்தை வழங்கினார். 48- கடைசியில் செசார் ரோமை விட்டு சென்றதும் 47 -ல் அவரின் மகனை பெற்றெடுத்தாள்.46-ல் சிசர் அவரை ரோமுக்கு அழைக்க, மகனுடன் ரோம் சென்றாள். அங்கு நிம்மதி அவளுக்கு 44 வரைதான் கிடைத்தது.

சிசரின் படு கொலைக்கு பின் மீண்டும் எகிப்து திரும்பினாள்.41-ல் ரோம் படைகளை வழி நடத்தி ஆண்டோனி எகிப்தை நோக்கி கிழக்கு முகமாக ,சைட்ஸ் நதிக் கரையில் டாரசில் முகாமிட்டு இருந்தான். க்ளியோபற்றா -வை சந்திக்க வருமாறு அழைக்க, தெண்டனிடும் நோக்கில்லாமல் , தேவதை போல் அவனை காண சென்றாள்.





அதன் பின் அன்டோனியின் நிலை எல்லோரும் அறிந்ததுதான். வசந்த காலத்தில் போருக்கு வந்தவன் , அரசியின் அழைப்பிற்கு இணங்க அலெக்ஸான்ட்ரியா வந்து குளிர் காலம் வரையில் அவளின் விருந்தினராக , காதலனாக தங்கியிருந்து பின் நாடு திரும்பினான்.

காதலின் பரிசாக இரட்டைக் குழந்தைகளை பெற்றாள்.37-ல் சிரியாவில் அன்டோனி யை திருமணம் செய்து கொண்டாள்.மனைவிக்கு பரிசாக மத்திய கிழக்கின் பெரும் பகுதியை அவளுக்கு அளித்தான்.இருவரும் இணைந்து பொதுவான எதிரியான ஆக்டேவியனை எதிர் கொண்டார்கள்.

பல கிழக்கு நாடுகளில் அவர்கள் இருவரும் தெய்வீகமாக தோன்றலானர்கள். க்ரீக்கிர்க்கு டைநோஸஸ் மற்றும் அப்ரோடைட் ஆகவும் எகிப்தில் ஒரிசிஸ் மற்றும் ஐசிஸ் ஆகவும் தெரிந்தனர்.

34-ல் அலெஷந்த்ரியாவைச் சுற்றி இரு அடுக்கு அரசுக்கு போட்டி அதிகமானது.அன்டோனி மற்றும் க்ளியோபாற்ற இவர்களின் ஆட்சி பீடத்திற்கான போட்டி மற்றும் இவர்களின் நான்கு பிள்ளைகளின் அரசுக்கான ஆசை என அவர்களை சுற்றி ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்து இருந்தது.

எதிரிகள் ஒன்று கூட , போர்க்களம் உருவானது.செப்டெம்பர் மாதம் 31 ம தேதி ஆச்டவியனை எதிர்த்து கிளியோபற்ற போராடினாள். இரு தரப்பிலும் பல்லாயிரம் உயிர் இழப்புகள். ஒரு கூடுதல் தகுதியாக 400 பப்பல்கள் இருந்தன.ஆக்டேவியனிடம் 250 கப்பல்கள் என போர் உக்கிரம் அடைந்தது.அவர்களின் எதிரிகளின் கை ஓங்கியது.

அவர்களின் குழந்தைகள் அனைவரும் கொல்லப் பட்டார்கள்.
கடுமையான போராட்டத்தின் பின் அவர்கள் அலெக்ஸான்ட்ரியா வந்தனர். எதிரிகளிடம் சிக்கினால் கிடைக்கும் கொடுமையான , அவமானகரமான நிகழ்வுகளைதவிர்க்க இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள். அன்டோனி தன் வாளாலும் , அவள் தன்னை சிறிய விஷப் பாம்பை விட்டு தானாகவே கடிக்க விட்டும வாழ்வை முடித்துக் கொண்டார்கள்.

அவர்களின் இறுதி நிகழ்வுக்கு முன் அவர்களின் நிலையும் , அவர்களின் நினைவுகளும் ஷேக்ஸ்பியரில் அருமையாக விளக்கப் பட்டுள்ளன. தன்னை மிகவும் அலங்கரித்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக மரணத்தை நோக்கி முன்னேறி... சாவிலும் இணைந்து.... அதுதான் காதல்.

அவர்கள் காதலின் ஆழம் கண்டு அவர்களை ஒன்றாக சமாதியில் வைக்க ஆக்டேவியன் ஒப்புக் கொண்டான். அந்தக் கல்லறைதான் பல நூறு வருடங்களாக தேடப் பட்டு தற்சமயம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது....
விஷேஷமனதுதனே!