traffic analytics

வியாழன், 23 ஏப்ரல், 2009

ஆண்களுக்கான அழகு குறிப்பு .................


அழகைப் பராமரிப்பது என்பது நமது நாட்டில் பெண்களுக்கே இப்போதுதான் கைவந்துள்ளது. அழகைப் பராமரிப்பது என்பது எதோ குற்றம போல பார்க்கும் நமது சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள்.

வெயிலிலும் மழையிலும் பெண்களை விட ஆண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.ஆரோக்கியம் + அழகு நிறைவான தன்னம்பிக்கையைத் தரும். அதற்க்காக தினமும் அல்லது வாரம் ஒரு முறை ஒரு அரை மணி நேரம் ஒதுக்கலாமே.

நேரம் கிடைக்கவில்லை.....?அதற்காக சாப்பிடாமல் இருக்கிறோமா?டி.வி.பார்க்காமல் இருக்கிறோமா? இந்த அரை மணி நேரத்தில் கிடைக்கும் தன் நம்பிக்கை யாராலும் கொடுத்துவிட முடியாது.

ஆண்களுக்கான ஒரு நல்ல அழகுச் சாதனம் எண்ணை -- நல்லெண்ணைக் குளியல் மிகச் சிறப்பான ஒரு முறை.இந்த வெயில் காலங்களில் 300 மிலி எண்ணை போதும்.நாமாகவே தலை முதல் பதம் வரைத் தேய்த்து ,குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைத்து சீகக்காய், கடினம் என்றால் மீரா தேய்த்துக் குளித்துப் பாருங்கள். குளிர்ச்சி சேராதவர்கள் அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து சூடாக்கி தேய்க்கலாம்.

நமது நிறம்தான் நமக்கு பிரச்சனையே. ஆனால் பிரச்சனை அதுவல்ல. முக்கியம் தோல்தான்.அதனை பளபளப்பாக (complxion) பார்த்து வந்தாலே போதும். கடுகு எண்ணை மிகச் சிறப்பான வழி முறை.வட இந்தியர்களின் நிறம் அந்த பளபளப்பின் ஆதி ரகசியம் இதுதான்.விலையும் அதிகமில்லை. குளிப்பதற்கு கால் மணிநேரத்தி்ற்கு முன் நன்றாக அழுத்தி தேய்த்தது விட்டு பின் குளித்து பாருங்கள்.

நமது சருமத்தில் இறந்தத செல்கள் மேலும் மேலும் படிவதால் சருமம் கடினமாகி, பொலிவிழந்து போகின்றது. பாத்திரங்களில் அழுக்கு சேர்ந்துகொண்டே இருந்தால்....அதுபோலத்தான் இதுவும்.கடுகு எண்ணை இறந்த செல்களை நீக்கும். போட்டவுடன் எரிச்சலாக இருக்கும்.பயப்பட வேண்டாம்.கண்களை மூடி அமரும் நிலைக்கு தயார் செய்து கொண்டு போடுங்கள்.

அரைக்கை சட்டை போடுபவர்கள் கைகளுக்கும் போடலாம்.வீட்டில் பெண்களிடம் முல்தாநிமிட்டி வாங்கி வைக்கச் சொல்லுங்கள்.எண்ணை சருமமாக இருந்தால் அதனுடன் எலுமிச்சை, தக்காளிச் சாறு, தயிர் போன்றவை சேர்த்து போட்டு 20 நிமிடம் ஊரவையுங்கள். வறண்ட சருமம் ஆனால் பால் , பாலாடை சேருங்கள்.பொதுவாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.ஒன்றும் இல்லையானால் வெறும் முல்தாநிமிட்டியே தண்ணீர் சேர்த்துப் போடலாம்.

முகத்தின் அழுக்குகள் வெளியேறுவது ஓன்று, மற்றும் வெயில் ஆகியவற்றால் வியர்வைத்துவாரங்கள் விரிவடைந்து , அதனுள் கிருமிகள் நுழைய வாய்ப்புள்ளதால் , டோனர் வாங்கி உபயோகியுங்கள்.எல்லா பெரிய மார்க்கெட்டுகளில் கண்டிப்பாக கிடைக்கும். வீட்டு பலசரக்கு வாங்கும் பொழுது அது, முல்தானி மிட்டி போன்றவையும் சேர்த்து வங்க சொல்லுங்கள்.

இல்லையானால் பெண்கள் வாங்கி வைத்திருப்பார்கள்.கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.ரோஸ் வாட்டர் இந்த வெயில் காலத்தில் கண்டிப்பாக அணைவர் வீட்டில் இருக்க வேண்டிய ஒன்று.

கண்களில் எரிச்சல் , எண்ணைக் குளியல் சிறந்த மருந்து.அதற்கும் கட்டுப்படவில்லையானால் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிட்டு பாருங்கள்.

டை போடுபவர்கள் முடிந்தவரை தரமானதை உபயோகிக்கலாம்.அது விலை அதிகம் என தோன்றினால், நீங்கள் உபயோகிக்கும் டையுடன் ஒரு முட்டையை கலந்து பின் தலையில் தடவுங்கள். கண் எரிச்சல், முடிக்கு தீங்கும் வராது.

நிறம் கூட்டும் என சொல்லும் எந்த க்ரீமையும் நம்பாதீர்கள்.சர்ஜரி தவிர வேறு எதற்கும் நிறத்தை மாற்ற முடியாது.இருக்கும் நிறத்தை சரியாக பராமரித்தாலே அழகு தானே வரும். சுத்தமாக வைத்திருந்தாலே அழகு தானே வரும். இரண்டு நேரம் குளிப்பது இல்லை சுத்தம், எப்படி குளிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

நிறைய தண்ணீரும் , பழங்களும் நிறத்தின் மெருகைக் கூட்டும். குளிக்கும் முன் எண்ணை தேய்த்து குளியுங்கள்.குளித்தபின் தேய்த்தால், அந்த எண்ணை பிசுக்கில் தூசுகளும் மாசுகளும் சேர்ந்து பொடுகு ஏற்படும்.பின் முடிக்கு ஏற்படும் கதி அதோ கதிதான்.

முடி உதிர்தல் , முதல் காரணம் பொடுகுதான். டென்சன்,ஷாம்பூக்களை அடிக்கடி மாற்றுவது,தண்ணீர் அடிக்கடி மாறுவதும் காரணம். வெளி ஊர்களுக்கு அடிக்கடி செல்பவர்கள்,குளித்து முடித்து கடைசியில்,மினரல் வாட்டர் இருந்தால் இரண்டு டம்பளர் அளவுக்கு தலையில் விட்டு அலசி பின் உலர்த்துங்கள்.

கொஞ்சம் அதிகம்தான், ஆனாலும் எவ்வளவு தண்ணிக்கு செலவழிக்கிறோம்....தவறாக சொல்லவில்லை என நினைக்கிறேன்.
.........................இன்னும் வரும்.

10 கருத்துகள்:

தராசு சொன்னது…

சொன்னாலும் சொல்லாட்டியும் ஆண்கள் எப்பவுமே அழகுதான். தனியா நாங்க எங்களை அழகு படுத்திக்க மாட்டோம்.

எட்வின் சொன்னது…

//இருக்கும் நிறத்தை சரியாக பராமரித்தாலே அழகு தானே வரும். சுத்தமாக வைத்திருந்தாலே அழகு தானே வரும்//

மிகச்சரி.

நான் க்ரீம்,பவுடர் உபயோகித்து 10 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது.என்ன தான் தடவினாலும்,அப்பினாலும் கலர் மாறாதுன்னு தெரிஞ்சது நால தான் :)

தமிழ்நெஞ்சம் சொன்னது…

நானும் பவுடர் எல்லாம் பூசி ஆண்டுகள் பல கடந்துருச்சு.

எப்போ குழந்தை குட்டின்னு ஆகிருச்சோ, அப்போதே இதெல்லாம் உட்டுட்டேன்.

தங்கம் வைத்துத் தேய்த்தாலும் (இந்தத்) தமிழ்நெஞ்சத்தின் கலர் மாறவா போகுது(!)
@#$@#%^&*%&*(%^^@$%#$%!@#$

" உழவன் " " Uzhavan " சொன்னது…

ஆஹா.. ஆண்களுக்காக இப்படியொரு அழகான அழகுக்குறிப்பா.. ரொம்ப நன்றி.
முல்தாநிமிட்டி, டோனர் - இதெல்லாம் என்னதுங்க? பார்த்ததே இல்ல.

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

இதுக்கு மேலேயுமா அழகு வேணும்...

deiveegan சொன்னது…

andava enna yan azhaga padacha!

JJ சொன்னது…

உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு..நாளைல இருந்து என் வீட்டுக்காரருக்கு சோதனையை ஆரம்பிக்க போறேன்.. நன்றி..

puviyarasan jothyvarman சொன்னது…

Enna pottalum muga paru poitu udane vanthuduthu ethachum niranthara theervu sollunga pls

Ayisha சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ayisha சொன்னது…

Dear Mr.puvarasan send your age and nature of job and skin type to my Id ayishaistimeva@gmail.com,please