traffic analytics

செவ்வாய், 31 மார்ச், 2009

பொழுது போக்கு இல்லை போக்கும் சேனல்கள்...


நம் பெண்களை எவ்வளவு நாள் இப்படியே வைக்க போகிறார்கள்.ஒரு தலை முறைக்கு முன் உலக அறிவு பெண்ணுக்கு தெரியாது அல்லது தேவை இல்லை என்று எண்ணம் இருந்தது.வெளி இடங்களில் வேலைக்கும் பெண்கள் கொஞ்சம் பேர் அறிவை நன்றாக , ஆண்களுக்கு இணையாக திறமையை வளர்த்துக்கொண்டார்கள் .கொஞ்சம் பேருக்கு பேருக்கு விருமபவிட்டாலும் தானாகவே பல விஷயங்கள் காதில் விழுந்து முன்னேற்றம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் தங்களது அறிவை பெருக்க முயன்ற போது நிறைய புத்தகங்கள் உதவி செய்தன.ஆனால் இப்போது பத்திரிக்கை ,புத்தகமும் படிக்கும் பழக்கம் முற்றிலும் மறந்து போய்,அடுத்த வீட்டு பெண்களுடன் பேசுவதும் குறைந்து போய் (அதனால் வம்புகள் குறைந்தது வேறு விஷயம்) சக மனிதர்களின் தொடர்பை இழந்து முழுவதும் டிவி யில் ஐக்கியமாகி சுயத்தை இழந்து நிற்கிறார்கள்.
பஸ் ,ரயில்,என எல்லா பொது இடங்களிலும் நெடுந்தொடர்கள் பற்றியே பேச்சு...தவறுகள் எங்கே நடக்கின்றன? நெடுந்தொடர்களை தயாரிக்கும் நிர்வாகிகளின் திறமையை நம் பெண்கள் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும்.ராதிகா தேவயானி,குஷ்பூ..................திறமைசாலிகள்.தங்களுக்கு தெரிந்த துறையில் சம்பாதிக்கும் திறமைசாலிகள்.
நமக்கு உள்ள திறமையை என்றாவது பெண்கள்நினைத்து யோசிக்க ஆரம்பித்தால் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் மட்டுமே நடக்கும்.
இப்போது பிரச்சனை யோசிக்க வைப்பது எப்படி என்றுதான்? அதற்கும் ஒரு நெடுந்தொடர் எடுக்க வேண்டி இருக்குமோ?.

அரசியல் நாகரீகம் .......!


தன்னை விட்டு விலகி போனபின் போனவர்கள் பற்றி பேசாமல் இருப்பதுதான் , உடன் இருந்தோர்க்கு நலம். பந்தை சுவற்றில் எறிந்தால் திரும்பவும் வரத்தானே செய்யும். தன்னை பழமை மிக்க தலைவராக, எல்லோரும் மதிக்கும் தலைவராக முன்னிறுத்த முயலும்போது,அரசியல் நாகரீகத்தை முதலில் கடைபிடிக்க வேண்டாமா? ஒருவர் சொல்லித்தான் அடுத்தவரை பற்றி தெரிய வேண்டியது இல்லை.மக்கள் முட்டாள்கள் இல்லை,மீடியாக்களும் சாதரணமாக இல்லை!
நீங்கள் ஒன்றை சொன்னால் எதிர்பவர் ஒன்று சொல்ல, பாதிப்பு என்னவோ உங்களுக்குக்தான். முதலில் சொன்ன உங்கள் வாதம் அடங்கி...... எதிராக வந்த வாதம் நிலைத்து போய் ...தேவையா இதெல்லாம்?
பழயதை மக்கள் நினைக்க ஆரம்பித்தால் நீங்கள் யாராவது மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? புலம்புவதை விடுங்கள்.மக்கள் உள்ளத்தில் நல்லதை அவர்களே எடுத்து கொள்வார்கள்.உள்ள பெயரையும் கெடுத்துக்கொள்ளதீர்கள்.உடன் இருப்பவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்களா தமையிடத்தில்? அனைத்து கட்சிகளிலும் இதுதான் நடக்கிறது? நல்லவர்களை, புத்திசாலிகளை,மனிதாபிமானம் மிக்கவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.அனைத்து தேர்தல்களிலும் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். நடக்கிற காரியமா?

திங்கள், 30 மார்ச், 2009

வாக்களிக்கும் உரிமை மற்றும் கடமை.....



நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? அறிவுபூர்வமான உயர் தட்டு மக்களின் எண்ணம் இது என்ற தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது.
உள்ளது எல்லாம் உயர்வுள்ளல்.... சரிதானே?
தன்னைப்பற்றி மட்டுமே நினைக்கும் மக்களை உயர்ந்தோர் எனலாமா? இவர்களை மண்வெட்டி எடுத்து நிலத்தை வெட்டவா சொல்கிறோம்? ஒட்டு போடுவது அடுத்தவன் சொல்லிதான் போடுவார்களா? பிரச்சனை என்றவுடன் பேனாவும் பேப்பருமாக ஹிந்து வுக்கு எழுதும் அறிவு ஜீவிகள் யோசிக்க வேண்டியது இது!
வெயிலில் வரிசையில் நின்று ஒட்டு போடுபவன் ஏமாளி.ஓட்டு வாங்கி ஜெயித்தவனை பற்றி விமரிசனம் செய்து விட்டு,அவனால் கிடைக்கும் நன்மைகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு, காரியம் சாதிக்க ஜெயித்தவன் காலை பிடித்து காக்கா பிடிக்கும் இந்த மேல் தட்டு எண்ணம் தேவையா?
மேல் தட்டு எண்ணம் என்ற ஒன்றை நாம்தானே உருவாக்கினோம்.சங்க இலக்கியத்தில் எல்லாம் இது இல்லையே! உயர்வான எண்ணம்தான் வேண்டுமே தவிர உயர்வானவர்களின் எண்ணம் வேண்டாமே!
ஒட்டு போடுவது நமக்காகத்தானே தவிர வேறு யாருக்கும் இல்லை.
நான் உழைக்கிறேன்.நான் சாப்பிடுகிறேன்.எதற்கு ஒட்டு போட வேண்டும்?
மிகவும் எதார்த்தமான ஒன்றுதான்.சரி .நாளை பாகிஸ்தானில் இருந்து போர்
வந்தால் ,நீயாக உழைக்கிறாய் சாப்பிடுகிறாய் என விட்டுவிட மாட்டான்.இந்தியன் என்று உன்னயும்தன் அழிப்பான்! அன்று உன்னையும் காக்க இந்த நாடுதான் வரும். நீ ஒட்டு போட்டாலும் இல்லாவிட்டலும்.அன்றும் ஏதோ ஒரு கட்சியின் ஆட்சி நடக்கும்.பெற்ற தாயையும் பிறந்த பொன் நாட்டையும் மறந்தவன் மனிதனே அல்ல.மனிதனாக நடப்போம்.வாக்களியுங்கள்.

ஞாயிறு, 29 மார்ச், 2009

அரசியல் நாகரீகம்....


என தேடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு தலைவர் பேசி இருக்கிறார். இவர் ஐந்து வருடம் சேலை துவைப்பார், ஐந்து வருடம் வேட்டி துவைப்பார். எனக்கும் அந்த தலைவர் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனாலும் இது சினிமா இல்லை. நமக்கு ஆதரவாளர் தேடுவது தவறு இல்லை. ஆனால் எதிரிகளை தேட வேண்டாமே. மரியாதையை கொடுப்பது தவறு இல்லை என எல்லோரும் புரிந்து செயல் பட்டால் எல்லாருக்கும் நல்லது. அரசியல் வாதிகள் எல்லாரும் மக்களை கவரதானே முயற்சிக்கிறீர்கள். நாகரீகமாக நடங்கள், மற்றவர்களை மதியுங்கள்.

இன்றைய இசை

http://www.youtube.com/watch?v=REElUors1pQ

சனி, 28 மார்ச், 2009

திருட்டு VCD மற்றும் நாமும் .





குற்றம்
பார்த்தவன் மீதா? படைத்தவன் மீதா? தொழிலுக்காக ஒருவன் செய்கிறான் . ஆனாலும் தவறுதான். தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதனால் தன் சக தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சகல பதிப்புகளும் தெரிந்தவர்கள் தொழில் போட்டியல் திருட்டு விசிடி தயாரித்தால் யாரை குற்றம் சொல்வது. இணைய தளத்தில் புதிய படங்களை வெளியிடுவோர் யார்? பாவப்பட்டவர்கள் இல்லையே!
தடுப்பதற்கு ஒரே வழி .எனக்கு தெரிந்தது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை, தொழிலாளர் படும் கஷ்டங்களை, தயாரிப்பாளர் மற்றும் சார்ந்தவர்கள் படும் பாதிப்புகளை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லுங்கள்.
மீடியா உங்களுடையது.தெளிவாக சொல்ல வேண்டியதுதானே.காமடி நடிகர்கள் மட்டும் சொன்னால் போதுமா? கதா நாயகனுக்கு பங்கில்லையா?
மேலோட்டமாக சொல்லாதீர்கள்.ஆழமாக சொல்லுங்கள். நம் சினிமா சொல்லி மக்கள் கேட்க மாட்டர்களா? அதனால் ஏற்படும் அழமான பதிப்புகள்,பண பிரச்சனைகள்,அதனால் சினிமாவை சார்ந்த குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புக்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பதிப்புகள் என எடுத்து சொல்லுங்கள்! பலன் கை மேல் தெரியும். எனக்கு ஒரு கண் போனால் உனக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைப்போர் இருக்குவரை இந்த பிரச்சனை தீராது!

வெள்ளி, 27 மார்ச், 2009

தமிழ் செய்தி சானல்கள்

சரியாக தங்கள் கடமைகளை செய்கின்றனவா? பிரபலமான பிற செய்தி சானல்களின் அரங்க அமைப்புகளை பிரதிபலிப்பதை விட வேறு வேலை ஒன்றும் இல்லை என நினைக்கிறார்கள். சரியான செய்திகள் மக்களை அடைகின்றனவா? மக்களின் உண்மையான அறிவு வளர்ச்சிக்கு என்ன செயதின்றார்கள். எல்லாரும் திராவிட பாரம்பரியம்தான். அதற்க்காக தமிழ் நாட்டு செய்திகள் மட்டுமே...! அதுவும் கட்சி சார்புடன். வட இந்தியா செய்தி சானல்களில் வரும் செய்திகள் இங்கே வருவது மிகவும் கால தாமதமாக! சில விஷயங்கள் இங்கு வருவதே இல்லை.
இரண்டு சானல்களையும் பார்ப்பவர்களுக்கு புரியும். இங்கு உள்ளவர்கள் அறிவு வளர்ச்சி பெரிவது பிடிக்கவில்லையா. அல்லது நடத்துபவர்களின் வளர்ச்சியே அவ்வளவுதானா?பெரும்பான்மை மக்கள் இப்போது தமிழ் aஅங்கிலம் படிப்பவர்கள்.அறிவு வளர ஆங்கில சானல்கள் மட்டுமே பார்க்கும் நிலை உருவாவதில் நிச்சயம் சந்தோசம் இல்லை என சானல்களுக்கு புரியும்.
கொஞ்சம் கூடுதல் அக்கறை ,தரமான ,அறிவான ,நேர்மையான கட்சி சார்பற்ற நிருபர்கள் இருந்தாலே பாதி பிரச்சனை தீரும். மீதி பிரச்சனை அது நடத்துபவர்களின் அறிவு சார்ந்த விஷயம்.மன சாட்சியுடன் சொல்லுங்கள் தமிழில் எது சரியான செய்தி சானல்.? வளரும்.............!

இன்றைய இசை

http://www.youtube.com/watch?v=4NKmnfCGEX0

வியாழன், 26 மார்ச், 2009

WE ARE FROM OUR OWN NATION

WE ARE FROM OUR OWN NATION

இன்றைய இசை

http://www.youtube.com/watch?v=2KjvtD8UZW4

கூட்டணிகள் சந்தர்ப்பவாதமா?

ஏகப்பட்ட குழப்பங்கள். பெரிய மற்றும் சிறிய கட்சிகளுக்கு.காரணம் அவர்கள் மட்டுமா?நாமும்தான்.அணி மாறும் கட்சிகளுக்கு இருக்கும் ஒட்டு வங்கிகள். அணி மாறினாலும் ஒட்டு மாறாத நிலைதான் காரணம்.அணி மாறினால் ஓட்டு போடாமல் இருந்தால் யார் மாறுவார்? பயம் வருமே! ஒட்டு போடும் தொண்டனுக்கும் அபிமாநிக்கும் லாபம் ஏதும் இல்லை. நம் ஓட்டை வைத்து வியாபாரம் பேசும் கட்சிகளுக்குதான் லாபமே. ஓட்டளிக்கும் உரிமை மட்டுமே நமக்கு.லாபநோக்கில்லாத ஓட்டை நாட்டுக்காக பயன்படுத்தலாமே.இவர்களுக்கு ஒரு படம் சொல்லிதரலமே?
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது
எதற்கு?நீ என்ன செய்தாய் அதற்க்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு?
ஓட்டை நாட்டுக்காக பயன்படுத்துங்கள்.நமக்கு இல்லையென்றால் நாட்டுக்காவது நல்லது நடக்கட்டும்.வாழ்த்துக்கள்.

புதன், 25 மார்ச், 2009

தேர்தல்நாம் .

நினைவுக்கு வரும் சில வரிகள் .அப்துல் ரஹ்மான் சொல்லுவார் சிங்கத்தினை அடக்க எலிக்கு ஓட்டுபோட அதுவும் பிடரியில் மயிர் முளைத்து சிங்கம் ஆனது என்று!எல்லோரும் ஒன்றுதான் அரசியலில்.நம்பிக்கைகள் மட்டுமே நிற்க களங்கள் , காலங்கள் கடக்கின்றன.பிறருடன் நம்மை ஒப்பிட்டு பார்த்து திருப்தி அடைய வேண்டியதுதான்.அரசியல்வாதிக்கு மட்டுமல்ல நமக்கும் பிடரியில் மயிர் முளைக்கும் அரசியல் வாழ்வு கிடைத்தால்.அவரவர் நிலையில் நின்று பார்த்தால் நியாயம் புரியும் .உள்ளத்தில் நல்லதை எடுப்பதில் தவறில்லை.நம் நாடு அல்லவா.தவறாமல் வாக்களியுங்கள்.வாழ்த்துக்கள்.

செவ்வாய், 24 மார்ச், 2009

நானோ கார் ஒரு பார்வை என்னுடைய பார்வைகள்

ப்ளஸ் மட்டுமே பத்திரிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பல வருடங்களாக கார் வைத்திருக்கும் சராசரி இந்தியா குடும்பம் என்பதனால் சொல்கிறேன்.நானோ வாங்கும் கார் பற்றிய எந்த கருதும் தெரியாத அப்பாவிகளிடம் காரின் நல்ல மற்றும் எதிர் விளைவுகள் பற்றி பேசினால் நல்லது.
பல வருடம் கார் வைத்திருப்பவர்கள் அதிகப்படியான தேவைக்கு ஒரு கார் வாங்கும்போது நானோ சரியான தேர்வு.பிள்ளைகளுக்கு,வீட்டில் காய்கறி வங்க மற்றும் இது போன்ற வேலைகள் இரு சக்கர வாகனத்திற்கு பதில் சரிதான்.ஆனால் குடும்ம்ப தேவைக்கு இது போதுமா.சாமான்களை வைக்கும் அளவிற்கு கூட இடம் இல்லாமல் போகும்.சிறிய ரக கார்களை வைத்திருப்பவர்களை கேளுங்கள் புறியும் .
.

திங்கள், 23 மார்ச், 2009

ஐ பி எல் போட்டிகள்

இந்தியாவில் ஐ பி எல் போட்டிகள் நடத்த மத்திய அரசு பாதுகாப்பு உதவிகள் செய்யவில்லை.பாதுகாப்பு முக்கியம்தான் என்றாலும் உலக அரங்கில் நம் நாட்டின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் ஏற்படாதா? நாளை உலக கோப்பை இதனால் நமக்கு கிடைக்கவில்லையானால் ......? ஏன் இப்படி நம்மை நாமே தரம் தாழ்த்தி கொண்டோம்? நம் நாட்டிலே ஏற்பாடு செய்த போட்டிகளுக்கே பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் உலக கோப்பைக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பிர்கள் .
ஜீவா ப்ளோரா