traffic analytics

சனி, 13 ஜூன், 2009

நோ அட்வைஸ் ...ஜஸ்ட் .....எ......மெசேஜ் ....

சார்லஸ் ட்ரவ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின் படி ,இதய நோய் வருவதற்க்கான காரணிகளுள் சிகிரட்டிற்க்கும் பங்கு உண்டு என்பதுதான்.கடந்த 12-ம தேதி ,91 -வது மாநாட்டில் நேற்று வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி வெளியிட்ட விஷயங்கள்தான் இது.

என்டோகிரைன் சொசைட்டியின் 91-வது வருடாந்திரக் கூட்டம் வாஷிங்டனில் நடந்த சமயம் வெளி இடப்பட்ட முடிவுகள் இவை . சிகிரெட்டில் உள்ள நிக்கோடின் என்கிற நச்சுப்பொருள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை -சாதரண நிலையில் இருந்து குறைக்கும் தன்மை கொண்டது.சர்க்கரை நோய் பதிக்காத மனிதர்களுக்கு கூட ,இன்சுலின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்க்கு உண்டு.இதய நோயின் தீவிரத்திற்கும் இன்சுலின் மற்றும் க்ளுகோசின் அளவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.



இப் பல்கலைக்கழகத்தின் முதன்மை எந்டொக்ரையாலஜிஸ்ட் திரு தியோதேர் ப்ரீட்மேன் , நிக்கொடினுக்கும் இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார்.கார்டியாவஸ்குலர் நோய்க்கு காரணமான உடல் மெலிந்து போவதற்கு நிக்கொடினும் ஒரு காரணம்தான்.

சோதனையில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக எலி ஒன்றுக்கு ,தினமும் இருவேளை நிக்கோடின் செலுத்தப்பட்டு சோதனை செய்து பார்த்ததில்,உடல் மெலிந்து சாப்பிடும் உணவின் அளவும் குறைத்து போனது.சாதரண நிலையில் இருக்கும் எலிகளை விட மிக மந்தமான செயல் பாடுகள் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இத்துடன் என்று இல்லாமல்,க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் சமன் பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் சாதரணமானவர்களுக்கு இருப்பதை விட ,க்ளுகோஸ்-ன் அளவு சிகிரெட் குடிப்பவர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.இந்த நிலைப் பாடு இதய நோயின் முதல் எதிரி.

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சிகிரெட் குடிப்பவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு.பிற காரணிகளும் இதில் அடிப் படையாக இருப்பதால் இதனை மட்டுமே காரணமாக சொல்ல முடிவதில்லை.

ஆய்வுகளின் முடிவில் எலியின் உடம்பில் சர்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது.நிக்கொடினால் ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு போதுமான மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை என்பதே உண்மை.

கான்ஸரை விட இதய பதிப்புகளால் அமெரிக்காவில் இறப்பவர்கள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன.தொற்றில்ல நோய்கள் பட்டியலில் இதற்க்கு முதலிடம்தான்.ரத்தத்தில் வேகமாக கலந்து,மூளையை எட்ட அது எடுத்துக் கொள்ளும் காலம் வெறும் ஏழு நொடிகள்தான். ஒவ்வொரு சிகிரேட்டிலும் சராசரியாக 1mg நிக்கோடின் உள்ளது.

ஹெராயின் மற்றும் கொகைன் இரண்டிற்கும் சற்றும் குறைவில்லாத பாதிப்புகளை நிக்கோடின் ஏற்ப்படுத்தும். எந்த வகையில் புகையிலை எடுத்துக் கொண்டாலும் பாதிப்பு ஒன்றுதான்.

LD50 அளவுள்ள 50 MG/KG பெருச்சாளிகளுக்கும், 3mg/KG சுண்டெலிகளுக்கும் 40–60 mg (0.5-1.0 mg/kg) மனிதர்களுக்கும் உயிரை எடுக்க போதுமானது.

இன்னும் தகவல்கள் தெரிந்து கொள்ளுங்களேன்.சிகிரெட் குடிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.