சனி, 25 ஏப்ரல், 2009
சாத்தானின் வேதம்.................1
ஒரு இடுகையைப் படிக்க நேர்ந்தது.அதற்கு பின்னுட்டம் எழுதுவதைவிட பதில் சொல்வதுதான் மேல். எனக்கு பிடிக்காத ஒன்றைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுத உரிமை உள்ள போது, பிடித்த ஒன்றைப் பற்றியும் பேச உரிமை உண்டு தானே?
ஒரு விஷையம் அதிகம் பேரால் விரும்பப்படுகின்றது....எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அவர்களில் 0.01%தான என்றால் விரும்பப் படுகிற விஷயம் சரியானதா? அல்லது எதிர்ப்பவர்களின் நிலை சரியானதா?வாக்களிப்பில் முதல் சுற்றிலேயே வெளியேறும் நிலை.....பாவம்...!
கோடிக்கனக்கான முட்டாள்கள்...அப்புறம் எதிர்த்தால் மட்டும் புத்திசாலித்தனம் ஆகி விடுமா? கிரிக்கெட் பற்றி நண்பருக்கு அவ்வளவு கோபம் ஏன் என தெரியவில்லை. விளையாட்டு என்பதே விளையாட்டு தனமானதுதான்.ஆராயக் கூடாது ....அனுபவிக்கனும்......!இதில் ஹாக்கி என்ன? புட் பால் என்ன?
அது என்ன இரண்டு பேர் மட்டும் நின்று டொக்...டொக் என தட்டிக்கொண்டு...?எனக் கேடபவர்களுக்கு. சரி அப்படியானால் ஒரு சாதரண பந்தை அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசிக்கு வேக வேகமாக ஓடி ஒரு வலைக்குள் பந்தை போடுவது ......ரொம்ப லாஜிக் இல்ல?
படித்தவர்கள் எல்லாமே இதற்க்கு அடிமை என்கிறார்...அப்படியானால் படித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள்.... எதிர்த்தால் மட்டும் புத்திசாலிகளா?கிரிக்கெட்டைத் தெரிந்தவர்கள் யாரும் பிற விளையாட்டுகளைப் பற்றி இவ்வாறு விமரிசித்ததாக தெரியவில்லை.
அவரவர்க்கு பிடித்ததை ரசிப்பதில் அடுத்தவர் தடை போடவோ , குறை சொல்லவோ உரிமை இல்லை.
தேசப் பற்று இல்லாதவர்கள்....!தேசப்பற்றை ...சொல்லப் போனால் சாதாரண குடிமகனுக்கும் தற்சமயம் உருவாக்கிய பெறுமை கண்டிப்பாக கிரிக்கெட்டுக்கு உண்டு.கார்கிலுக்கு எவ்வளவு ரத்தம் கொதித்து.அதில் எங்குமே விரிசல் இல்லை.இது என் நாடு.அது கிரிக்கெட் ஆனாலும் ,போர் ஆனாலும் சரி.சாதாரண சராசரி மனிதனின் தேசப் பற்றை என்றும் , யாரும் சந்தேகிக்க வேண்டாம்.அதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
நேரம் வீணாகிறது......!போன தலை முறையை விட அறிவும், பொறுப்பும்,நாட்டுப்பற்றும் அதிகமாக கொண்ட இத்தலைமுறைக்கு, தன் நேரத்தின் அருமை நன்றாக தெரியும்.தன் தூக்கத்தையும் , ஓய்வையும் ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் அவன் விளையாட்டை ரசிக்கிறானே தவிர யாருடைய நேரத்தையும் அவன் எடுத்துக் கொள்வதில்லை.
விளையாட்டை வைத்து சம்பாரிக்கிரார்கள்.....!அது அவர்களின் திறமை.உங்களுக்கு திறமை இருந்து , உங்களுக்கும் அப்படி வாய்ப்பு வந்தால்....மாட்டேன்...நான் சுய மரியாதை உள்ளவன் என்கின்றீர்களா?
தயவு செய்து தொழிலையும் சுயமரியாதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
இந்தியாவில் பிரச்சினைகள் அதிகம்...அதைத் தீருங்கள்....!நியாயமான ஒன்றுதான்.எங்கள் நாட்டைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லையா?என்ன அக்கறை இல்லை.வெள்ளமோ , இயற்க்கை பேரழிவுகளோ எதுவந்தாலும் யாருடைய உதவியும் வேண்டாம் என சொல்லும் அளவில் வைத்திருப்பது எங்கள் மக்கள்தானே.
சூதாட்டம் .......நாங்கள் ரசிப்பது விளையாட்டை மட்டும்தான்.ஏமாற்ற நினைத்தால் விட்டு எறிய ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டோம்.அதை ஏமாற்ற நினைத்தவர்கள் அறிவர். புல்லுருவிகள் எங்கு இல்லை.பட்ட மரம்தான் கல்லடி படும் .நிறைய அபிமானமும் ரசிகர்களும் இருப்பதால்தான் இந்த பிரச்சனை.அது இல்லாமல் இருந்தால் யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
தேசிய விளையாட்டு...அதற்க்காக என்ன செய்ய முடியும்.மதிக்க மட்டும்தான் முடியும்.பிடித்ததை மட்டுதான் ரசிக்க முடியும்.மிகவும் நினைத்து கவலைப் படும் விஷயமாக எனக்கு இது தோன்ற வில்லை.ரசிப்பவனுக்கு என்ன கிடைக்கும்?பணமா?புகழா?ஒன்றும் இல்லை.பின் ஏன் பார்க்க வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு, மன சந்தோசம்,என் நாடு ஜெயிக்கிறது,என் அபிமான வீரன் ஜெயிக்கிறான் என்கின்ற சந்தோசத்தை , மனதில் ஏற்படும் பரவசத்தை வேறு யாராலும் கொடுக்க முடியுமா?
போதை போல என்று சொல்லியிருக்கிறார்.அதிகம் பிடிக்கும் எந்த ஒரு விஷயமும் அவரவர்க்கு போதைதான்.நமக்கு பிடித்த நம் தமிழும் கூட நம் போதைதான்.பிடித்த விஷயங்கள் மாறலாம்.அடிப்படை அலகு என்னவோ ஒன்றுதான்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும்.அது மனம் சார்ந்த விஷயம்.தனக்கு பிடிக்காவிட்டால் எல்லாம் சரி என்கிற எண்ணம் சரியா?
இனியாவது உங்களுக்கு பிடிக்காத கிரிக்கெட்டைப் பற்றி எழுதாமல் , உங்களுக்கு பிடித்த ஹாக்கி பற்றி எழுதுங்கள்.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)