குற்றம் பார்த்தவன் மீதா? படைத்தவன் மீதா? தொழிலுக்காக ஒருவன் செய்கிறான் . ஆனாலும் தவறுதான். தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதனால் தன் சக தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சகல பதிப்புகளும் தெரிந்தவர்கள் தொழில் போட்டியல் திருட்டு விசிடி தயாரித்தால் யாரை குற்றம் சொல்வது. இணைய தளத்தில் புதிய படங்களை வெளியிடுவோர் யார்? பாவப்பட்டவர்கள் இல்லையே!
தடுப்பதற்கு ஒரே வழி .எனக்கு தெரிந்தது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை, தொழிலாளர் படும் கஷ்டங்களை, தயாரிப்பாளர் மற்றும் சார்ந்தவர்கள் படும் பாதிப்புகளை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லுங்கள்.
மீடியா உங்களுடையது.தெளிவாக சொல்ல வேண்டியதுதானே.காமடி நடிகர்கள் மட்டும் சொன்னால் போதுமா? கதா நாயகனுக்கு பங்கில்லையா?
மேலோட்டமாக சொல்லாதீர்கள்.ஆழமாக சொல்லுங்கள். நம் சினிமா சொல்லி மக்கள் கேட்க மாட்டர்களா? அதனால் ஏற்படும் அழமான பதிப்புகள்,பண பிரச்சனைகள்,அதனால் சினிமாவை சார்ந்த குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புக்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பதிப்புகள் என எடுத்து சொல்லுங்கள்! பலன் கை மேல் தெரியும். எனக்கு ஒரு கண் போனால் உனக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைப்போர் இருக்குவரை இந்த பிரச்சனை தீராது!