traffic analytics

சனி, 28 மார்ச், 2009

திருட்டு VCD மற்றும் நாமும் .





குற்றம்
பார்த்தவன் மீதா? படைத்தவன் மீதா? தொழிலுக்காக ஒருவன் செய்கிறான் . ஆனாலும் தவறுதான். தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதனால் தன் சக தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சகல பதிப்புகளும் தெரிந்தவர்கள் தொழில் போட்டியல் திருட்டு விசிடி தயாரித்தால் யாரை குற்றம் சொல்வது. இணைய தளத்தில் புதிய படங்களை வெளியிடுவோர் யார்? பாவப்பட்டவர்கள் இல்லையே!
தடுப்பதற்கு ஒரே வழி .எனக்கு தெரிந்தது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை, தொழிலாளர் படும் கஷ்டங்களை, தயாரிப்பாளர் மற்றும் சார்ந்தவர்கள் படும் பாதிப்புகளை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லுங்கள்.
மீடியா உங்களுடையது.தெளிவாக சொல்ல வேண்டியதுதானே.காமடி நடிகர்கள் மட்டும் சொன்னால் போதுமா? கதா நாயகனுக்கு பங்கில்லையா?
மேலோட்டமாக சொல்லாதீர்கள்.ஆழமாக சொல்லுங்கள். நம் சினிமா சொல்லி மக்கள் கேட்க மாட்டர்களா? அதனால் ஏற்படும் அழமான பதிப்புகள்,பண பிரச்சனைகள்,அதனால் சினிமாவை சார்ந்த குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புக்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பதிப்புகள் என எடுத்து சொல்லுங்கள்! பலன் கை மேல் தெரியும். எனக்கு ஒரு கண் போனால் உனக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைப்போர் இருக்குவரை இந்த பிரச்சனை தீராது!

1 கருத்து:

Tech Shankar சொன்னது…

படங்கள் மட்டுமா, எப்போது இந்த எம்பி3 வந்ததோ அப்போதிருந்தே பாடல்களின் மகத்துவம் போயிருச்சு

காசு கொடுத்து கேசட் வாங்கி பாட்டு கேட்டால் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டு ரசிப்போம்.

இப்போது தினமும் புதுப்புது எம்பி3கள். எதையும் முழுமனதுடன் கேட்டு லயிப்பதற்குள் புதிதாக இன்னும் சில. எல்லாம் அவசரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது