உண்மையில் கார்டூன் animated அல்லாத ஒரு விஷயம்.இந்தியாவில் அணைவரின் கவனத்தையும் ஈர்த்த vodafone விளம்பரத்தில் வரும் பொம்மைகளுக்குதான் இந்த பெயர்.உண்மையில் அவை அனைத்தும் மனிதர்கள்தான்.
ஐபிஎல் க்கு இடையில், எவ்வளவு எரிச்சலான நேரத்தில் இந்த் விளம்பரம் வந்தாலும் சந்தோஷத்தைக் கொடுப்பதில் இவை தவறவில்லை.
மொத்தம் உள்ள 30 விளம்பரங்களில் 15 போடப்பட்டதாகவும், மீதமுள்ளவை இன்னும் உள்ள ஐ.பி.எல்.போட்டிகளின் போது வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதை தயாரித்தது ogivy அண்ட் mather (Q&M)இந்தியா நிறுவனம் ஆகும்.கடந்த வாரத்தில் மட்டும் 15,000 பேர் you tube-ல் பார்த்ததாக சொல்கிறார்கள்.
மண் மோகன்,அத்வானிக்கு இணையாக zoozoo-வும் பிரபலமடைந்து விட்டது.
ஒரு நாளுக்கு குறைந்தது 300 நிமிடங்கள் விளம்பரம் வருகின்றது.கடைசியாக வரும் விளம்பரத்திற்கு எதிர்ப் பார்ப்பை அதிகப் படுத்துவதுதான் இதன் நோக்கமே.
ஆறு மாதமாக யோசித்து ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பும் நடந்து முடிந்து இருக்கிறது.ஒவ்வொரு விளம்பரமும் 15 முதல 20 விநாடிகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது.
நடிப்பவர்கள் அனைவரும் உள்ளூர் நடிகர்கள்.மிகப் பெரிய முட்டை வடிவிலான தலைக் கவசம்,உடைகள்,பொதுவாகவே கண்கள் தெரிய வாய்ப்பு இல்லாமலே நடிக்க வேண்டி உள்ளது.மூச்சு விடுவதும் சிரமமாக, அவ்வப்போது தலைக் கவசத்தை கழற்றி மூச்சு விட்டு.....அப்பா...!
முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனிமேஷன் பயன்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகள் பயன் படுத்தப் படவில்லை.
காலங்களைக் கடந்து நிற்கும் சில விளம்பரப் அடங்களில் zoozoo வுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.