ஆடி மாதத்தில் பழைய ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட வேண்டும் என்கிற கேவலமான ஒரு முறையினால் நாம் இழந்த பொக்கிஷங்கள் அதிகம். எவ்வளவோ இலக்கிய ஆதாரங்களை இழந்துள்ளோம்.
நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்கின்ற கேவலமான பழமொழி வேறு...!நமது ஊரோடு ஆறு நின்று போவதில்லை.ஆற்றை எந்த ஊரில்
மதிக்கிறார்கள். அது ஆதாரம் எனத் தெரியாமல்.அல்லது புரியாமல்.
அனைத்துக் கழிவுகளையும் கொட்டும் இடமாக...!வைகைத் தண்ணி குடித்தேன்,காவேரித் தண்ணி குடித்தேன் .....பெருமையாக சொல்லும் எத்தனை பேர் அதன் நலனை யோசித்திருக்கிறோம்?துணி துவைப்பது முதல்,பல் துலக்கி துப்புவது ,வண்டிகளைக் கழுவுவது என சகலவிதமான அழுக்கு விஷயங்களுக்கும் உபயோகப் படுத்துவது ஆற்றைதான்.
அஸ்த்தியைக் கறைப்பது முதல் கடவுளை கறைப்பதுவரை....கொஞ்சம் கூட சிந்திக்க ஏன் மறந்தோம்? இன்றும் கூட சில கிராமங்களில் கழிவறைக் கட்டுவதை கேவலமாக நினைப்போர் இருக்கும் வரை என்ன செய்ய முடியும்?
எந்த ரோட்டில் நம்பி கால் வைக்க முடிகின்றது?ரயில் தண்டவாளத்தின் நிலை,கடவுளே......!மிகவும் கொடுமை.அதை பராமரிப்பது நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.அதை நாமும் சரி, நிர்வாகமும் சரி என்றுதான் சரி செய்வார்களோ?
ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது ,கழிவறையை உபயோகப் படுத்தக் கூடாது என்பது ஏன் என இன்னும் கூட நிறைய படித்த மேதாவிகளுக்கு கூட புரிவதில்லை?
சென்டிரல் ரயில் நிலையத்தில் மிகவும் கொடுமை.பயணிகளால் அல்ல.அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களால்தான் அசிங்கப் படுகின்றது.பூட்டாமல் இருக்கும் கழிவறைகளை அவர்கள் தான் பயன்படுத்தி நாறடிக்கிறார்கள்.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நிற்கும் ரயில்களின் கதவுகளை (எழும்பூர் போல) பூட்டினால் பெரும் சுகாதாரக் கேட்டினைத் தவிர்க்க முடியும்.லட்சக் கணக்கில் பயணிகள் வரும் இடத்தில் இதைப் பற்றி யாருமே யோசிக்காதது ஆச்சர்யமாக தான் இருக்கிறது?பெரும் வி.ஐ.பி.க்கள் வரும் இடங்களில் இதுவும் ஓன்று....!
பீச் .....எவ்வளவு அழகான இடம்.அங்கும் கூட நம் மக்களின் வீர தீர பராக்கிரமத்தால் ,உட்கார கூட பயமாக இருக்கிறது.பஸ் ஸ்டாண்டின் நிலை அதை விட.எந்த தூணிலும் கை வைத்து விட முடியாது.தரையிலும் அப்படித்தான்.
கொஞ்சம் யோசனை செய்தால், அணைத்திற்க்கும் காரணம் நம் மக்கள்தான்.அழகாக ,சுத்தமாக ,பளபளப்பாக இருந்த கோயம்பேடு,மாட்டுத்தாவணி நிலைமை மிகவும் மோசம்.
இவ்வளவு வசதியாக நமக்காக , வசதி தருகிறார்களே...அதை பத்திரமாக பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே வருவதில்லையே...?ஏன் இப்படி?
இன்னும் எவ்வளவோ?இதற்க்கு தீர்வே இல்லையா?யார் இதை சரி பண்ண முடியும்?அடிமட்டம் முதல்,மேல் மட்டம் வரை, தன் தேவைத் தீர்ந்தால் போதும்,அடுத்தவனுக்கு இருக்கிறதா? இல்லையா? என யோசிக்காத மனோ பாவம்தான் அடிப்படைக் காரணம்.இதை மற்ற முயல்வது கடினம்தான்.ஆனாலும் கண்டிப்பாக மாற வேண்டிய விஷயம் ,மற்ற வேண்டிய விஷயம் இது ...!
அடிப்படை மக்களுடன் நேரடித் தொடர்புடைய ரசிகர் மன்றங்கள்,அரசியல் கட்சிகள் கொஞ்சம் முயன்றாலே போதும்.இவை அருவருப்பான விஷயங்கள் என புரிய வைத்தலே போதும்.காமெடியன்கள் மட்டும் சொல்லாமல்,கதா நாயகர்களும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி இந்த விஷயங்களைச் சொல்லலாம்.கமலகாஸன் மட்டும் நிறைய சொல்ல முயல்வார்.சில நியதிகளுக்கு உட்பட்டு ,வரம்பு மீராமல் சொல்லும் போது,அடிப்படை மக்களுக்கு,சொல்ல வருவது புரிவதில்லை.
நாமும் இதுபோன்ற மக்களைச் சந்திக்கும் போது,முடிந்த அளவுக்கு புண் படாமல் சொல்லலாம்.அரசியல் கட்சிகள் இதைச் செய்யலாம்.ஆனால் மாநாடு கூட்டும் போது வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்கும் கட்சி ஏதேனும் உண்டா? அவர்களால் ஊர் அசிங்கமாவது நிறைய.....பின் எப்படி அவர்கள் மக்களைத் திருத்துவார்கள்?
நாமாவது முயல்வோமே.....!திருத்துவோம்....!திருந்துவோம்.....!