traffic analytics

செவ்வாய், 31 மார்ச், 2009

பொழுது போக்கு இல்லை போக்கும் சேனல்கள்...


நம் பெண்களை எவ்வளவு நாள் இப்படியே வைக்க போகிறார்கள்.ஒரு தலை முறைக்கு முன் உலக அறிவு பெண்ணுக்கு தெரியாது அல்லது தேவை இல்லை என்று எண்ணம் இருந்தது.வெளி இடங்களில் வேலைக்கும் பெண்கள் கொஞ்சம் பேர் அறிவை நன்றாக , ஆண்களுக்கு இணையாக திறமையை வளர்த்துக்கொண்டார்கள் .கொஞ்சம் பேருக்கு பேருக்கு விருமபவிட்டாலும் தானாகவே பல விஷயங்கள் காதில் விழுந்து முன்னேற்றம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் தங்களது அறிவை பெருக்க முயன்ற போது நிறைய புத்தகங்கள் உதவி செய்தன.ஆனால் இப்போது பத்திரிக்கை ,புத்தகமும் படிக்கும் பழக்கம் முற்றிலும் மறந்து போய்,அடுத்த வீட்டு பெண்களுடன் பேசுவதும் குறைந்து போய் (அதனால் வம்புகள் குறைந்தது வேறு விஷயம்) சக மனிதர்களின் தொடர்பை இழந்து முழுவதும் டிவி யில் ஐக்கியமாகி சுயத்தை இழந்து நிற்கிறார்கள்.
பஸ் ,ரயில்,என எல்லா பொது இடங்களிலும் நெடுந்தொடர்கள் பற்றியே பேச்சு...தவறுகள் எங்கே நடக்கின்றன? நெடுந்தொடர்களை தயாரிக்கும் நிர்வாகிகளின் திறமையை நம் பெண்கள் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும்.ராதிகா தேவயானி,குஷ்பூ..................திறமைசாலிகள்.தங்களுக்கு தெரிந்த துறையில் சம்பாதிக்கும் திறமைசாலிகள்.
நமக்கு உள்ள திறமையை என்றாவது பெண்கள்நினைத்து யோசிக்க ஆரம்பித்தால் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் மட்டுமே நடக்கும்.
இப்போது பிரச்சனை யோசிக்க வைப்பது எப்படி என்றுதான்? அதற்கும் ஒரு நெடுந்தொடர் எடுக்க வேண்டி இருக்குமோ?.

அரசியல் நாகரீகம் .......!


தன்னை விட்டு விலகி போனபின் போனவர்கள் பற்றி பேசாமல் இருப்பதுதான் , உடன் இருந்தோர்க்கு நலம். பந்தை சுவற்றில் எறிந்தால் திரும்பவும் வரத்தானே செய்யும். தன்னை பழமை மிக்க தலைவராக, எல்லோரும் மதிக்கும் தலைவராக முன்னிறுத்த முயலும்போது,அரசியல் நாகரீகத்தை முதலில் கடைபிடிக்க வேண்டாமா? ஒருவர் சொல்லித்தான் அடுத்தவரை பற்றி தெரிய வேண்டியது இல்லை.மக்கள் முட்டாள்கள் இல்லை,மீடியாக்களும் சாதரணமாக இல்லை!
நீங்கள் ஒன்றை சொன்னால் எதிர்பவர் ஒன்று சொல்ல, பாதிப்பு என்னவோ உங்களுக்குக்தான். முதலில் சொன்ன உங்கள் வாதம் அடங்கி...... எதிராக வந்த வாதம் நிலைத்து போய் ...தேவையா இதெல்லாம்?
பழயதை மக்கள் நினைக்க ஆரம்பித்தால் நீங்கள் யாராவது மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? புலம்புவதை விடுங்கள்.மக்கள் உள்ளத்தில் நல்லதை அவர்களே எடுத்து கொள்வார்கள்.உள்ள பெயரையும் கெடுத்துக்கொள்ளதீர்கள்.உடன் இருப்பவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்களா தமையிடத்தில்? அனைத்து கட்சிகளிலும் இதுதான் நடக்கிறது? நல்லவர்களை, புத்திசாலிகளை,மனிதாபிமானம் மிக்கவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.அனைத்து தேர்தல்களிலும் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். நடக்கிற காரியமா?