traffic analytics

வியாழன், 2 ஏப்ரல், 2009

வினைக்கு எதிர் இரக்கம்....



கொஞ்சம் கண்ணோட்டத்தை மாற்றித்தான் பார்ப்போமே! ஒரு விளையாட்டு சானலில் பழைய பாக்கிஸ்தானில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் - பாக்கிஸ்தான் போட்டிகள் ஒளிபரப்பாகியது. கண் கூசும் வெயிலில் பல கிலோ மீட்டர்கள் மக்கள் இல்லை அப்பாவி மக்கள காத்து கிடந்தார்கள். கிரிக்கெட்டை பார்க்க ! தீவிரவாதம் என்னும் பிணம் தின்னும் சாத்திரங்கள் அங்கே ஆட்சி செய்வதால் மக்கள் படும் பாடு.கொடுமை! வறுமை! நாட்டை முன்னேற்றாமல் தன்னை மட்டுமே முன்னேற்றும் அரசியல் வாதிகள்,வேலை இல்லா திண்டாட்டம்.........ஒரு நாட்டின் சீரழிவு நம் கண் முன்னே, இன்னமும் இந்திய துவேஷம் வைத்து அரசியல் செய்யும் கபோதிகள்.
அசாதாரண சூழலில் வாழும் அந்த சராசரி பாக்கிஸ்தானியால் தன் வாழ்வை காப்பாற்றவே யோசிக்க முடியாத நிலை. உயிருக்கும், உடமைக்கும், தன் வீட்டு பெண்களுக்குமே பாதுகாப்பு இலலாத் சூழலில் அவனுக்கு இந்தியாவில் 1000 பேர் செத்தாலும், கோடி பேர் வாழ்ந்தாலும் துக்கப்படவோ கொண்டாடவோ நேரம் இல்லை!
வறுமையின் காரணமாக இந்தியாமேல் ஏவப்படும் அனைவரும் மதம் கொண்ட யானை போல . உயிரை விடுவதை சாதரணமாக நினைக்கும் அளவிற்கு , வாழ்க்கை.குழந்தைகள் உணவை தீவிர வாதத்துடன் பாலும் கலந்து விஷமாக உண்ணும்போது எங்கே அமைதியான வாழ்க்கை வரும்? என்னை பொருத்தவரையில் கோபப்படுவதை விட,பரிதாபப்படலாம்! பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் போல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போல நினைத்துக்கொள்ளலாம்! கண்டிப்பாக அவசர உதவி தேவை படுபவர்கள்தான்....!யாராலும், எவ்வரும் உதவி செய்ய முடிய போவது இல்லை.கடவுளிடம் வேண்டுவதைதான் நம் செய்ய முடியும்!
அடுத்த தாக்குதலுக்கு அவர்கள் தயாராகும்வரை .......வேண்டிக்கொள்ளலாம்!