சனி, 2 மே, 2009
வேதங்கள் ...
உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.
"புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"என்பது விவேகானந்தரின் எண்ணம்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.
உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் 'பிரஸ்தான த்ரயம்'என்று வழங்கப் படுகின்றன.
அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.
உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை.
உபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக்
உபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,
பிருகதரான்யா, சுவேதஸ்வதார , வேதம் யஜுர்
மைத்ராயணி, மகாநாராயண.
உபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம்சாம
உபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம்அதர்வண
யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.
வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இறப்புக்கு பின் என்ன நடக்கும்.....ஒரு ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்....இருந்தால் என்ன? இருக்கிறதே? அதுதான் கட உபநிஷதம்.
வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.
நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம்.
வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை படித்துப் பாருங்கள்.வாழ்வின் பார்வையும் சாவின் முழுமையும் புரியும். இன்னும் வளரும்.........................!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)