வெள்ளி, 3 ஏப்ரல், 2009
சாதித்தது யார்? வருண்
ஆயிரம் ஆயிரம் சேனைகள், உலகின் பெரிய ஜன நாயக நாடுகளுள் ஒன்றின் ஆளும் கட்சி, மிகப்பெரிய பாரம்பரியம், மிகப் பெரிய வியுகங்கள் . ஒவ்வொரு வீடாக போய் தன்னை அடையாளம் காட்டி......பாவம் ராகுல் காந்தி.இன்னும் தன் நினைத்ததை சாதிக்க போராடும் போது...!அதிர்ஷ்ட்டம் வருண்காந்தி வீட்டில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறது.டிவி இருக்கும் அத்தனை வீட்டு பெரிசுகளும், சிறுசுகளும் ஒரே இரவில் யார் இது என்று கேட்டு அறிந்து கொண்டார்கள்.ரோட்டில் நடந்து சென்றால் வருண் காந்தியை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
பாவம் இதற்க்குதானே ராகுல் காந்தி படாத பாடு படுகிறார்.
இன்னொரு சாதகம் ...அரசியல்வாதிகளின் அடிப்படை தகுதியான ஜெயிலுக்கு போவது. பாவம் ராகுல்.....இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காமல் போராடிக்கொண்டு இருக்கிறார். யார் செய்த புண்ணியமோ , அல்லது யார் செய்த
பாவமோ , வருண் ஒரே நாளில் பிரபலமாகி விட்டார்.
ஐந்து வருடங்களாக ராகுல் போராடி பெறாததை ஒரே நாளில் வருண் பெற்று சாதித்து விட்டார். ஆளும் காட்சியில் செல்ல பிள்ளையாக சாதிக்க முடியாதது , எதிர்த்து சாதிக்க முடிகிறது.
ஒரு வேலை பி. ஜெ.பி. ஆட்சிக்கு வந்தால்தான் ராகுல் பிரபலமாவார் என்பதால்தான் அவர்கள் ஆட்சிக்கு வர சோனியா முயல்கிறார் போலும். நீங்கள் வேறு பொருளாதாரப் பிரச்சனை,செயல்படாத பிரதமர் என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இதெல்லாம் ஒரு ராஜா தந்திரம்.சரிதானே சோனியாஜி?
ஓஷோ .........
உடனே இடுகையை திறந்து பர்க்கத்துண்டும் தலைப்புதான்.உண்மை படித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.தன்னையும் குழப்பி படிப்பவனையும் குழப்பும் ஞானிகள் மத்தியில் தெளிவான ஒருவன் இருந்தால் புரிந்து கொள்வது கஷ்ட்டம்தான் . குழப்புவதுதான் ஞானிகளின் இலக்கணம் என்று யார் சொன்னது?ஒரு பெண்ணாக ஆரம்பத்தில் ஓஷோ புத்தகத்தைக் கையில் வைத்திருந்தாலே தவறாக பார்க்கும் நிலை இன்று இல்லை. பிறந்த நாள் பரிசாக ஓஷோ புத்தகங்களை கொடுக்கும் அளவிற்கு சுற்றி உள்ளவர்களை மாற்ற கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் இருந்தது.
அறுபது வயதான ஏன் தாயார் படித்துவிட்டு, "நன்றாக தான் இருக்கிறது" என்று சொன்ன போது , மக்களுக்கு நல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் கிடைக்கும் என தோன்றியது. ஓஷோவின் பெயரைக் கெடுத்ததில் அப்போதைய தொடர்புச் சாதனங்களின் பங்களிப்பு அதிகம்.
அவனைப்பற்றி தவறாக சொல்பவர்களுக்காக அவன் சொன்ன ஒரு சிறு கதை.ஒரு ஞானியைப் பார்க்க வந்த விலைமகள் மோட்சத்தைப பற்றியே கேட்க, துறவிகள் காமத்தை பற்றியே கேட்டர்களாம்.
பார்வைகள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.சரியாக பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)