traffic analytics

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

சாதித்தது யார்? வருண்


ஆயிரம் ஆயிரம் சேனைகள், உலகின் பெரிய ஜன நாயக நாடுகளுள் ஒன்றின் ஆளும் கட்சி, மிகப்பெரிய பாரம்பரியம், மிகப் பெரிய வியுகங்கள் . ஒவ்வொரு வீடாக போய் தன்னை அடையாளம் காட்டி......பாவம் ராகுல் காந்தி.இன்னும் தன் நினைத்ததை சாதிக்க போராடும் போது...!அதிர்ஷ்ட்டம் வருண்காந்தி வீட்டில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறது.டிவி இருக்கும் அத்தனை வீட்டு பெரிசுகளும், சிறுசுகளும் ஒரே இரவில் யார் இது என்று கேட்டு அறிந்து கொண்டார்கள்.ரோட்டில் நடந்து சென்றால் வருண் காந்தியை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
பாவம் இதற்க்குதானே ராகுல் காந்தி படாத பாடு படுகிறார்.
இன்னொரு சாதகம் ...அரசியல்வாதிகளின் அடிப்படை தகுதியான ஜெயிலுக்கு போவது. பாவம் ராகுல்.....இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காமல் போராடிக்கொண்டு இருக்கிறார். யார் செய்த புண்ணியமோ , அல்லது யார் செய்த
பாவமோ , வருண் ஒரே நாளில் பிரபலமாகி விட்டார்.
ஐந்து வருடங்களாக ராகுல் போராடி பெறாததை ஒரே நாளில் வருண் பெற்று சாதித்து விட்டார். ஆளும் காட்சியில் செல்ல பிள்ளையாக சாதிக்க முடியாதது , எதிர்த்து சாதிக்க முடிகிறது.
ஒரு வேலை பி. ஜெ.பி. ஆட்சிக்கு வந்தால்தான் ராகுல் பிரபலமாவார் என்பதால்தான் அவர்கள் ஆட்சிக்கு வர சோனியா முயல்கிறார் போலும். நீங்கள் வேறு பொருளாதாரப் பிரச்சனை,செயல்படாத பிரதமர் என ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இதெல்லாம் ஒரு ராஜா தந்திரம்.சரிதானே சோனியாஜி?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பிரபலமாவது மட்டும் முக்கியமல்ல. நல்ல பிரபலமாக இருக்கனும்.

வருண்.... ம்ஹீம்....

-சூரியன்

பெயரில்லா சொன்னது…

sonia ji want to drink complan
sibi