திங்கள், 20 ஏப்ரல், 2009
சிறு தீர்வு ....!
மனத்தின் இறுக்கம் வாழ்வை நாசப்படுத்தும் ஒரு நிலை.வெளிவர எவ்வளவோ வழிகள்.இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் --- பொருள் என்னவோ அதுதான். ஆபத்துக்கு பயந்த முன்னேறபாடுதான் இறுக்கம்.(Stress).வரப்போகும் காலத்துக்கோ , ஜன்மத்ததுக்கோ தயாராகிக் கொண்டிருப்பது.
நாளைய பொழுதை எதிர்கொள்ள தைரியம் இல்லை என்றால் இறுக்கம் ஏற்படுகின்றது. இறுக்கம் என்றாலே கடந்த காலத்தை சரியாக வாழவில்லை என்று பொருள்.
கடந்த காலம் சுற்றிப் படர்ந்து நிற்கிறது. வாழ்வில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் வாழ நினைக்காததே இறுக்கம் ஏற்படக் காரணம். மோசமான கடந்த காலம் நிலைத்துப் போய், பயப் படுத்தும் எதிர்காலம் தொலைந்து போய் நடுவில் நிகழ் காலம் நசிந்து போய் விடுகின்றது.
மனதையும் , உடலையும் தளர்வான நிலையில் வைத்திருப்பது இதைத் தொலைப் பதற்கான முதல் நிலை. சோம்பேறித் தனத்திற்கும் , தளர்வுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தளர்வு என்பது நினைவுகள் சுறுசுறுப்பாக , உடல் நிலை ஒத்து வரவிட்டாலும் கூட , மனவலிமையால் செய்து முடிக்கக் கூடிய நிலைதான். ஸ்டேமினா என அழைக்கப் படுவது இந்நிலைதான்.
இன்னிங்ஸ மட்சில் வெயிலில் இரண்டு நாள் நின்று சதம் அடிக்கிறார்களே, நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுகிரார்களே அதுதான்.
இறுக்கத்திற்கு பயந்து ஓடி ஒளிந்தால் அது கூடி விடும். அதைப் பற்றி நினைக்காமலே இருப்பது ஒரு வகை. பிரச்சனை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என இருப்பது!
இன்னொன்று மாற்று வழியில் ஓடுவது. போதையில் மிதந்து பிரச்சனையில் இருந்து தப்பிப்பது. இரண்டுமே தற்காலிக அல்லது இறுக்கத்தைக் கூட்டும் நிகழ்வுகள்தான்.
கொஞ்சம் தனியாக அமர்ந்து இறுக்கத்தின் ஆணி வேரை கண்டு பிடித்தால் அதன் இறுதித் தீர்ப்பை உடனே எழுதி விடலாம். பிரச்சனை எதுவாக இருந்தாலும் தீர்வு கண்டிப்பாக இருக்கும். ஆனால் தீர்வில் இரண்டு வழி -- ஓன்று எல்லோருக்கும் நன்மை , நமக்கும் நல்ல பெயரைக் கொடுப்பது. மற்றது நல்ல பெயரையோ அல்லது பொருளையோ கொடுக்கா விட்டாலும் நமக்கு நிம்மதியைக் கொடுப்பது.
இதில் எது முக்கியம் என தேர்வு செய்வதே நம் வேலை. அதற்க்காக இறுக்கம் அடையக் கூடாது....!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)