traffic analytics

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

காற்றினும் கடிதாய்........உன்னோடு......!





தரையில் பாதங்கள் பாவாமல்.....!
தனியாய் எங்கோ சஞ்சரித்துக்கொண்டு....!
தவிப்பாய் உன்னை தேடிக்கொண்டு....!
தமிழாய் ஒரு அழகான உலகம்....!

நினைத்த உடன் உலகின்
எந்த மூலையிலும் நான்....!

காரைக்கால் அம்மையாரை விஞ்சி
காற்றினும் கடிதாய்......!

கற்ற விஷயங்கள் களங்கமற்று
கற்கும் பாடங்கள் அருகில் நின்று
களங்கள் எல்லாம் துணை நிற்க....!

மெல்லிய காதல் நினைவுகள்
மலர்ந்த உன் நினைவுகள்
மயக்கும் மை வண்ணங்கள்-என்
மனதிலே மணம் பரப்ப....!

கடந்த காலங்களின் வடுக்களும்
கலங்கி நின்ற கண்களும்
கல்லான என் இதயமும் -- உன்
கண்களால் கனிவாக.....!

நிகழ் காலத்தைக் கடக்கின்றேன்
நித்தமும் நான் நடக்கின்றேன்-மனதில்
நிர்மலமாய் யாசிக்கின்றேன்
நிற்காமல் நினைக்கின்றேன்......

உன்னை....
நெஞ்சமெல்லாம் சுமக்கின்றேன்
நெருப்பாக சுடுகின்றேன்
நெருக்கத்தில் நீ இல்லை என
நைந்துதான் போகின்றேன்....!


தொலைவில் நீ இருந்தாலும்
தொலைக்காத உன் நினைவால்
காற்றினும் கடிதாய்
கணப்பொழுதில் நான் வருவேன் உன்னோடு....!














நம் எல்லை...


என்று எதுவுமே இல்லை. நம மாணவர்களுக்கு நாம் கற்றுதர வேண்டிய பாடம்.எல்லோருமே முதல் மாணவனாக வர முடியுமா? வர வேண்டும் என்கிற ஆவல் எல்லோருக்கும் உண்டு. முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.
நாம் படித்த காலத்தை நினைவில் கொண்டால் நாம் பிள்ளைகளை இவ்வளவு இம்சிக்க மாட்டோம்
சரி நாம் முதல் மாணவனாகவே இருந்திருக்கலாம். அதற்க்காக குழந்தையின் படிப்பிற்காக சர்வாதிகாரியாக மாற வேண்டுமா? அப்படி சர்வாதிகாரியாக மாற்றும் முதல் இடம் தேவையா?
அக்கறை உங்களுக்கு இருக்கிறது.இல்லை என்று யார் சொன்னது? ஆனால் அவன் படிப்பை காப்பதாக நினைத்து வாழ்க்கையை முடித்து விடக்கூடாது. தேர்வுகள் முடிந்து முடிவுகாக காத்திருக்கும் வேலையில் நாம் கொஞ்சம் யதார்தமாஹ யோசிப்போம்....
பெரிய கல்லூரியில் சேர்க்க வேண்டும்... சரியான நோக்கம்தான். நம் பிள்ளையின் மதிப்பெண்ணை மதிக்காத கல்லூரி வேண்டாம் என தூக்கி எறியுங்கள். பிள்ளைகளையும் பக்குவத்திற்கு கொண்டு வாருங்கள். நாம் வளர்த்த பிள்ளைகள்தானே.......!
தோற்று விட்டேன் என வாழ்வை முடிக்கும் குழந்தைகளை விட, அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை என முடிவுக்கு வரும் குழந்தைகள் தான பரிதாபத்திற்கு உரியவர்கள். அதற்க்கு முழுக்க பெற்றோர்கள்தான் பொறுப்பு.தன் மீது அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கை வைக்கும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டியதுதான். அவர்களை விட நாம் அதிகமாக ஆடுவதுதான் பிரச்சனை ஆகிறது. சொந்தம் பந்தம் அனைவரிடமும் தம்பட்டம் அடித்து .....கிடைக்கவில்லை என்றால் குழந்தைகளை குறை சொல்லி......எவ்வளவு கொடுமை.
பிள்ளைகளின் திறமையை உக்குவித்து அதேநேரம் எந்த விளைவையும் சந்திக்கும் வலிமையையும் கொடுப்பதும் நாம் கடமை.....!
நன்கு வருடங்களுக்கு முன் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை,அதனால் கல்லூரியில் சேர முடியாமல் போய் விடும் என நினைத்த ஒரு ஏழை மாணவன் தற்கொலை செய்து கொண்டான். பாவம் என தோன்ற வில்லை. கோபம்தான் வந்தது.சாதரண கட்டணத்தில் கல்வி போதிக்கும் எத்தனையோ கல்லூரிகள் உண்டு. படிக்க வெறி உள்ளவன் எங்கும் படிப்பான்.
கல்லூரிகள் பற்றிய தவறான எண்ணங்களை முதலில் மாற்றுங்கள்.பச்சையப்பா மற்றும் நந்தனம் ஆர்ட்ஸ் மிதவும் சாதரணமாக தோன்றும்.அதில் படிக்கும் பிள்ளைகளுக்கும் அதன் மதிப்பு தெரிவதில்லை.நீ பெற்ற மதிப்பெண்ணையும் மதித்து, உனக்கு கேள்வி கேட்காமல் , எவன் காலையும் பிடிக்காமல் , உன்னிடம் மிகக்குறைவாக பணம் பெற்றுக்கொண்டு பணம் கட்ட முடியவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பாமல் உனக்கும் ஒரு பட்டத்தை உன் பெயருக்கு பின்னால் கொடுப்பதுதான் கோவில்.
பிள்ளைகளை விட நமக்குதான் பொறுப்பு வேண்டும். பணம் கொடுப்பதால் மட்டுமே பொறுப்பு இருப்பதாக நினைக்க முடியாது.
சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால்தான் வானம் வசப்படும் என பிள்ளைகளுக்கு சொல்ல முடியும். முதலில் நாம் யதார்த்தமாக யோசிபோம்.