தரையில் பாதங்கள் பாவாமல்.....!
தவிப்பாய் உன்னை தேடிக்கொண்டு....!
தமிழாய் ஒரு அழகான உலகம்....!
நினைத்த உடன் உலகின்
எந்த மூலையிலும் நான்....!
காரைக்கால் அம்மையாரை விஞ்சி
காற்றினும் கடிதாய்......!
கற்ற விஷயங்கள் களங்கமற்று
கற்கும் பாடங்கள் அருகில் நின்று
களங்கள் எல்லாம் துணை நிற்க....!
மெல்லிய காதல் நினைவுகள்
மலர்ந்த உன் நினைவுகள்
மயக்கும் மை வண்ணங்கள்-என்
மனதிலே மணம் பரப்ப....!
கடந்த காலங்களின் வடுக்களும்
கலங்கி நின்ற கண்களும்
கல்லான என் இதயமும் -- உன்
கண்களால் கனிவாக.....!
நிகழ் காலத்தைக் கடக்கின்றேன்
நித்தமும் நான் நடக்கின்றேன்-மனதில்
நிர்மலமாய் யாசிக்கின்றேன்
நிற்காமல் நினைக்கின்றேன்......
உன்னை....
நெஞ்சமெல்லாம் சுமக்கின்றேன்
நெருப்பாக சுடுகின்றேன்
நெருக்கத்தில் நீ இல்லை என
நைந்துதான் போகின்றேன்....!
தொலைவில் நீ இருந்தாலும்
தொலைக்காத உன் நினைவால்
காற்றினும் கடிதாய்
கணப்பொழுதில் நான் வருவேன் உன்னோடு....!
2 கருத்துகள்:
எங்கோ படித்த கவிதை !
நிழலாகிப்போன நிஜங்கள்
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!
இந்திய படம் மாதிரி இருக்கே அம்மா..
கருத்துரையிடுக