நாம் பிறந்த இம் மண்ணில் ஒரு தேவதை பிறந்தமைக்கு எவ்வவோ புண்ணியம் நாம் செய்திருக்க வேண்டும்.எம்.எஸ்.என்று அன்புடன் அழைக்கப்படும் அந்த தேவதைக்கு என்னால் ஒரு சமர்ப்பணம் செய்ய முடிந்ததை ஒரு பாக்கியமாக நினைக்கின்றேன்.
பார்ப்பன எதிர்ப்பு என்கின்ற மனநிலையில் உள்ளவர்கள் தயவு செய்து கொஞ்சம் இரங்கி வாருங்கள்.அவர் பார்ப்பனர் அல்ல.திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் பார்ப்பனர்கள் அவரை அவரின் திறமையினால் பார்ப்பனராக பதிவு செய்து கொண்டார்கள்.
அவரின் வரலாறு,புகழ்ந்தவர்கள் அதெல்லாம் சொல்ல நான் வரவில்லை.
பாமரனை எட்டக்கூடிய அவரின் இசை மேல் தட்டிலேயே நின்று போனதே என் வருத்தம். இசைக்கு மொழி இல்லை.எவ்வளவோ மெலோடி பாடல்களைக் கேட்கின்றோம்.அது போலதான் இவரின் இசையும்.
அவரின் பாடல்களைகே கேட்க கர்நாடக சங்கீதம் அவசியம் இல்லை.நல்ல ரசனை மட்டுமே போதும்.இசை ஆர்வலர்கள், நிறைய பேர் கர்நாடக சங்கீதம் என்றாலே ஓடிவிடுவது உண்டு.அதற்க்கு காரணம் அது எனக்குதான் தெரியும் என பலர் செய்யும் ஆர்ப்பரிப்பே காரணம்.
ஆனால் நிறை குடங்கள் என்றுமே தளும்புவது இல்லை.ஆனால் அனைவராலும் ரசிக்கப்படும் சுப்ரபாதம் ஒன்றே பாமரனையும் எட்டும் அளவுகோல்.மொழி புரியாமல் அதன் ராக விவரங்கள் தெரியாமல் ரசிக்கப்படுவதே இசைக்கு மொழி இல்லை என்பதன் வெளிப்பாடுதானே!
"பஜ கோவிந்தம் " ஒரு முறை முழுவதுமாக கேட்டுப் பாருங்கள். ராகத்தின் மொழி புரியும்."குறை ஒன்றும் இல்லை" அதன் பொருளுடன் புரிந்து கேட்டுப்பாருங்கள்.கண்கலங்க வில்லை என்றால்...இசையின் அர்த்தம் புரியாமல் இருக்கிறோம் என்று பொருள்.
"பாவயாமி" வாழ்வில் ஒரு முறையேனும் கேட்டுப்பார்த்து விடுங்கள்.இசையின் முழுமை அங்கே முழுமை பெரும்.
இந்த இடுகை ரசித்தவர்களுக்கு இல்லை.இன்னமும் கர்நாடக இசைஎம் .எஸ். ஐ விலக்குபவரகளுக்கு ஒரு விண்ணப்பம் எனஎடுத்துக்கொள்ளுங்கள்
வெள்ளி, 10 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)