traffic analytics

திங்கள், 30 மார்ச், 2009

வாக்களிக்கும் உரிமை மற்றும் கடமை.....



நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? அறிவுபூர்வமான உயர் தட்டு மக்களின் எண்ணம் இது என்ற தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது.
உள்ளது எல்லாம் உயர்வுள்ளல்.... சரிதானே?
தன்னைப்பற்றி மட்டுமே நினைக்கும் மக்களை உயர்ந்தோர் எனலாமா? இவர்களை மண்வெட்டி எடுத்து நிலத்தை வெட்டவா சொல்கிறோம்? ஒட்டு போடுவது அடுத்தவன் சொல்லிதான் போடுவார்களா? பிரச்சனை என்றவுடன் பேனாவும் பேப்பருமாக ஹிந்து வுக்கு எழுதும் அறிவு ஜீவிகள் யோசிக்க வேண்டியது இது!
வெயிலில் வரிசையில் நின்று ஒட்டு போடுபவன் ஏமாளி.ஓட்டு வாங்கி ஜெயித்தவனை பற்றி விமரிசனம் செய்து விட்டு,அவனால் கிடைக்கும் நன்மைகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு, காரியம் சாதிக்க ஜெயித்தவன் காலை பிடித்து காக்கா பிடிக்கும் இந்த மேல் தட்டு எண்ணம் தேவையா?
மேல் தட்டு எண்ணம் என்ற ஒன்றை நாம்தானே உருவாக்கினோம்.சங்க இலக்கியத்தில் எல்லாம் இது இல்லையே! உயர்வான எண்ணம்தான் வேண்டுமே தவிர உயர்வானவர்களின் எண்ணம் வேண்டாமே!
ஒட்டு போடுவது நமக்காகத்தானே தவிர வேறு யாருக்கும் இல்லை.
நான் உழைக்கிறேன்.நான் சாப்பிடுகிறேன்.எதற்கு ஒட்டு போட வேண்டும்?
மிகவும் எதார்த்தமான ஒன்றுதான்.சரி .நாளை பாகிஸ்தானில் இருந்து போர்
வந்தால் ,நீயாக உழைக்கிறாய் சாப்பிடுகிறாய் என விட்டுவிட மாட்டான்.இந்தியன் என்று உன்னயும்தன் அழிப்பான்! அன்று உன்னையும் காக்க இந்த நாடுதான் வரும். நீ ஒட்டு போட்டாலும் இல்லாவிட்டலும்.அன்றும் ஏதோ ஒரு கட்சியின் ஆட்சி நடக்கும்.பெற்ற தாயையும் பிறந்த பொன் நாட்டையும் மறந்தவன் மனிதனே அல்ல.மனிதனாக நடப்போம்.வாக்களியுங்கள்.

கருத்துகள் இல்லை: