traffic analytics

சனி, 9 மே, 2009

எழுத்தாளர்களின் கனிவான கவனத்திற்கு..



ஆர்.கே.நாராயண் என அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர்
நாராயணசாமி .சென்னையில் கண்டிப்பான உள்ளூர் தலைமை ஆசிரியருக்கு, மகனாக பிறந்தார்.(10-10-1906).ஆர்.கே.லட்சுமணன் ,பிரபல கார்டூனிஸ்ட் இவரின் இளைய சகோதரர்.

வேதியலும் ,பௌதீகமும் பிடிக்காமல் ஆங்கிலம் அதிகமாக ஈர்க்க,படிப்பை மிகவும் கடினமாகவே கடக்க வேண்டி இருந்தது.சிறிய வயதிலேயே ஆங்கில இலக்கியங்கள்.தான் . மிகவும் ஆர்வமாக படித்தார்.தனது நண்பர்களுக்கு தேனிரும் ,சிற்றுண்டியும் கொடுத்து தனது படைப்புகளை அறிமுகப் படுத்தினார்.நல்ல அறிவான படைப்பு என பாராட்டும் பெற்றார்.ஆனால் அவரின் தந்தையின் நம்பிக்கை அவருக்கு சாதகமாக இல்லை.அவரின் துண்டுதலால் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

முதுநிலை படிப்பிற்கு விண்ணப்ப படிவம் எடுத்துக்கொண்டு மாடிப்படியில் ஏறும் போது, எதிரே வந்த நண்பர் M.A. படிப்பதில் உள்ள கடினத்தன்மை பற்றி கூற ,அந்த முயற்சியை அத்துடன் விட்டொழித்தார்.

வாழ்க்கைக்காக படைக்கும் முயற்சியில் இறங்கலானார்.சில கவிதைகள்

பிரசுரமும்
ஆகின.அவரின் முதல் புத்தகம் "Development of Maritime Laws of 17th-Century England”.என்பது.அது பற்றிக் குறிப்பிடும் போது"கவர்ச்சியே இல்லாத புத்தகம்.என்னுடைய படைப்பு முதன் முதலில் அச்சேறுவதில் உள்ள சுகத்தை அறிந்தேன்"என்கிறார்.அது ஒன்றுதான் மிச்சம்.

அதன் பின்னர் வாழ்க்கை நடத்த ஆசிரியர் பணியில் சேர்ந்து இரண்டே நாளில்
வேலையே
உதறினார்.

1930-ல்தனது முதல் நாவலான சுவாமியும் அவனது நண்பர்களும் என்ற கதையை எழுதினார்.அவரின் கற்ப்பனை உலகம் சிறகை விரித்து பறக்க ஆரம்பித்தது.அவரின் பார்வையில் அந்த அழகான உலகம்.ஆல்பிரட் மிஷன் ஸ்கூல்,சரயு நதி,மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷன் என அழகான மால்குடி கிராமமாக விரிகிறது.புவியியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளாக அந்த கிராமம் என்றும் கண்களில் நிற்கும்.

ஒளியியல் படைப்புகள்,கண்களின் வழியே ஊடுருவி,மனதில் நிற்ப்பது என்பது வேறு.நினைவிலேயே உருவாக்கி நம் கற்ப்பனையில் நிலை நிறுத்துவதில், எழுத்தாளனின் சாதனை வெளிவருகிறது.

கண்ணின் முன்னால் அந்த கிராமத்தைக் கண்ணுக்குள் கொண்டு வந்து,இன்றும் நிலை நிறுத்தியாதுதான் சாதனை.அவரை அறிய வேண்டியது ஒவ்வொரு வளரும் எழுத்தாளரின் கடமை.

அதைப் பதிப்பிற்கு அனுப்பிய இடத்தில் எல்லாம் ,சுவற்றில் இட்ட பந்தாக திரும்பி வர, மனம் நொந்து போனார்.இறுதியாக லண்டனில் உள்ள நண்பருக்கு அதை அனுப்பி,பின்குறிப்பாக பதிப்பிக்க முடியவில்லை என்றால்,கைப் பிரதியை கல்லில் கட்டி தேம்ஸ் நதியில் வீசிவிடுமாறு எழுதி

இருந்தார்
.

அந்த நண்பர் அந்த பிரதியை கிரகாம் கிரீன் என்ற பதிப்பாளரிடம் கொடுக்க ,உடனே அவர் பதிப்பித்தார்.காலத்தால் அழியாத புகழைக் கொடுத்த அந்த புத்தகம் ஐந்து வருட போராட்டத்திற்கு பின் 1935 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது.

கிரீன் உடன் ஆன நாராயண் அவர்களின் நட்பு அவர் இறந்த 1991 வரை தொடர்ந்தது.இத்தனைக்கும் அவர்கள் ஒரே ஒரு முறைதான் சந்தித்தனர்.1964 ஆம் ஆண்டு சந்தித்தனர்.நட்பின் இலக்கணம் இதுதான்.

நம்மை அடுத்துள்ள ஒரு நபரைப் போல அவரின் பாத்திரப் படைப்புகள்.அதே நேரத்தில் வித்தியாசமான பாத்திரங்கள்.அறிவு ஜீவித்தனத்தை காட்டாமல் அதே நேரத்தில் இலக்கிய தரம் வாய்ந்த கதா பாத்திரங்கள்.பெரும்பாலும் தென்னிந்திய சாயலில் ஆன முகங்கள் அவரின் அடையாளங்கள்.

மால்குடி ஒரு கற்ப்பணைப் படைப்பு, கனவில் வர்ணம் பூசப்பட்ட ஓவியம் மட்டும் அல்ல.பகல் கனவில் இருந்து ,லயமாய் வெளியே வரும் நிலையில் உள்ள ஒரு விஷயம்.அதில் வரும் பாத்திரப் படைப்புகள் பணமும் புகழும் மட்டும் எதிர்கொண்டு வாழாமல் ,தன் நினைவின் பதிவுகளை எவ்வளவு நாள் பதிக்கிறார்கள் எனக் காட்டுவது அதன் சிறப்பம்சம்.இன்றைய காலகட்டத்திற்கும் அவரின் பாத்திரப் படைப்புகள் ஒத்து வருவது அழகு.

அவரின் நடையில் எளிமையும் ,தன்மையும் என்றும் நிலைத்திருக்கும்.பாரம்பரியத்தின் அழகும்,கிராமிய மனம் நிறைந்த கதைகளுடே செல்லும்நேர்த்தியும் ,மெல்லிய நகைச்சுவையோடு கூடிய லயமும் எங்கு கிடைக்கும்.

சாகித்திய அகாடமி,பத்ம பூஷன் போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.நோபல் பரிசுக்கு தகுதிப் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய சோகமும் நடந்தது.

ஐரோப்பிய மொழிகள், ஹீப்ரு உள்பட அனைத்திலும் இவரின் கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.அவரின் ரசிகர்களாக சோமர்செட் மோகம்,கிரகாம் கிரீன் போன்றோரைப் பெற்றவர்.லீலாவின் நண்பர்கள்


என்கிற
சிறுகதை லண்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பாடத் திட்டமாக உள்ளது.

கண்டிப்பாக
அறிந்து கொள்ள வேண்டிய நபர்களில் ஆர்.கே. நாராயண்

முக்கியமானவர்
ஆவார்.


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Doordarshan telecasted "Malgudi Days" in mid 80s. Beautiful but simple compilation of stories. RKN is a genius.

Music in the serial is equally good. Thanks for writing about RKN.

BTW, i am surprised to know that RK Lakshman has acted in a movie (Arjun's father in Muthalvan).

-Venkat

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

:))

rathinapugazhendi சொன்னது…

ஆர்.கே.நாராயணன் பற்றிய பதிவுக்கு நன்றி

Jayakumar Vellaiyan சொன்னது…

நல்ல தகவல்களை, நல்ல தமிழில் தரும் தங்கள் பணி தொடரட்டும்..