traffic analytics

சனி, 18 ஏப்ரல், 2009

எம்.பி.எ. தேவை ஒரு மாற்றம்!


அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.பி.எ. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வினாத்தாளை ஒரு முறை பார்த்தால் , அவர்களை கேட்கத் தோன்றும் சில வினாக்கள்.

இது இளநிலை கல்வி முடித்த அனைவருக்குமா? அல்லது கணிதம் ஒரு பாடமாக கொண்டு படித்தவர்க்கு மட்டுமா?

பிளஸ் 2 வில் கணக்கு அல்லாத படங்களைப் படித்து விட்டு பின் அது தொடர்பில்லாத படங்களை மூன்று வருடங்கள் பல மாணவர்கள் படிக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு தரக்கூடிய உயர் கல்வியாக எம்.பி.எ. இருக்கிறது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கணிதம் என்பதன் தொடர்பு சிறிதும் இல்லாத, நிலையில் , வினாத்தாளின் கடினம் கொஞ்சம் அதிகம்தான். அதைப் படிப்பதற்கு திறமை வேண்டாமா எனக் கேட்பவர்களுக்கு.......

பி.எஸ்.சி மூன்று வருடம் படித்தவனுக்கு எம்.எஸ்.சி...எம்.சி.எ. ...என்று பல வேலை வைப்பு தரக்கூடிய உயர் படிப்புகள். பொறியியல் படித்துவிட்டு , இணைப்பாக மட்டுமே இதை எழுதக் கூடிய மாணவர்களுக்கும் நிறைய வேலை வாய்ப்பளிக்கக் கூடிய உயர் பட்டப் படிப்புகள் உள்ளன.

ஆனால் கணிதம் பயிலாத மாணவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை எம்.பி.எ. மட்டும்தான். இதையும் கணிதம் ....(உங்களுக்கு சாதரணமாக இருக்கலாம் தேர்வாளர் அவர்களே!) அந்த நிலையில் நின்று பாருங்கள்.

கணிதம் படித்து பலப் பல உயர் கல்வி வாய்ப்பு உள்ள மாணவன் எளிதாக வென்று அதை மேலும் ஒரு தகுதியாக போட்டுக்கொள்வான். ஆனால் அதை மட்டுமே முதல் தகுதியாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவன் தோற்று வெளிஏறுவான்.

நம் பல்கலை கழகத்தின் பெருமையை நிலை நாட்ட, கடினமான தேர்வுத் தாள் தான் சரியான வழி என்பதை விட , பலருக்கு வாழ்வு காட்ட உதவுவது அதனினும் உயந்த வழி இல்லையா?

பொதுவாக கணிதம் என்பதைவிட அவரவர் படித்த துறையில் அந்த மதிப்பெண்ணிற்கு கேள்விகள் கேட்கலாமே. மைனஸ் மதிப்பெண்கள் கண்டிப்பாக மாணவனை (கணிதம் பயிலாத) பாதிக்கும்.

கணிதம் என்பதைப பார்த்து , பயந்து உடனே பயிற்சி மையத்தில் ஒரு வாரத்திற்கு 3000 வீதம் செலுத்தி.... இது உண்மை.இதை நான் விவாதத்திற்காக எழுதவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் யாராவது படித்து, எதாவது ஒரு வழி பிறக்காத என்றுதான்!

உடனே எனக்கு கணக்கு வராது, அதனால்தான் எழுதுகிறேன் என நினைகாதீர்கள்.
பல வருடங்களுக்கு முன்பே இதை எல்லாம் தாண்டித்தான் வந்துள்ளோம்.

3 கருத்துகள்:

Tech Shankar சொன்னது…

மக்களிடன் பணம் பறிப்பதற்கு என்னென்னவோ செய்கிறார்கள்.

கணிதப்பாடத்தைப் படிக்காதவர்களுக்கும், எம்பிஏ நுழைவுத்தேர்வுகளில் கணிதத்தை வைப்பதால் - நுழைவுத்தேர்வு என்பது கமர்சியல் ஆகிவிடுகிறது.

எல்லாம் காலம் செய்த கோலம்


//கணிதம் என்பதைப பார்த்து , பயந்து உடனே பயிற்சி மையத்தில் ஒரு வாரத்திற்கு 3000 வீதம் செலுத்தி..

தராசு சொன்னது…

என்ன சொல்ல வர்றீங்க

தமிழ் உதயன் சொன்னது…

ஜீவா,

அருமையான பதிவு....

கணிதம் படிக்காமல் என்னுடன் பட்டய கணக்காளர் படிப்பு படித்த எத்தனையோ பேர் இடைநிலை தேர்வில் தோல்வி உற்று இந்த படிப்பே வேண்டம் என்று சென்று உள்ளார்கள்...இந்த நிலை பற்றி நானும் கவலை பட்டு உள்ளேன்... நீங்கள் எழுதியது அருமை..

நன்றி

தமிழ் உதயன்

குறிப்பு: ஆமாம் உங்கள் பின்னுட்டத்துக்கு பதில் எழுதும் வழக்கம் இல்லையா??