traffic analytics

திங்கள், 13 ஏப்ரல், 2009

டாஸ் காபிடல்

"உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்" சித்தாந்தத்தின் தலையாய கோஷம்.

கம்யூனிச கோட்பாட்டாளர்களான காரல் மார்க்ஸ் மற்றும் ப்ரெடரிக் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து எழுதிய அறிக்கை இது . முதலாளித்துவம் வீழ்ந்தது சமவுடமை தோன்றி வர்க்கப் புரட்சி உருவாக அடிகோலிய முதல் வார்த்தை இது என்பதால் அரசியலில் பலம் பொருந்தி நிற்கின்றது. 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.


மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் mபொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகள் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.

வர்க்க முரண்பாடு என்பது உழைப்பாளர்மற்றும் அதிகார வர்க்கத்திற்குஇடையிலான வேறுபாடு ஆகும். அது பாட்டாளி வர்கத்தினை சர்வாதிகாரத்தி்ற்கு இட்டுச்செல்லும். இதுவே அவரின் வர்க்க முரண்பாடு.

ஹேகெலின் சிந்தனைகளின் அடிப்படையில் உருவானதுதான்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இது அவரின் வரலாற்று சிந்தனைகளின் வெளிப்பாடு . பலப் பல பிரிவுகளக இருக்கும் மனிதவரலாறு ஒரேஇலக்கை நோக்கி செல்லும் இயல்புடையது.அதீத பாய்ச்சலும், புரட்சியும் எழுச்சியும் இதற்க்கு தேவை என்கிறார்.

ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்துவந்ததுடன், கிறிஸ்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கூறியது ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளப்படுகின்றது.

மெய்யியலில் அவரது பார்வையில், இயற்கை மனித இயல்புகளால் மாறக்கூடியது என்றும் , அதை மாற்றும் திறமையை உழைப்பு என்றும் மாற்றத்தை உழைப்பு சக்தி எனவும் கூறுகிறார்.மனிதனை விடவும் திறமையாக நெய்யும சிலந்தியும், கூடு கட்டும் தேனியும் செய்ய முடியாத காரியம் , செயலை முடிக்கும் முன்னரே மனிதன் தன் கற்ப்பனையில் கட்டி முடித்து விடுவதுதான்.எவ்வளவு எளிதான விளக்கம்.

உலகமே போற்றும் மேதை சொன்னது," நானாக எதுவும் செய்ய வில்லை".ஆடம் ஸ்மித் ,டிவித் ரிக்கார்டோ போன்றோரின் பொருளாதாரத் தாக்கமே தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

பல முறைப் படித்தால் மட்டுமே புரியக்கூடிய ஒரு மேதையின் வாழ்வு அவ்வளவு எளிதாக இல்லை.ஜெர்மனியில் மதம் மாறினால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற சூழலில் மதம் மாறி படிப்பை முடித்தார்.

லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் என்ற பிரபுவின் மகள் ஜெனியுடன் ஏற்ப்பட்ட காதலை அதிகாரத்திற்கு பயந்து ,மறைத்து எட்டு ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார் . காதலின் பரிசான ஏழு குழந்தைகளில் மூன்று இறந்து விட்டன.மனைவி மற்றும் குழந்தைகளின் ஆடம்பர செலவுக்கும் படாத பாடு பட்டார். கடனால் உடைகள் அடகுக்கு போய் விட்டதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்த சூழலும் இருந்தது .

புரட்சிகர எண்ணங்களுடன் மற்றும் அதை சார்ந்தவர்களுடன் தொடர்பும்இருந்ததால் நாடற்றவராகவே தமது இறுதி நாளில் இருந்தார்.

கம்யுனிசம் என்பதன் ஆதாரத்தை சொல்லியவர்க்கே இந்த நிலை.ஆனால் அவர் பெயரைச் சொல்லி வாழ்வோருக்கு நாடே சொந்தம்.நண்பர் ஒருவர் எழுதியிருந்தார், கம்யுனிசம் புரிய முயற்சிக்கிறேன் என்று! அது எளிதுதான்.கம்யூனிஸ்டுகளைத்தான் புரிந்து கொள்ள முடியாது.







3 கருத்துகள்:

தராசு சொன்னது…

நல்ல பதிவு,


//கம்யூனிஸ்டுகளைத்தான் புரிந்து கொள்ள முடியாது.//

அவுங்க கம்யூனிஸத்த விட்டு வெளிய வந்து பல காலம் ஆச்சு.

தமிழ் உதயன் சொன்னது…

ஜீவா,

நன்றாக பதிவிட்டு உள்ளிர்கள், கொள்கையை சரியாக புரிந்து கொள்ளாததே இன்ற்று பல பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது... உதாரணமாக இந்தியாவில் ஓடும் நதிகள் இணைப்பு, காஷ்மீர் விவகாரம், ஈழ பிரச்னை எல்லாம்.... உங்கள் பதிவு கம்யூனிசத்தை புரிந்து கொள்ள முதலில் அதை கண்டறிந்த கம்யூனிஸ்ட்களை புரிந்து கொள்ள சொல்லுகிறது...

உங்கள் பன்முக தன்மை மீண்டும் வெளிப்பட்டு உள்ளது...

நன்றி

தமிழ் உதயன்...

பெயரில்லா சொன்னது…

Wow..........carl marx..once again you proved that you are something different. Though my father was a communist, I never tried to understand communism. But from your article above, I got induced my thrust to know more about real communism.
Thanks and my best regards