traffic analytics

வியாழன், 2 ஏப்ரல், 2009

வினைக்கு எதிர் இரக்கம்....



கொஞ்சம் கண்ணோட்டத்தை மாற்றித்தான் பார்ப்போமே! ஒரு விளையாட்டு சானலில் பழைய பாக்கிஸ்தானில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் - பாக்கிஸ்தான் போட்டிகள் ஒளிபரப்பாகியது. கண் கூசும் வெயிலில் பல கிலோ மீட்டர்கள் மக்கள் இல்லை அப்பாவி மக்கள காத்து கிடந்தார்கள். கிரிக்கெட்டை பார்க்க ! தீவிரவாதம் என்னும் பிணம் தின்னும் சாத்திரங்கள் அங்கே ஆட்சி செய்வதால் மக்கள் படும் பாடு.கொடுமை! வறுமை! நாட்டை முன்னேற்றாமல் தன்னை மட்டுமே முன்னேற்றும் அரசியல் வாதிகள்,வேலை இல்லா திண்டாட்டம்.........ஒரு நாட்டின் சீரழிவு நம் கண் முன்னே, இன்னமும் இந்திய துவேஷம் வைத்து அரசியல் செய்யும் கபோதிகள்.
அசாதாரண சூழலில் வாழும் அந்த சராசரி பாக்கிஸ்தானியால் தன் வாழ்வை காப்பாற்றவே யோசிக்க முடியாத நிலை. உயிருக்கும், உடமைக்கும், தன் வீட்டு பெண்களுக்குமே பாதுகாப்பு இலலாத் சூழலில் அவனுக்கு இந்தியாவில் 1000 பேர் செத்தாலும், கோடி பேர் வாழ்ந்தாலும் துக்கப்படவோ கொண்டாடவோ நேரம் இல்லை!
வறுமையின் காரணமாக இந்தியாமேல் ஏவப்படும் அனைவரும் மதம் கொண்ட யானை போல . உயிரை விடுவதை சாதரணமாக நினைக்கும் அளவிற்கு , வாழ்க்கை.குழந்தைகள் உணவை தீவிர வாதத்துடன் பாலும் கலந்து விஷமாக உண்ணும்போது எங்கே அமைதியான வாழ்க்கை வரும்? என்னை பொருத்தவரையில் கோபப்படுவதை விட,பரிதாபப்படலாம்! பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் போல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போல நினைத்துக்கொள்ளலாம்! கண்டிப்பாக அவசர உதவி தேவை படுபவர்கள்தான்....!யாராலும், எவ்வரும் உதவி செய்ய முடிய போவது இல்லை.கடவுளிடம் வேண்டுவதைதான் நம் செய்ய முடியும்!
அடுத்த தாக்குதலுக்கு அவர்கள் தயாராகும்வரை .......வேண்டிக்கொள்ளலாம்!

செவ்வாய், 31 மார்ச், 2009

பொழுது போக்கு இல்லை போக்கும் சேனல்கள்...


நம் பெண்களை எவ்வளவு நாள் இப்படியே வைக்க போகிறார்கள்.ஒரு தலை முறைக்கு முன் உலக அறிவு பெண்ணுக்கு தெரியாது அல்லது தேவை இல்லை என்று எண்ணம் இருந்தது.வெளி இடங்களில் வேலைக்கும் பெண்கள் கொஞ்சம் பேர் அறிவை நன்றாக , ஆண்களுக்கு இணையாக திறமையை வளர்த்துக்கொண்டார்கள் .கொஞ்சம் பேருக்கு பேருக்கு விருமபவிட்டாலும் தானாகவே பல விஷயங்கள் காதில் விழுந்து முன்னேற்றம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் தங்களது அறிவை பெருக்க முயன்ற போது நிறைய புத்தகங்கள் உதவி செய்தன.ஆனால் இப்போது பத்திரிக்கை ,புத்தகமும் படிக்கும் பழக்கம் முற்றிலும் மறந்து போய்,அடுத்த வீட்டு பெண்களுடன் பேசுவதும் குறைந்து போய் (அதனால் வம்புகள் குறைந்தது வேறு விஷயம்) சக மனிதர்களின் தொடர்பை இழந்து முழுவதும் டிவி யில் ஐக்கியமாகி சுயத்தை இழந்து நிற்கிறார்கள்.
பஸ் ,ரயில்,என எல்லா பொது இடங்களிலும் நெடுந்தொடர்கள் பற்றியே பேச்சு...தவறுகள் எங்கே நடக்கின்றன? நெடுந்தொடர்களை தயாரிக்கும் நிர்வாகிகளின் திறமையை நம் பெண்கள் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும்.ராதிகா தேவயானி,குஷ்பூ..................திறமைசாலிகள்.தங்களுக்கு தெரிந்த துறையில் சம்பாதிக்கும் திறமைசாலிகள்.
நமக்கு உள்ள திறமையை என்றாவது பெண்கள்நினைத்து யோசிக்க ஆரம்பித்தால் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் மட்டுமே நடக்கும்.
இப்போது பிரச்சனை யோசிக்க வைப்பது எப்படி என்றுதான்? அதற்கும் ஒரு நெடுந்தொடர் எடுக்க வேண்டி இருக்குமோ?.

அரசியல் நாகரீகம் .......!


தன்னை விட்டு விலகி போனபின் போனவர்கள் பற்றி பேசாமல் இருப்பதுதான் , உடன் இருந்தோர்க்கு நலம். பந்தை சுவற்றில் எறிந்தால் திரும்பவும் வரத்தானே செய்யும். தன்னை பழமை மிக்க தலைவராக, எல்லோரும் மதிக்கும் தலைவராக முன்னிறுத்த முயலும்போது,அரசியல் நாகரீகத்தை முதலில் கடைபிடிக்க வேண்டாமா? ஒருவர் சொல்லித்தான் அடுத்தவரை பற்றி தெரிய வேண்டியது இல்லை.மக்கள் முட்டாள்கள் இல்லை,மீடியாக்களும் சாதரணமாக இல்லை!
நீங்கள் ஒன்றை சொன்னால் எதிர்பவர் ஒன்று சொல்ல, பாதிப்பு என்னவோ உங்களுக்குக்தான். முதலில் சொன்ன உங்கள் வாதம் அடங்கி...... எதிராக வந்த வாதம் நிலைத்து போய் ...தேவையா இதெல்லாம்?
பழயதை மக்கள் நினைக்க ஆரம்பித்தால் நீங்கள் யாராவது மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? புலம்புவதை விடுங்கள்.மக்கள் உள்ளத்தில் நல்லதை அவர்களே எடுத்து கொள்வார்கள்.உள்ள பெயரையும் கெடுத்துக்கொள்ளதீர்கள்.உடன் இருப்பவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்களா தமையிடத்தில்? அனைத்து கட்சிகளிலும் இதுதான் நடக்கிறது? நல்லவர்களை, புத்திசாலிகளை,மனிதாபிமானம் மிக்கவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.அனைத்து தேர்தல்களிலும் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். நடக்கிற காரியமா?

திங்கள், 30 மார்ச், 2009

வாக்களிக்கும் உரிமை மற்றும் கடமை.....



நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? அறிவுபூர்வமான உயர் தட்டு மக்களின் எண்ணம் இது என்ற தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது.
உள்ளது எல்லாம் உயர்வுள்ளல்.... சரிதானே?
தன்னைப்பற்றி மட்டுமே நினைக்கும் மக்களை உயர்ந்தோர் எனலாமா? இவர்களை மண்வெட்டி எடுத்து நிலத்தை வெட்டவா சொல்கிறோம்? ஒட்டு போடுவது அடுத்தவன் சொல்லிதான் போடுவார்களா? பிரச்சனை என்றவுடன் பேனாவும் பேப்பருமாக ஹிந்து வுக்கு எழுதும் அறிவு ஜீவிகள் யோசிக்க வேண்டியது இது!
வெயிலில் வரிசையில் நின்று ஒட்டு போடுபவன் ஏமாளி.ஓட்டு வாங்கி ஜெயித்தவனை பற்றி விமரிசனம் செய்து விட்டு,அவனால் கிடைக்கும் நன்மைகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு, காரியம் சாதிக்க ஜெயித்தவன் காலை பிடித்து காக்கா பிடிக்கும் இந்த மேல் தட்டு எண்ணம் தேவையா?
மேல் தட்டு எண்ணம் என்ற ஒன்றை நாம்தானே உருவாக்கினோம்.சங்க இலக்கியத்தில் எல்லாம் இது இல்லையே! உயர்வான எண்ணம்தான் வேண்டுமே தவிர உயர்வானவர்களின் எண்ணம் வேண்டாமே!
ஒட்டு போடுவது நமக்காகத்தானே தவிர வேறு யாருக்கும் இல்லை.
நான் உழைக்கிறேன்.நான் சாப்பிடுகிறேன்.எதற்கு ஒட்டு போட வேண்டும்?
மிகவும் எதார்த்தமான ஒன்றுதான்.சரி .நாளை பாகிஸ்தானில் இருந்து போர்
வந்தால் ,நீயாக உழைக்கிறாய் சாப்பிடுகிறாய் என விட்டுவிட மாட்டான்.இந்தியன் என்று உன்னயும்தன் அழிப்பான்! அன்று உன்னையும் காக்க இந்த நாடுதான் வரும். நீ ஒட்டு போட்டாலும் இல்லாவிட்டலும்.அன்றும் ஏதோ ஒரு கட்சியின் ஆட்சி நடக்கும்.பெற்ற தாயையும் பிறந்த பொன் நாட்டையும் மறந்தவன் மனிதனே அல்ல.மனிதனாக நடப்போம்.வாக்களியுங்கள்.

ஞாயிறு, 29 மார்ச், 2009

அரசியல் நாகரீகம்....


என தேடிக்கொண்டே இருக்கிறோம். ஒரு தலைவர் பேசி இருக்கிறார். இவர் ஐந்து வருடம் சேலை துவைப்பார், ஐந்து வருடம் வேட்டி துவைப்பார். எனக்கும் அந்த தலைவர் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனாலும் இது சினிமா இல்லை. நமக்கு ஆதரவாளர் தேடுவது தவறு இல்லை. ஆனால் எதிரிகளை தேட வேண்டாமே. மரியாதையை கொடுப்பது தவறு இல்லை என எல்லோரும் புரிந்து செயல் பட்டால் எல்லாருக்கும் நல்லது. அரசியல் வாதிகள் எல்லாரும் மக்களை கவரதானே முயற்சிக்கிறீர்கள். நாகரீகமாக நடங்கள், மற்றவர்களை மதியுங்கள்.

இன்றைய இசை

http://www.youtube.com/watch?v=REElUors1pQ

சனி, 28 மார்ச், 2009

திருட்டு VCD மற்றும் நாமும் .





குற்றம்
பார்த்தவன் மீதா? படைத்தவன் மீதா? தொழிலுக்காக ஒருவன் செய்கிறான் . ஆனாலும் தவறுதான். தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதனால் தன் சக தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்படும் சகல பதிப்புகளும் தெரிந்தவர்கள் தொழில் போட்டியல் திருட்டு விசிடி தயாரித்தால் யாரை குற்றம் சொல்வது. இணைய தளத்தில் புதிய படங்களை வெளியிடுவோர் யார்? பாவப்பட்டவர்கள் இல்லையே!
தடுப்பதற்கு ஒரே வழி .எனக்கு தெரிந்தது. இதனால் ஏற்படும் பாதிப்புக்களை, தொழிலாளர் படும் கஷ்டங்களை, தயாரிப்பாளர் மற்றும் சார்ந்தவர்கள் படும் பாதிப்புகளை மக்களிடம் தெளிவாக கொண்டு செல்லுங்கள்.
மீடியா உங்களுடையது.தெளிவாக சொல்ல வேண்டியதுதானே.காமடி நடிகர்கள் மட்டும் சொன்னால் போதுமா? கதா நாயகனுக்கு பங்கில்லையா?
மேலோட்டமாக சொல்லாதீர்கள்.ஆழமாக சொல்லுங்கள். நம் சினிமா சொல்லி மக்கள் கேட்க மாட்டர்களா? அதனால் ஏற்படும் அழமான பதிப்புகள்,பண பிரச்சனைகள்,அதனால் சினிமாவை சார்ந்த குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புக்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படும் பதிப்புகள் என எடுத்து சொல்லுங்கள்! பலன் கை மேல் தெரியும். எனக்கு ஒரு கண் போனால் உனக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைப்போர் இருக்குவரை இந்த பிரச்சனை தீராது!