திங்கள், 14 ஜனவரி, 2013
தருபவளே தை மகளே ...!
வியாழன், 29 நவம்பர், 2012
வியாழன், 23 டிசம்பர், 2010
நன்றி மதன் சார் ......ப்ளோரா.....!
பத்தாவது படித்துமுடித்த கையோடு திருமணம்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து படிக்கத் தொடக்கி எம்.பி.ஏ.வரை படித்து,சப் ரௌடீன் (டிஎன்பிசி) நேர்காணல் வரை வர முடிந்ததற்கு மதனுக்கு என் ஆத்தமார்த்த நன்றிகள் எப்போதும்.[(ஒ பி ஸி)கோட்டவினால் எனக்கு வேலை கிடைக்காதது வேறு விஷயம்.]
Expree Avenue வில் உங்களிடம் என் மகள் Autograph வாங்கியது எனக்கு ஏற்ப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.நன்றி சொல்ல வழி தெரியவில்லை.ஒரு வேலை மதன் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் .....நான் கொடுத்து வைத்தவள்.
திங்கள், 7 ஜூன், 2010
Detox tea (சுக்கு கஷயம்)
சிம்பிளான ஒரு டிடாக்ஸ் டீ......
இரண்டு டம்ளர் தண்ணீர்
1/2 ஸ்பூன் சுக்கு பொடி
1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் தேன்
1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு.
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சுக்கு,மஞ்சள் பொடி இரண்டையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வின் வடிகட்டி மற்ற இரண்டு விஷயங்களையும் சேர்த்து கலந்து குடிக்க வேண்டியதுதான்....
இவ்வளவு ,இந்த அளவு எழுதும் அளவுக்கு அதில் என்ன விஷேசம்?
DETOX------- டாக்ஸ் என்றாலே விஷம்.டி டாக்ஸ் -- விஷத்தை அகற்றுதல்.நமது உடலின் விஷத்தை,கழிவுகளை அகற்றுதல்.இரத்தத்தில் கலந்துள்ள் மாசுக்களை நீக்குதல்தான் பொருள்.
எத்தனையோ வருடங்களுக்கு முன் நமது முன்னோர்கள் சொன்ன கஷாயம்தான் இது.அதில் மற்றவர்கள் பொருள் மாற்றங்கள்,பெயர் மாற்றங்கள் செய்து மார்க்கெட்டில் விட்டு பணம் பார்க்கிரார்கள்.
இது மட்டுமல்ல சம அளவு வெந்தயம் மற்றும் சோம்பு இரண்டும் கலந்து கொதிக்க வைத்தாலும் அதுவும் விஷத்தை அகற்றும்.இரத்தத்தை சுத்தப் படுத்த வேண்டும் என் நினைப்பவர்கள் குறைந்தது ஒரு லிட்டர் அளவு குடிக்கலாம்.டீக்கு பதிலாக குடிக்கலாம்.
உடம்பைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் இது நல்ல விஷயம்.குறிப்பிட்ட பொருட்கள்தான் என்று இல்லை,உடம்புக்கு நல்லது எனத் தோன்றும் எதையும் இதனுடன் சேர்க்கலாம்.மிளகு,திப்பிலி ,புதினா இன்னும்.......
பால் சேர்க்காமல் சாப்பிட்டால் கூடுதல் பலனும் கிட்டும்.சுத்தப் படுத்துவது என்னும் போது இரத்தத்தில் உள்ள சேதமான செல்களை சுத்தப் படுதுவது,இரத்தக் குழாயில் உள்ள அடைப்புகளை நீக்குவது எல்லாம் சேர்த்துதான்.இது மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.
கழிவுகள் அகற்றப்படும் போது தோல் வியாதிகள் மாறும்,சாதாரணமாக் தோல் வனப்பு கூடும்.மற்ற கழிவுகள் தொல்லை இன்றி வெளியேறும்.இது சிறந்த ஆண்டிஆக்சைடாக செயல் பட்டு செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.
இது
இரண்டு கப் டீ என்பது
1 1/2 கப் ரெட் ஒயின்
12 கப் ஒயிட் ஒயின்
7 கப் ஆரஞ்சு ஜூஸ்---க்கு சமம்.செல்கள் பாதிக்கப் படுவதில் இருந்து பாதுகாப்பது என்பது கேன்சரில் இருந்து பாதுகாப்பது என்பதுதான்.காலையில் குடிப்பது மிகவும் நல்லது.
மற்ற டீ போல இல்லை.மொத்தமாக செய்து காலையிலேயே வைக்கலாம்.நேரம் ஆனால் கெட்டுப் போகாது.நல்லதுதான்.ஃப்ளஸ்க்கில் வைக்கலாம் அல்லது வேண்டும் போது சூடாக்கினால் போதும்.
குடித்து பார்ப்போமே!
சனி, 21 நவம்பர், 2009
திங்கள், 31 ஆகஸ்ட், 2009
மாரடைப்பு ....!தனக்கு தானே முதல் உதவி செய்து கொள்ள ......!

இது மாலை 6.15 தனியாக கரை ஓட்டிக்கொண்டு அன்றய கடினமான நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு அயர்ச்சியுடன் செல்லும்போது…சிக்னலில்
உடனடியாக இதயத்தின் ஆழத்தில் லேஸான வலி (severe pain) ஆரம்பித்து தோள்களில் கைகளில் பரவ ஆரம்பிக்கின்றது.....
மருத்துவமனை இன்னும் சற்று தொலைவில் நிழலாடுகின்றது.செல்ல முடியுமா என்கிற எண்ணம்.....
என்ன செய்யலாம்???
மாரடைப்புக்கான CPR பயிற்சியை நீங்கள் பெற்ற போது அந்த பாழாய்ப் போன பயிற்சியாளர் தனக்கு தானே எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டாரே?!!!
பயப்படாமல் தொடர்ந்து இருமிக்கொண்டே இருங்கள்.ஒவ்வொரு இருமலுக்கும் முன்னர் ஒரு ஆழமான நிலையில் மூச்சை இழுத்து விடவும்.இருமல் ஆழ்ந்து இருக்கட்டும்.ஆழ்ந்து நெஞ்சில் இருந்து கபத்தை வெளியேற்றும் வண்ணம் இருக்கட்டும்.
இந்த முயற்சியை உதவி கிடைக்கும் வரை இரண்டு நொடிகளுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்யவும். அல்லது இதயத்துடிப்பு ஓரளவிற்கு சரியாகும் வரை செய்யவும்.
மரணம் என்பது இதயம் நின்று விடுவதால் மட்டுமே நிகழ்ந்து விட்டதாக கருத முடியாது.இதயம் நின்ற பிறகு 40 நொடிகள் மூளை உயிருடன்தான் இருக்கும்.மூளை செயல் இழந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழுமையாக மரணம் அடைந்ததாக கருதப் படுவான்.இந்த 40 நொடிகளுக்குள் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை உருவாக்கினால் ,மூளை உடனே மரண மடையாது
இதயத்தை செயற்கையாக அழுத்திக் கொடுப்பதால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தம் சரியாக செல்ல ஆரம்பிக்கும்.அதை செய்ய மருத்துவரோஅல்லது cpr பயிற்ச்சி பெற்ற ஒருவரோ இதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்யலாம்.
அவ்வாறு இல்லாத சூழலில் தானாகவே மேற்கண்ட பயிற்சியினை செய்யலாம்.
ஆழமாக மூச்சை இழுப்பதால் ,அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு செல்கின்றது.ஆழ்ந்த இருமல் ,இதயத்தை அழுத்துவதால் ஓரளவிற்கு இரத்த ஓட்டம் மூளைக்கு செல்கின்றது. இருமலால் இதயத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சரியான இதய துடிப்பு மீண்டு வர உதவி செய்யும்.
இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ,அடுத்தவரின் உதவியை அல்லது மருத்துவமனையை உடனடியாக அணுகவும்.
திங்கள், 17 ஆகஸ்ட், 2009
கொஞ்சம் ரிலாக்ஸ்....!
மிகவும் கவர்ந்த பாடகி (பால்குனி பதக்)திரிஷாவை இப்படி பார்த்தது உண்டா?
மனதின் காதலுக்கு வயதில்லை.(ஜக்ஜித் சிங்க்) காதல ,கவிதை,பாடல் இணை பதிவு என எல்லாமே அழகு
ரகாத் பதெ அலிகானின் இசை என்னும் பிரவாகம்
இது எப்படி இருக்கு?உதித்
தாய் மண்ணுக்குசமர்ப்பணம்


