traffic analytics

திங்கள், 14 ஜனவரி, 2013

தருபவளே தை மகளே ...!



தருபவளே தை மகளே....!
செழுமையும் பெருமையும்
செந்தமிழின் இனிமையும்
செறிவுற்ற அறிவையும்
சேர்கின்ற சிறப்பையும் –
தருபவளே தை மகளே – கற்பகத்
தருவெனவே வா மகளே!

மங்கல ஒளியாக
சிந்தையில் தெளிவாக
கங்கையின் செழிப்பாக – எம்
தந்தையர் தந்த வரமாக வா மகளே
வரம் தா மகளே!

கடந்த பாதைகள் படிகளாக
நடக்கும் நாட்கள்  உயர்வாக
எடுக்கும் காரியம் ஜெயமாக
சுடராய்  வாழ்வை ஒளியாக்க – நல்
சுவையாய் சுகமாய் வா மகளே!


கழனிகள் செழிக்க
கற்றவர்கள் சிறக்க-என் நாட்டை
மற்றவர்கள் போற்ற
உற்றவர்கள் வாழ
அளவாக சரியாக
முறையாக - மழையாக வா மகளே
வரம் தா மகளே...!

 

கருத்துகள் இல்லை: