traffic analytics

செவ்வாய், 26 மே, 2009

மாயை...கீதையின் சாரம்


ஸர்வேந்த்ரியக்ணோபாஸம் ஸர்வேந்ரிய விவர் ஜிதம் //
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோ க்த்ரு ச //14



இந்திரியங்கள் அணைத்தின் வாயிலாக ஒளிர்வது,இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது,அனைத்தினையும் பற்றித் தாங்குவது.குணங்களே இல்லாதது எனினும் குணங்களை அனுபவிப்பது:

பல வடிவங்களை காணுதர்க்குப் பகல் வேளை உதவுகின்றது.ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருளை விளக்க உதவுகின்றது.பல பொருட்களின் விளக்கமாக சூரியன் விளங்குகின்றது.மேலும் சூரிய வெளிச்சம் இவ்வடிவங்கள் யாவையும் அற்றது.அவ்வடிவங்களில் அது பற்றற்று இருக்கிறது.ஆத்மா சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாய் இருக்கின்றது.சினிமாத் திரை ஆனது படங்களை எல்லாம் தாங்குகின்றது போல சிதாகாசம் ஜகத்திலுள்ள அணைத்தையும் தாங்குகின்றது.படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திறையினுடைய வர்ணங்கள் அல்ல.ஆனால் அத்தனை வர்ணகளையும் திரை உள்ளபடி விளக்குகின்றது.அங்கணம் முக்குணங்களும் பரமாத்மாவிடத்தும் இல்லை. ஆயினும் குணங்களை எல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.
ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான்.ஒற்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும்.எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும்,நெருப்பைத்தவிர்த்து எரிகின்ற சக்தியையும் சிந்திக்க முடியாது.இன்னும் பாலையும் அதன் நிறத்தையும்,சூரியனையும் அதன் கிரணங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.அது போல குணஸ்வரூபமான ஈஸ்வரைத் தவிர்த்து நிகுன ஸ்வரூபனையும்,நிர்குண ச்வரூபனைத்தவிர்த்து குனச்வரூபனையும் சிந்திக்க முடியாது. ஸ்ரீ.ராமகிருஷ்ணர் .

கருத்துகள் இல்லை: