இதுதான் சமுதாய நோக்கு.....!
வேற்று மாநிலத்தவரை உள்ளே விடக்கூடாது என்கிற வலுவான கோஷமும் , அதை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளும் நிறைந்த மகாராஷ்ட்ராவில் மாராட்டியர்களுக்கான ஒரு திரைப்பபடம்.யாரையும் வசை பாடவும் இல்லை.எதிர்க்கவும் இல்லை.
இதுவரை மராட்டிய திரை வரலாற்றில் இல்லாத அளவில் ,திரை இடப்பட்ட ஒரு வாரத்திற்குள் 15 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளது.ஆடம்பர கண்ணாடி செட்டிங்க்ஸ், ரஹ்மான் மியூசிக்,உயர் ரக தொழில் நுட்ப ஆடம்பரம் ஒப்பனையில் புரட்சி இத்யாதிகள் இல்லாமல் ...........யாரையும் வசை பாடாமல்,கண் சிவக்க வசனம் பேசாமல்,மரத்தை சுற்றாமல்.....தன்னுடைய ,தன் குலத்தின் பெருமையைப் பற்றி மட்டுமே பேசும் ஒரு படம்.
தின்கர் மாருதி அவர்களின் (shivajiraje bhosale boltey) பேசுவது சிவாஜி போஸ்லே ...என்கிறபடம். பிற மாநிலத்தில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்களைப் பார்த்து தாழ்வு மனப் பன்மையில் பொறுமும் ஒரு சாதாரண குடிமகனை ஆற்றுப் படுத்துவதாக படம். காந்தியின் குரல் முன்னா பாய் படத்தில் வருவது போல் , சக்கரவர்த்தி சிவாஜியின் மூலமாக , மகாராஷ்டிர மக்களின் பெருமைகளை உணர வைப்பதுதான் கதை.
பால கங்காதர திலகர் முதல் அம்பேத்கர் ,வீர சாவர்க்கர் என தங்களின் பெறுமைகளை சொல்லி அதில் வெற்றியும் பெறுகிறது.காரணமே இல்லாமல் தோன்றும் தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக இப்படம் அமைகிறது.குஜராத்திகள்,உடுப்பிகள்(தென் இந்தியர்கள்) சிக்குகள்,உ.பி.மக்கள் என அணைவர் மேலும் தேவையில்லாத வெறுப்பில் இருப்பவர்களுக்கு...
"உங்கள் தோல்விகளுக்கு பிறரைக் காரணம் சொல்லாதீர்கள் "
-என உணர்த்தியதே படத்தின் வெற்றியாக கொள்ளப்படுகின்றது.
இந்தப் படத்தைப் பார்த்து இருவர் மனம் மாறினாலும் அதுவே முழு வெற்றி என தயாரிப்பாளர் திரு .மாஞ்சரேக்கர். கதாநாயகன் தின்கர் ஆக சச்சின் கேடேகரும் , சிவாஜியாக மஞ்சரேக்கரும் நடித்திருக்கிறார்கள்.
உயரிய எண்ணங்களுடன் மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்களுக்காக எடுக்கப் பட்ட படமானாலும் எல்லா தரப்பினரும் பார்க்க வேண்டிய படமாகத்தான் இருக்கிறது.இன துவேஷங்களைப் போதிக்காத நல்ல படங்களை எந்த மொழியில் இருந்தாலும் பார்க்கலாமே!

2 கருத்துகள்:
interesting..
முக்கிய படம் போல் தெரிகிறது. இங்கு பார்க்கக் கிடைப்பது அரிது.
கருத்துரையிடுக