traffic analytics

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

காங்கிரஸ் ஒரு சவலைக் குழந்தை.

ஆலன் ஆக்டேவியன் ஹுயும்

பத்திரிகைகள் மீடியாக்கள் என ஒரே பரபரப்பு.மோடி காங்கிரசை 125 வயது கிழவன் என்கிற ரீதியில் சொன்னதாக பெரிய பிரச்சனை .
பாவம் ஏன் அப்படி சொல்ல வேண்டும்.குழந்தை என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே.ஆமாம்!முளை வளர்ச்சியற்ற , சவலைக் குழந்தை.

இத்தனை வருடங்களாக வளரவே முடியாத பாவப்பட்ட குழந்தை.

ஆங்கிலேயனுக்கு சாதகமாக ஆலன் ஆக்டேவியன் ஹுயும் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது., தமது சொத்துக்களைக் காப்பாற்றவே ஆரம்ப கால காங்கிரசில் இணைந்தவர்கள் அதிகம். ஆங்கிலேயரின் செல்லக்குழந்தை.

அதன் பின் அதன் தலைவராக , ஆங்கிலேயனுக்கு சவாலாக இருக்க தகுதியான ஒரே தலைவன் நேதாஜியை விரட்டிய பொறாமைக்குழந்தை.

மக்களை வளரவே விடக்கூடாது என ,1985 வரைக்கும் டி.வி.முதல் பிற விஞ்ஞான முன்னேற்றங்களையும் சாதாரண மக்கள் கண்ணில் இருந்து முழுவதும் மறைத்த கபடக் குழந்தை. (1969-லேயே நிலவில் மனிதன் இறங்கியதை அமெரிக்காவில் பெரும்பான்மையினர் நேரடி ஒளிபரப்பாக பார்த்தனர் என்பது இளைய தலை முறைக்கு ஒரு தகவல்.)

பிற நாட்டிடம் சென்று எங்கள் மக்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் ,நாங்கள் தான அவர்களின் பாவப்பட்ட தலைவர்கள் என சொல்லி நாட்டின் மானத்தை அடகு வைத்த விஷக் குழந்தை.(இப்போதும் நம் நாட்டின் மானத்தை அடகு வைப்பதுதான் சாதனையாக சொல்லப்படுகின்றது.)

சொந்தமாக ஒரு தலைவனைத் தேர்ந்து எடுக்காமல் ...... முடியாமல் ,மொத்தமாக நேரு குடும்பத்திடம் அடகு வைத்த கடன்கார குழந்தை.
அது வேற்று நாட்டிலிருந்து வந்தாலும் கூட, பாவம் காங்கிரஸ்.தலைவனை கூட
சொந்தமாக தேர்ந்து எடுக்க முடியாமல்....ஆனால் நாடு முழுவதும் காங்கிரசில் தலைவர்கள்தான் இருக்கிறார்கள் .தொண்டர்கள் இல்லை.என்ன கொடுமை சரவணன் இது? பரிதாபக் குழந்தை.

ஒருவன் 18 வயதில் முட்டாளாக இருந்தால் 60 வயதில் அறிவாளியாக இருக்க மாட்டான். வயதான முட்டாளாக இருப்பான். ஓஷோ சொன்னது. சரியாகத்தான் இருக்கிறது!

3 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்லாதான் இருக்கின்றது...

பெயரில்லா சொன்னது…

hi you explained in a very simple way waht is Congress. 125 years old congress nothing but a savalai kuzhanthai..... wow. Modi is 100% wrong.... you are realy great...

தராசு சொன்னது…

//ஒருவன் 18 வயதில் முட்டாளாக இருந்தால் 60 வயதில் அறிவாளியாக இருக்க மாட்டான். வயதான முட்டாளாக இருப்பான். ஓஷோ சொன்னது. சரியாகத்தான் இருக்கிறது!//

உண்மை