புதன், 15 ஏப்ரல், 2009
ஒரு நிமிடம்......!
மேல் படிப்புக்காக காத்திருக்கும் குழந்தைகளின் பெற்றோகுக்கு. பல லட்ச ரூபாய் சம்பளம்,கப்பலிலும் விமானங்களிலும் வேலை வாய்ப்பு என சில வருடங்களுக்கு முன் மிகப் பிரபலமாக இருந்த ஒரு துறை கேட்ரரிங் எனப்படும் சமயல் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகள்.
அதையும் தத்தமது தகுதியை மீறி படிக்க வைத்த குடும்பங்கள் எனக்கு தெரிந்து ஏராளம். 3 வருட பி.எஸ்.சி.படிப்புக்கு நன்கொடை மற்றும் கட்டணம் என பல லட்சங்கள் செலவழித்த குடும்பங்கள் குறித்தும் அறிந்திருக்கிறோம்.
கடந்த 2-௩ வருடங்களாக அந்த படிப்பை முடிந்த பிள்ளைகளை சந்திக்கும் போது பல விஷயங்கள் மிக நெருடலாக இருந்தது.
பலர் அந்த துறையிலேயே இல்லை. பி.எஸ்.சி.படித்த பிள்ளைகள் எம்.பி.எ.படித்துக்கொண்டிருந்தார்க்கள். பெரும்பாலும் பிள்ளைகள் அந்த துறையில் இல்லை. மிகவும் வருத்தமாக இருந்தது பெற்றோரை நினைத்து. எவ்வளவு பாடு பட்டு சம்பத்தித்த பணத்தை பிள்ளை படித்து முன்னேறட்டும் என இரண்டு மூன்று வருடங்கள் காத்திருந்த பின்னும் குழந்தைகள் மீண்டும் ஒரு கேள்விக்குரியாக, +2 மற்றும் 10 நிலையிலேயே நிற்கும் பொது , பெற்றோரின் நிலையில் ரத்தக் கண்ணீர் தெறிக்கிறது.
சம்பந்தமில்லாத மேற்படிப்பும் பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கிறது. நிறுவனங்கள் சொல்வது எல்லாம் உண்மை.சம்பளம் முதல் எல்லாமே.பின் பிரச்சனை எங்கிருந்து? நமது சமுதாயத்தின் மனநிலையும் காரணம்.முழு முதல் காரணம் அதுதான். ஆண் குழந்தைகளை நாம் வளர்க்கும் விதம், அவர்களுக்கு சமூகத்தில் நாம் கொடுக்கும் முக்கியாயத்துவம்.....
"என் பையன் தண்ணீர் கூட தானாக எடுத்துக் குடிக்க மாட்டான்" என சொல்வதை எங்குமே கேட்கலாம். சமையல் அறைக்குள் நுழைந்தாலே எதோ பாவத்தை செய்ததை போல பேசுவதை கேட்டு இருக்கிறோம். இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். நமது சமூக அமைப்பு அப்படி.
தானாக தண்ணீர் கூட குடிக்காத பிள்ளையை அடுத்தவருக்கு எடுத்து கொடுக்க சொல்லும் போது பிரச்சனை பெரிதாகின்றது. உடனே ஆணாதிக்கம் என முடிச்சு போட வேண்டாம். தன் கணவன் செய்யும் போது ஆணாதிக்கம் என தெரிவது தன் பிள்ளை செய்யும் போது அது ஆணாதிக்கமாக நம் பெண்களுக்கு தெரிவதில்லை.
அதை தொழிலாக நினைக்க முடியாமல் கௌரவப் பிரச்சினையாக நினைக்கும் போது பிரச்சினை ஆகின்றது.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த துறையை தேர்ந்தேடுப்பவர்களுக்கு பயிற்ச்சி நிலையிலேயே வேலை கிடைக்கிறது.அங்கு சம்பளமும் , மரியாதையும் நினைப்பதை விட குறைவாகவே இருக்கிறது.ஒரு வகையில் அதுவும் ஒரு பயிற்ச்சிதான். பின்னால் வாடிக்கையாளர்களை பொறுமையுடன் கையாள அப்பயிற்சி கண்டிப்பாக தேவைதான்.
நமது பிள்ளைகளுக்கு பிரச்சனை அங்கேதான் ஆரம்பம். அதை அனுபவித்த பெற்றோருக்கு தெரியும். சொந்த பந்தங்கள் அதிகம் உள்ள ஊரில் வேலை பார்ப்பது அதைவிட கொடுமை.அதிகம் செலவழித்து , கொடைக்கானல் கிறிஸ்டியன் கல்லூரியில் தனது அழகான ஒரே பையனைப் படிக்க வைத்து பின் அங்கேயே உள்ள ஒரு மிகப் பெரிய ஹோட்டல் ஒன்றில் பயிற்சசியளராக சேர்த்தார் தெரிந்தவர் ஒருவர். சாப்பிடப் போன உறவினர்கள் அவன் காது படவே ஏளனமாக பேச இப்போது எம்.பி.எ.வில்!
இந்த துறையை ரசித்து செய்து இப்போது சௌதியில் இருக்கும் ஒருவரும் இருக்கிறார்.இங்கேயே பயிற்ச்சியில் இருந்து பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்க்கும் சிலரும் இருக்கிறார்கள். சாதித்தவர்கள் என்னவோ மிகக் குறைவுதான்.
பிரச்சனை படிப்பில் இல்லை.நம் பிள்ளைகளின் குணமறிந்து சேர்ப்பது தானே நமக்கும் அவர்களும் நல்லது. தெரிந்த யாரவது பிள்ளைகளைச சேர்க்க முயன்று கொண்டிருந்தால் , கண்டிப்பாக இது குறித்து பேசுங்கள். இது அனுபவத்தின் தொகுப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
ɐɐʎıןןıʎɐɐʌɐɹɐd ¿ǝɯnʞʞnpǝ ɯɐɹǝu ɐƃɐɐ pɐoן ǝƃɐd ɐɐʇʇod ʇǝƃpıʍ ɹɐɐq oǝpıʌ
நல்ல கட்டுரை. நல்ல விதமான பகிர்வு. நன்றி
//தானாக தண்ணீர் கூட குடிக்காத பிள்ளையை அடுத்தவருக்கு எடுத்து கொடுக்க சொல்லும் போது பிரச்சனை பெரிதாகின்றது.
கருத்துரையிடுக