ஓம் எனும் நாதம்தான் உயிரின் ஆதாரம் என எங்கோ படித்த நினைவு.உலகில் ஜீவரசியாக இருப்பதில் இசை மட்டுமே பக்க விளைவுகளற்ற ஒரே நிம்மதி.மேல் தட்டு மக்கள் முதல் எல்லோரும் அடிமையாவது இசையில் மட்டுமே.
முக்தி நிலையை ஞானிகள் பெறலாம்.இல்லறத்திலும் பெறலாம்.ஆனால் எந்த வித நிர்ப்பந்தமும் இன்றி மனதிற்கு பிடித்த இசையை ரசிக்கும் போது கண்டிப்பாகமுக்தி நிலையை அடைய முடியும்.பிடித்த இசை என்பதன் அளவுகோல்தான் என்ன?நாம் இருக்கும் தற்போதைய சூழலை மறக்கவைத்து வேற்று உலகிற்கு அழைத்துச் செல்வதுதான் நல்ல இசை.
அது கர்நாடக இசையானாலும் ராக்.பாப், ஆனாலும்.எதுவும் குறைந்தது இல்லை. கூடியதும் இல்லை.தனக்கு தெரிந்த இசை மட்டுமே உயர்ந்தது என்பது உண்மையான ரசனை மிகுந்த கலைஞனுக்கு அழகு அல்ல.ரசனை இல்லாதவன் கலைஞனே அல்ல.
மெல்லிசைக்கு இணை வேறொன்றும் இல்லைதான்.பாமர மக்களுக்கும் இசையைக்கொண்டு சென்றதற்கு நன்றி சொல்ல வேண்டும.
ஆனால் மற்றவர்களுக்காக தன் ரசனையை மறைத்து போலியான ரசனையை உருவாக்குபவர்க்ளை நினைத்தால் ........! ஒரு சேரிப்பகுதியை கடக்கும் போது திருமண வீட்டில் இருந்து ஒளிபரப்பான "பாடும் போது நான் தென்றல் கற்று..." என சப்தமாக கேட்டது.மாலை வேலை, மெல்லிய கற்று ,ரயில் நிலையத்தில் அது அழகாக ரம்மியமாக இருந்தது.சராசரிக்கும் கீழ் உள்ள மனிதன் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்வதில்லை.போலியான ரசனையும் வாழ்க்கையும் இல்ல.
அதற்கும் மேல் நிலைதான் ......தனக்காக வாழ்வதே இல்லை. அவர்களின் வீட்டு நிகழ்வுகளில் ஒலிபெருக்கியில்.....மிகவும் மெதுவாக பாடும் பாடல் கண்டிப்பாக அங்கு உள்ள எத்தனை பேருக்கு புரியும் அல்லது பிடிக்கும்? அடுத்தவரை பாதிக்காதவகையில் மெதுவாக பாடல் கேட்கிறோம்....நாங்கள் எல்லாம் யாரு.......என்கிற தோரனையை அங்கு பார்க்கலாம்.
இதில் பிடித்த பாடலை கூட பிறருக்ககாக ரசிக்காமல் இருக்கும் சிலரைப் பார்த்திருக்கிறேன். பழைய எம்.ஜி.ஆர்.படப்பாடல்கள் மற்றும் சிவாஜி படப் பாடல்கள் நிறைய பேருக்கு பிடிக்கும்.ஆனால் மற்றவர்களுக்காக (மற்றவர்கள் என்ன நினைத்து விடப் போகிறார்கள்) பிடிக்காதது போல் நடந்து கொள்வார்கள்.ஆனால் இன்றைய தலை முறை உண்மையில் வாழப்பிறந்தவர்கள்.
இசை மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது.உயர்ந்த ரசனை உள்ளவர்கள் என கூறிக்கொள்ளும் நபர்களின் பாஷையில் கிராமத்து ரசனை......இல்லை பட்டிக்காட்டு ரசனை.....அவர்களின் கால் தூசுக்கு நம்மால் வர முடியுமா? தாலாட்டில் ஆரம்பித்து ,உழைப்பின் வழியை மறக்கச் செய்து .......அதுதான் இசை.சாவிலும் இசை. அதுவும் தனக்கு பிடித்த இசை.அடுத்தவன் பெறுமையாக நினைக்கவேண்டும் என்பதற்க்காக அவர்கள் தங்கள் ரசனையை மாற்றிக்கொள்வதே இல்லை.
அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.நாம் வாழ்ந்து கொண்டே சாகிறோம். தனக்கு பிடிக்காத இசையைக் கூட பிறர் பெறுமையாக நினைக்க வேண்டும் என பேசுபவர்களை சந்திக்கும் சூழல் கொடுமையானது.தற்போதைய தலை முறை கொடுத்து வைத்தவர்கள்.இசையில் அபரிமிதமான ஈடுபாடு.இல்லையென்றால் இத்தனை ரேடியோ அலைவரிசைகள் வெற்றி கரமாக இயங்க முடியுமா? அவர்கள் அடுத்தவர்களுக்காக ரசிப்பதில்லை.அது தியாக ராஜர் ஆனாலும் சரி பரயன் ஆடம்ஸ் ஆக இருந்தாலும் சரி அவர்களுக்கு பிடித்தால் சரிதான்.
ஹிந்தி பாடல்கள் அதுவும் பழைய பாடல்கள் ரசிக்கப்படாமல் இருந்ததுண்டா?கிஷோர் குமார் , மொகமத் , முகேஷ் முதல் பஃல்குநிபாதக் ஜக்ஜித் சிங் இன்னும் நூற்றுக்கணக்கனோர்....எவ்வளவு ரசிக்க இருக்கிறது.
கபி கபி கேட்டால் உறுகாதோர் இருக்க முடியுமா? இன்னும் எவ்வளவோ....!
வாழ்க்கை சலிப்பாக,பற்றற்று இருப்பது போல் தோன்றினால் உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். யாருமே தேர்தலுக்கு ஆறுதலுக்கு இல்லை என்பதெல்லாம் நம்மை சுய பட்சதாபத்தில்தான் கொண்டு விடும்.
புத்துணர்ச்சி வேண்டுமானால் பிடித்த இசயைக்கேளுங்கள்...அடுத்தவருக்காக கேட்காதீர்கள் .
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.அது பெரும் சமுத்திரம்.கண்டிப்பாக என்னால் முத்து என்ன ஒரு அணு கூட எடுக்க முடியாது.அதை ரஹ்மான் அல்லது
வேறு யாராவது எடுக்கட்டும்.நம்மால் முடிந்த குட்டையில் இறங்கலாம் தானே?
தனியான வழ்க்கைப்பயணத்தில் இசையை தவிர ஒரு நல்ல தரமான நண்பன் யாராவது இருக்க முடியுமா? தளர்ச்சியான நேரங்களில் யாராலும் தர முடியாத உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இசையை தவிர யாராலும் கொடுக்க முடியாது.
2 கருத்துகள்:
உங்களது கட்டுரை நன்கு அமைந்துள்ளது. ஆழமான கவனிப்போடு எழுதப்பட்ட வரிகள்.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
www.lathananthpakkam.blogspot.com
//புத்துணர்ச்சி வேண்டுமானால் பிடித்த இசயைக்கேளுங்கள்...அடுத்தவருக்காக கேட்காதீர்கள் //.
நல்ல மல்லிகைச் சரம். ஆனால் வார்த்தைகளை சரியாக இணைத்துக் கட்டியிருந்தால் இது ஒர் கதம்பமாயிருக்கும். வார்த்தைக் கோர்வைகளில் கவனம் செலுத்துங்கள் ஜீவா, கதம்பம் மணக்கும்.
அருமையான உணர்வின் வெளிப்பாடு, ரசித்தேன்.
கருத்துரையிடுக