நான் 50 வருடங்களாக பார்த்து வந்த ஒரு கட்சி....பிடிக்கவில்லை என்றாலும் மதிப்பது தவறில்லயே!வயதான முதியோர் நம் வீட்டில் இருந்து அவர்கள் செய்வது பிடிக்கவில்லை என்றாலும் மரியாதையாகதானே சொல்லுவோம்.அதுதானே மரியாதை.
வாக்காளர்களைப் பற்றி பேசுமுன் யோசியுங்கள் தலைவர்களே! பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள் என்று...பணம் வாங்காமல் ஒட்டுப் போட்டவர்கள் பற்றி உங்கள் கணிப்பு என்ன? பணம் வாங்காதவர்கள் எல்லாம் உங்களுக்குதான் ஓட்டு போட்டார்கள் என்றால் மீதம் உள்ள எல்லோரும் பணம் வாங்கியதாகத்தானே அர்த்தம். ஆனால் நாங்கள் யாரும் பணம் வாங்க வில்லையே! எங்களை எந்த கணக்கில் வைப்பீர்கள். நாளைக்கு ஒரு வேளை உங்களை வெற்றி பெற வைக்க எங்களின் வாக்குகள் அதாவது பணம் வாங்காத திருவாளர் பொது ஜனத்தின் வாக்குகள்தான் தேவைப்படும்...உங்களின் கட்சி வாக்குகளின் நிலைதான் இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்குமே? கொஞ்சமும் யோசிக்கமல் ,உங்களின் தோல்வியை ஒத்துக்கொள்ள மனம் இல்லாமல் பேசினால் நாளை யாரிடம் போய் யாசிப்பீர்கள்?
என் தமிழ்நாட்டு வாக்காளர்கள் விலைக்கு போய் விட்டார்கள் என யாருக்கு வெளிப்படுத்துகிறீர்கள்.? நீங்கள் செய்யும் விணைகள் பூமராங் போல உங்களுக்கே திரும்பி வரும். அடுத்த தேர்தலிலும் நீங்கள் எங்களைத்தான் தேடி வர வேண்டி இருக்கும்.எங்களையே அசிங்கப் படுத்தி விட்டு எங்களிடமே திரும்ப வருவீர்களா?
ஊடகங்களில் பேசுவோர் இந்தக் கருத்தைச் சொல்லுவார்கள் என எதிர்பார்த்தேன்.ஆனால் ஏன் அந்த அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு இது எட்டவில்லை ஏன் எனத் தோன்றவில்லை!
நாங்கள் ரொம்ப சாதரணமானவர்கள்.கொடி பிடிக்க மட்டோம்.கோஷம் போட மாட்டோம்.யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட மட்டோம்.ஆனால் எல்லாவற்றையும் கவனிப்போம்.உங்கள் தலை எழுத்தும் எங்கள் கைகளில்தான்.
தற்போது ஒரு புதிய விஷயம் ஊடகங்களில் தலை தூக்குகிறது..செய்தி வாசிப்பளர்களுக்கு திரு.கருணாநிதி,செல்வி .ஜெயலலிதா என்று சொல்ல வலிக்கிறது.எதோ பக்கத்து வீட்டுக்காரரை கூப்பிடுவதைப் போல..வெட்கக் கேடு...முதலில் மரியாதயை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
யாரையும் ஏன் மரியாதையுடன் கூப்பிடக்கூடாது? உங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உங்களின் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.அது உங்களுக்கும் நல்லது!எங்களுக்கும் நல்லது.