traffic analytics

திங்கள், 29 ஜூன், 2009

DIFFERENT PEOPLE PERSPECTIVE

A clergyman, a doctor and a business consultant were playing golf together one day and were waiting for a particularly slow group ahead. The business consultant exclaimed, "What's with these people? We've been waiting over half and hour! It's a complete disgrace." The doctor agreed, "They're hopeless, I've never seen such a rabble on a golf course." The clergyman spotted the approaching green keeper and asked him what was going on, "What's happening with that group ahead of us? They're surely too slow and useless to be playing, aren't they?" The green keeper replied, "Oh, yes, that's a group of blind fire-fighters. They lost their sight saving our clubhouse from a fire last year, so we always let them play for free anytime." The three golfers fell silent for a moment. The clergyman said, "Oh dear, that's so sad. I shall say some special prayers for them tonight." The doctor added, rather meekly, "That's a good thought. I'll get in touch with an ophthalmic surgeon friend of mine to see if there's anything that can be done for them." After pondering the situation for a few seconds, the business consultant turned to the green keeper and asked, "Why can't they play at night?"

சனி, 13 ஜூன், 2009

நோ அட்வைஸ் ...ஜஸ்ட் .....எ......மெசேஜ் ....

சார்லஸ் ட்ரவ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின் படி ,இதய நோய் வருவதற்க்கான காரணிகளுள் சிகிரட்டிற்க்கும் பங்கு உண்டு என்பதுதான்.கடந்த 12-ம தேதி ,91 -வது மாநாட்டில் நேற்று வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி வெளியிட்ட விஷயங்கள்தான் இது.

என்டோகிரைன் சொசைட்டியின் 91-வது வருடாந்திரக் கூட்டம் வாஷிங்டனில் நடந்த சமயம் வெளி இடப்பட்ட முடிவுகள் இவை . சிகிரெட்டில் உள்ள நிக்கோடின் என்கிற நச்சுப்பொருள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை -சாதரண நிலையில் இருந்து குறைக்கும் தன்மை கொண்டது.சர்க்கரை நோய் பதிக்காத மனிதர்களுக்கு கூட ,இன்சுலின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்க்கு உண்டு.இதய நோயின் தீவிரத்திற்கும் இன்சுலின் மற்றும் க்ளுகோசின் அளவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.



இப் பல்கலைக்கழகத்தின் முதன்மை எந்டொக்ரையாலஜிஸ்ட் திரு தியோதேர் ப்ரீட்மேன் , நிக்கொடினுக்கும் இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார்.கார்டியாவஸ்குலர் நோய்க்கு காரணமான உடல் மெலிந்து போவதற்கு நிக்கொடினும் ஒரு காரணம்தான்.

சோதனையில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக எலி ஒன்றுக்கு ,தினமும் இருவேளை நிக்கோடின் செலுத்தப்பட்டு சோதனை செய்து பார்த்ததில்,உடல் மெலிந்து சாப்பிடும் உணவின் அளவும் குறைத்து போனது.சாதரண நிலையில் இருக்கும் எலிகளை விட மிக மந்தமான செயல் பாடுகள் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இத்துடன் என்று இல்லாமல்,க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் சமன் பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் சாதரணமானவர்களுக்கு இருப்பதை விட ,க்ளுகோஸ்-ன் அளவு சிகிரெட் குடிப்பவர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.இந்த நிலைப் பாடு இதய நோயின் முதல் எதிரி.

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சிகிரெட் குடிப்பவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு.பிற காரணிகளும் இதில் அடிப் படையாக இருப்பதால் இதனை மட்டுமே காரணமாக சொல்ல முடிவதில்லை.

ஆய்வுகளின் முடிவில் எலியின் உடம்பில் சர்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது.நிக்கொடினால் ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு போதுமான மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை என்பதே உண்மை.

கான்ஸரை விட இதய பதிப்புகளால் அமெரிக்காவில் இறப்பவர்கள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன.தொற்றில்ல நோய்கள் பட்டியலில் இதற்க்கு முதலிடம்தான்.ரத்தத்தில் வேகமாக கலந்து,மூளையை எட்ட அது எடுத்துக் கொள்ளும் காலம் வெறும் ஏழு நொடிகள்தான். ஒவ்வொரு சிகிரேட்டிலும் சராசரியாக 1mg நிக்கோடின் உள்ளது.

ஹெராயின் மற்றும் கொகைன் இரண்டிற்கும் சற்றும் குறைவில்லாத பாதிப்புகளை நிக்கோடின் ஏற்ப்படுத்தும். எந்த வகையில் புகையிலை எடுத்துக் கொண்டாலும் பாதிப்பு ஒன்றுதான்.

LD50 அளவுள்ள 50 MG/KG பெருச்சாளிகளுக்கும், 3mg/KG சுண்டெலிகளுக்கும் 40–60 mg (0.5-1.0 mg/kg) மனிதர்களுக்கும் உயிரை எடுக்க போதுமானது.

இன்னும் தகவல்கள் தெரிந்து கொள்ளுங்களேன்.சிகிரெட் குடிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.

புதன், 10 ஜூன், 2009

மரியதைக்குறிய சில விஷயங்கள்....!

நம்மில் இருக்கும், மாற்ற வேண்டிய சில குணங்கள்..... எத்தனை? நீரைக் குறித்து நிறைய கருத்துக்கள்.அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்க வேண்டிய நமது முன்னோர்கள்...!

ஆடி மாதத்தில் பழைய ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட வேண்டும் என்கிற கேவலமான ஒரு முறையினால் நாம் இழந்த பொக்கிஷங்கள் அதிகம். எவ்வளவோ இலக்கிய ஆதாரங்களை இழந்துள்ளோம்.

நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்கின்ற கேவலமான பழமொழி வேறு...!நமது ஊரோடு ஆறு நின்று போவதில்லை.ஆற்றை எந்த ஊரில்
மதிக்
கிறார்கள். அது ஆதாரம் எனத் தெரியாமல்.அல்லது புரியாமல்.

அனைத்துக் கழிவுகளையும் கொட்டும் இடமாக...!வைகைத் தண்ணி குடித்தேன்,காவேரித் தண்ணி குடித்தேன் .....பெருமையாக சொல்லும் எத்தனை பேர் அதன் நலனை யோசித்திருக்கிறோம்?துணி துவைப்பது முதல்,பல் துலக்கி துப்புவது ,வண்டிகளைக் கழுவுவது என சகலவிதமான அழுக்கு விஷயங்களுக்கும் உபயோகப் படுத்துவது ஆற்றைதான்.

அஸ்த்தியைக் கறைப்பது முதல் கடவுளை கறைப்பதுவரை....கொஞ்சம் கூட சிந்திக்க ஏன் மறந்தோம்? இன்றும் கூட சில கிராமங்களில் கழிவறைக் கட்டுவதை கேவலமாக நினைப்போர் இருக்கும் வரை என்ன செய்ய முடியும்?

எந்த ரோட்டில் நம்பி கால் வைக்க முடிகின்றது?ரயில் தண்டவாளத்தின் நிலை,கடவுளே......!மிகவும் கொடுமை.அதை பராமரிப்பது நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.அதை நாமும் சரி, நிர்வாகமும் சரி என்றுதான் சரி செய்வார்களோ?

ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது ,கழிவறையை உபயோகப் படுத்தக் கூடாது என்பது ஏன் என இன்னும் கூட நிறைய படித்த மேதாவிகளுக்கு கூட புரிவதில்லை?

சென்டிரல் ரயில் நிலையத்தில் மிகவும் கொடுமை.பயணிகளால் அல்ல.அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களால்தான் அசிங்கப் படுகின்றது.பூட்டாமல் இருக்கும் கழிவறைகளை அவர்கள் தான் பயன்படுத்தி நாறடிக்கிறார்கள்.

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நிற்கும் ரயில்களின் கதவுகளை (எழும்பூர் போல) பூட்டினால் பெரும் சுகாதாரக் கேட்டினைத் தவிர்க்க முடியும்.லட்சக் கணக்கில் பயணிகள் வரும் இடத்தில் இதைப் பற்றி யாருமே யோசிக்காதது ஆச்சர்யமாக தான் இருக்கிறது?பெரும் வி..பி.க்கள் வரும் இடங்களில் இதுவும் ஓன்று....!

பீச் .....எவ்வளவு அழகான இடம்.அங்கும் கூட நம் மக்களின் வீர தீர பராக்கிரமத்தால் ,உட்கார கூட பயமாக இருக்கிறது.பஸ் ஸ்டாண்டின் நிலை அதை விட.எந்த தூணிலும் கை வைத்து விட முடியாது.தரையிலும் அப்படித்தான்.

கொஞ்சம் யோசனை செய்தால், அணைத்திற்க்கும் காரணம் நம் மக்கள்தான்.அழகாக ,சுத்தமாக ,பளபளப்பாக இருந்த கோயம்பேடு,மாட்டுத்தாவணி நிலைமை மிகவும் மோசம்.

இவ்வளவு வசதியாக நமக்காக , வசதி தருகிறார்களே...அதை பத்திரமாக பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே வருவதில்லையே...?ஏன் இப்படி?

இன்னும் எவ்வளவோ?இதற்க்கு தீர்வே இல்லையா?யார் இதை சரி பண்ண முடியும்?அடிமட்டம் முதல்,மேல் மட்டம் வரை, தன் தேவைத் தீர்ந்தால் போதும்,அடுத்தவனுக்கு இருக்கிறதா? இல்லையா? என யோசிக்காத மனோ பாவம்தான் அடிப்படைக் காரணம்.இதை மற்ற முயல்வது கடினம்தான்.ஆனாலும் கண்டிப்பாக மாற வேண்டிய விஷயம் ,மற்ற வேண்டிய விஷயம் இது ...!

அடிப்படை மக்களுடன் நேரடித் தொடர்புடைய ரசிகர் மன்றங்கள்,அரசியல் கட்சிகள் கொஞ்சம் முயன்றாலே போதும்.இவை அருவருப்பான விஷயங்கள் என புரிய வைத்தலே போதும்.காமெடியன்கள் மட்டும் சொல்லாமல்,கதா நாயகர்களும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி இந்த விஷயங்களைச் சொல்லலாம்.கமலகாஸன் மட்டும் நிறைய சொல்ல முயல்வார்.சில நியதிகளுக்கு உட்பட்டு ,வரம்பு மீராமல் சொல்லும் போது,அடிப்படை மக்களுக்கு,சொல்ல வருவது புரிவதில்லை.

நாமும் இதுபோன்ற மக்களைச் சந்திக்கும் போது,முடிந்த அளவுக்கு புண் படாமல் சொல்லலாம்.அரசியல் கட்சிகள் இதைச் செய்யலாம்.ஆனால் மாநாடு கூட்டும் போது வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்கும் கட்சி ஏதேனும் உண்டா? அவர்களால் ஊர் அசிங்கமாவது நிறைய.....பின் எப்படி அவர்கள் மக்களைத் திருத்துவார்கள்?

நாமாவது முயல்வோமே.....!திருத்துவோம்....!திருந்துவோம்.....!

செவ்வாய், 2 ஜூன், 2009

Positive attitudes, turning problems into opportunities


One day a farmer's donkey fell into a well. The farmer frantically thought what to do as the stricken animal cried out to be rescued. With no obvious solution, the farmer regretfully concluded that as the donkey was old, and as the well needed to be filled in anyway, he should give up the idea of rescuing the beast, and simply fill in the well. Hopefully the poor animal would not suffer too much, he tried to persuade himself. The farmer asked his neighbors help, and before long they all began to shovel earth quickly into the well. When the donkey realized what was happening he wailed and struggled, but then, to everyone's relief, the noise stopped. After a while the farmer looked down into the well and was astonished by what he saw. The donkey was still alive, and progressing towards the top of the well. The donkey had discovered that by shaking off the dirt instead of letting it cover him, he could keep stepping on top of the earth as the level rose. Soon the donkey was able to step up over the edge of the well, and he happily trotted off. Life tends to shovel dirt on top of each of us from time to time. The trick is to shake it off and take a step up.

திங்கள், 1 ஜூன், 2009

எச்சரிக்கை....தள உபயோகிப்பாளருக்கு......

விமான நிலையம் மற்றும் போது இடங்களில் வலை தள உபயோகம் மறுக்க முடியாத ஒன்றாகி விட்டது.











அவ்வாறான நேரங்களில் நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்வாதை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.மேலே படத்தில் கணப் படும் சேமிப்பு கருவி (Storage device)
இணைக்கப் பட்டு இருக்கிறதா என சோதித்து விட்டு பின்னர் உபயோகியுங்கள்.

பெண்கள் தங்களின் பாஸ் வேர்ட் போன்றவற்றை இழக்க நேரிடலாம்.நமது பேங்க் எண்கள்,அலுவலக ரகசியங்கள் போன்றவையும் இதனால் பாதிப்பை ஏற்ப படுத்தும்.

forward மெயில் அனுப்புவது என்பது நிறைய பேருக்கு உள்ள பழக்கம்.அவ்வாறு அனுப்ப வேண்டும் என்றல் முதலில் நமது கம்பியுட்டரில் தரவிறக்கம் செய்து, பின்னர் அனுப்புங்கள்.முடியவில்லை என்றால் யாருக்கும் அனுப்பாதீர்கள்.

எந்த ஒரு பதிவிற்கும்,தேவை இல்லை எனில் சரியான பிறந்த தேதியைத் தராதீர்கள்.

கம்பியுட்டரை விட்டு விலகுமுன் மீண்டும் ஒரு முறை ,தவறாமல் சோதித்துக் கொள்ளுங்கள்.போது இடங்களில் remember me என்பதை எடுத்து விட்டு பின் உபயோகியுங்கள்.

கூகிள் டாக் தனியாக உபயோகிக்கும் போது கண்டிப்பாக log out மட்டும் போதாது.கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பெயரையும் அழிப்பது நல்லது.